Latest Post Continue GO's For KH & BC Head upto 30.06.2013
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
RTI
Thanks To - Computer Instructor, GHSS, Ariyalur District.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
SSA - வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 2013-14ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில், மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனால், கூடுதல் பணிப் பளுவால், டி.ஆர்.பி., அலுவலர்கள் திணறி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.,க்கு அடுத்தபடியாக, அதிகளவில், அரசுப் பணி நியமனங்களை நிரப்பும் பணியை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. வெறும், 20 பணியாளர்களுடன், இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு என, ஒவ்வொரு தேர்வையும், பல லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனால், பணிப் பளு, கடுமையாக அதிகரித்துஉள்ளது. இதற்கு தகுந்தாற்போல், கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மிக முக்கியமான, உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், பல மாதங்களாக, நிரப்பப் படாமல் உள்ளன.
டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளியிடம், உறுப்பினர் - செயலர் பதவி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், டி.இ.டி., தேர்வை, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவதால், அந்தப் பணியை கவனிப்பதற்கு என, தனி இயக்குனர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது.
தொடக்க கல்வித் துறை இயக்குனராக இருந்த சங்கர், டி.இ.டி., இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவரது பணியிடம், ஒரு ஆண்டு வரை என்ற அளவில், ஏற்படுத்தப்பட்டது. பதவிக்காலம் முடிவடைந்தும், மீண்டும் நீட்டிப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கருக்கு, வேறு பணியிடமும் வழங்கவில்லை. இதனால், பல மாதங்களாக, அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டி.இ.டி., இயக்குனர் இல்லாததால், அவரது பணியைக் கவனிக்க, இணை இயக்குனர் நிலையில், புதிய பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, அதன் இணை இயக்குனராக தங்கமாரி, பணி புரிந்து வருகிறார். இவர், ஏற்கனவே, தேர்வுத் துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். டி.ஆர்.பி., பணியிடம், கூடுதலாக தரப்பட்டுள்ளது.
இரு துறைகளிலும், கடுமையான பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை, இணை இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது. வரும், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு என, அடுத்தடுத்து பல்வேறு தேர்வுகள் நடைபெற இருப்பதால், டி.ஆர்.பி., பணிப் பளு அதிகரித்துள்ளது.
மிக முக்கியமான ஒரு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூளையைத் தூங்க விடாதீர்கள்!
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள். இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள். இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம். புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்
இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை, www.tn.gov.in என்ற, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல், பெரிய பள்ளிகளுக்கு, அதிகளவிலும், சிறிய பள்ளிகளுக்கு, குறைவனான கட்டணங்களையும், கட்டண நிர்ணய குழு, நிர்ணயித்துள்ளது. பெற்றோர், தமிழக அரசு இணைய தளத்தின் மூலம், புதிய கட்டண விவரங்களை அறியலாம்.மேலும், புதிய கட்டண விவரங்களை, அறிவிப்பு பலகையில், பள்ளி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும் என, கட்டண குழு உத்தரவிட்டுள்ளது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மொபைல் போன் மூலம் இளங்கலை தேர்வு முடிவுகளை அறிய, Result என டைப் செய்து இடைவெளி விட்டு, UNOMUG என டைப் செய்து இடைவெளி விட்டு, பதிவு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 750 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், ஒவ்வொரு பாடத்திற்கும், தலா, 200 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐந்து பருவ தேர்வுகளிலும், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆறாவது பருவ தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்திருந்தால், உடனடி தேர்வை எழுதலாம். தேர்வு எழுத விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், 300 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து ஜூலை, 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை, 27ம் தேதி, சென்னை, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி பெண்கள் கல்லூரியில், உடனடி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுதவுள்ள மாணவர், ஹால் டிக்கெட்டுகளை, வரும் ஜூலை, 25ம் தேதி, பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு மற்றும் உடனடி தேர்வுக்கான விண்ணப்பங்களை, www.unom.ac.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்
சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.
இதையடுத்து, தங்களின், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள, மாணவர்கள் இணைய தளத்தை தொடர்பு கொண்டனர். இருந்தும் நேற்று இரவு வரை, பல்கலைக்கழக இணைய தளம் முடங்கியே இருந்தது. இதனால் மாணவர்கள் பரிதவித்தனர்.
இதுகுறித்து, மாணவி ஒருவர் கூறுகையில், "நான் பிளஸ் 2வில், 786 மதிப்பெண் பெற்று, ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். இதுவரை, எனக்கு அழைப்பு கடிதமும் கிடைக்கவில்லை. இடம் கிடைக்குமா என்பதை, இணைய தளம் மூலமும் அறிய முடியவில்லை" என்றார்.
இதுகுறித்து, சட்ட பல்கலைக்கழகத்தினர் கூறுகையில், "இணையதளத்தில் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும்" என்றனர்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும், 26ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
|
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Thursday, July 11, 2013
news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment