Wednesday, July 3, 2013

TODAY"S NEWS

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) - தகவல்கள், அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், கணக்குகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து (மாதிரி கணக்கீட்டுடன்)

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம்  ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் சார்ந்த விளக்கம்.

நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல் இத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர். 
புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.

முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது. மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது.

இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.

பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள் வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இடைநிலை ஆசிரியர் பதவியில்(கீழ்பதவியில்)ஊதிய உயர்வு பெற்றுக்கொண்ட பின்பு உயர்பதவியில் (தொடக்கப்பள்ளி த.ஆ)ஊதிய நிர்ண்யம் செய்தல்  கணக்கீடு


1
01.10.2012 அன்று பெற்று வரும் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
ரூ-17120/                                     ----------------------------------------------- PB-1-5200-20200+2800 G.P+750PP
2
01.10.2012-ஆண்டுநிறை ஊதிய உயர்வு
17120X3%   = ரூ-520/-
3
01.10.2012-ல் ஊதிய உயர்வுக்கு பின் ஊதியம்
ரூ-17640/-                                          ----------------------------------------------- PB-1-5200-20200+2800 G.P+750PP
4
01.10.2012-ல்பதவிஉயர்விற்கு வழங்கப்படும் ஒரு ஊதிய உயர்வு  3% @ 17640X3% =530
ரூ-  530.00
5
தர ஊதிய வித்தியாசம்-4500-2800=
ரூ-  1700.00

6
01.10.2012அன்று தொ.ப.தலைமை ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் மற்றும் ஊதியக்கட்டு
ரூ-19870/-  (15370+4500G.P) -           ----------------------------------------------- PB-2-9300-34800+4500 G.P

ஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி சேர்க்கை: 8ம் தேதி கலந்தாய்வு

"ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆன்-லைன் வழியில் நடக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள, 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பு ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும். 

இந்த பயிற்சியில் சேர, 4,430, மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், மாணவர், 429 பேர்; மாணவியர், 4,001 பேர். கலந்தாய்வில், 17,045 இடங்கள் உள்ளன. மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுவர். 

மாணவர்களுக்கு, விரைவில், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். "ரேங்க்" பட்டியல் மற்றும் மாவட்டங்களில், கலந்தாய்வு நடக்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள், www.tnscert.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள், அதற்கான சான்றிதழ்களையும், கலந்தாய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கையை விட, நான்கு மடங்கு இடங்கள் அதிகமாக இருப்பதால், அனைத்து மாணவ, மாணவியருக்கும், இடம் உறுதி. எனினும், விண்ணப்பித்த மாணவர்களிலேயே, அதிக மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆவற்கும் வாய்ப்பு உள்ளது. 3,000 முதல் 3,500 இடங்கள் வரை பூர்த்தியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 8ம் தேதி - சிறப்பு பிரிவினர் / சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர் /ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர்
ஜூலை 9ம் தேதி - தொழிற்பிரிவு மாணவர்கள்
ஜூலை 10, 11ம் தேதி- கலைப்பிரிவு மாணவர்கள்
ஜூலை 12, 13, 15ம் தேதி - அறிவியல் பிரிவு மாணவர்கள்.

No comments:

Post a Comment