Sunday, July 28, 2013

NEWS

Which number replaces 
the question mark?









இன்னும் சில வருடங்களில் .............இதுவும் நடக்க கூடும்!











எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அதன்படி, தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களும், பொருளாதாரம், மனையியல், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர முடியும்.

இவர்கள் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி), அந்தப் பாடத்தில் பி.எட். படிப்பில் சேர முடியாது. 4 ஆண்டுகளில் இரட்டைப் பட்டப் படிப்பு முடித்தவர்களும் சேர முடியாது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள்.

ஆனால், அவர்களின் முதுநிலைப் பட்டப் படிப்பு மதிப்பெண்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான படிப்புகள்:   
பயன்பாட்டு இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி- இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின் கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், இளநிலை புவியியல் படிப்பின் கீழும், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பற்றிய பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்கள்
பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிக்க வேண்டுமானால், முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட படிப்புகளின்கீழ் பி.எட். படிப்பில் சேர விரும்புவோர், குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறாமல் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியும்.

குறைந்தபட்ச மதிப்பெண் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் முதுநிலை பட்டதாரிகள், மனையியல் படிப்பின்கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப் படிப்பில் முதல் பிரிவில் தமிழைப் படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பி.எட். படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 43 சதவீதமும், ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வித் தகுதியுடையோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண்களும், எம்.பில். பட்டப் படிப்பு முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும்,  பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும் கூடுதல் மதிப்பெண்களாக வழங்கப்படும். அத்துடன் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. (பி அல்லது சி சான்றிதழ்) பெற்றவர்களுக்கும், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கும் மேலும் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். பி.எட். படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

          கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

           ராணுவம், எல்லைபாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் போன்ற பதவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தான் அடிப்படை கல்வித்தகுதியாக உள்ளது. இது போல மாநில அரசின் பல போட்டி தேர்வுகளுக்கு இதே கல்வி தகுதிதான் கோரப்படுகிறது. இப்படிப்பட்ட தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது அதன் உண்மைத்தன்மை சோதனை செய்யப்படுகிறது.

           இதற்காக சான்றிதழ் நகலுடன், வேலை வழங்கும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் கேரள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புகிறது. இவ்வாறு அனுப்பும் கடிதங்களை பரிசீலித்து, சான்றிதழ்களை சரிபார்த்து பதில் அனுப்ப மாத கணக்கில் கால விரயம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை வழங்குதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

              இப்படிப்பட்ட காலவிரயத்தை தவிர்க்கவும், போலி சான்றிதழ்கள் புழக்கத்தில் வருவதை தடுக்கவும் வசதியாக ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக தனி யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவை தயாரிக்கப்பட்டு தேவைப்படும் துறைக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் கேரள தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று சான்றிதழ்களை சரிபார்க்க முடியும்.

               இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கேரள அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு


         அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

             இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
          

No comments:

Post a Comment