Wednesday, March 27, 2013



10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்


          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன.

               இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.

          தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.

              சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர்.

                 தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்:

27.3.13 - தமிழ் முதற்தாள்


28.3.13 - தமிழ் இரண்டாம் தாள்


1.4.13 - ஆங்கிலம் முதற்தாள்


2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்


5.4.13 - கணிதம்


8.4.13 - அறிவியல்


12.4.13 - சமூக அறிவியல்


ஊதிய மாற்றம்: மூவர் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரிக்கை

ஊதிய மாற்றம் குறித்து தற்போதைய ஆட்சியில் கிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்

என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். சிதம்பரத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுபோன்று பதவி உயர் பெற்றதும் பென்ஷன் இழந்து நிற்கும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மானியத் தொகையை ரொக்கமாக வழங்குவதை நடைமுறைப்படுத்தக் கூடாது. அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளைத் தவிர்க்க பொதுவிநியோகத் திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் நூறு சதவீத கணினிமயமாக்க வேண்டும். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை மேலும் வலுமைப்படுத்தி, விரிவுப்படுத்த வேண்டும். அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களின்றி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடை மூலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

11 சிமென்ட் கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து 2 ஆண்டுகளில் செய்யக் கூடிய உற்பத்தியைக் குறைத்து, தேவையை அதிகரித்து, விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்வதால் மக்கள் கஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசு போட்டியை உறுதி செய்யும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.165 விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு மூட்டை ரூ.330-க்கு விற்கப்படுகிறது.

எனவே ரூ.7200 கோடி நிதியை தண்டம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் கடை மூலம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி விரல் ரேகை, விழித்திரை ஆகியவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாதது ஆச்சரியமாக உள்ளது.

பொதுவிநியோகத் திட்டத்தில் பணியாளர்களை பொறுத்தவரை பொருள்களை இறக்கும்போது போக்குவரத்துக் கட்டணத்தை நிர்வாகமே செலுத்துகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பணியாளர்களிடம் பொருள்கள் இறக்கும்போது மிரட்டி பணம் பெறும் நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 26 ஆயிரம் ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 4 ஆயிரம் கடைகளும் உள்ளன.

இரண்டு வித பணியாளர்களுக்கும் ஒரே பணிதான். ஆனால் நுகர்பொருள் வாணிபக் கழக மூலம் இயங்கும் ரேஷன் கடைப் பணியாளருக்கு ரூ.15 ஆயிரம் அடிப்படை ஊதியம். ஆனால் ரேஷன் கடைப் பணியாளருக்கு ரூ.4500 ஊதியம்தான்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக அரசு அறிவிக்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்- கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் SSLC கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு.


               இன்று (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத் தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
                   அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், பெரும்பாலான மாவட்ட கல்வி அலுவலர்களும் மைய மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவதால் அவர்களை தவிர ஏனைய அலுவலர்கள் SSLC பொதுத் தேர்வு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் கண்காணிக்க அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் முறைகேடுகள் / ஒழுங்கீனச் செயல்கள் நடைபெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை உடனுக்குடன் அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது
பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு
சென்னைப் பல்கலை, தொலை நிலைக்கல்வி: இளநிலை படிப்புக்கு ஏப்ரல் 2க்குள் விண்ணப்பிக்கலாம்

            சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
          பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அபராதக் கட்டணத்துடன் ஏப்ரல் 9ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலை நிலைக் கல்வி நிறுவனத்தின் தகவல் மையங்களிலும்,

              www.ideunom.ac.in என்ற இணையதளத்திலும் விணணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 24ம் தேதி தொடங்குவதாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோடீஸ்வர பிரசாத் கூறியுள்ளார்.

அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு

பிளஸ் 2 பிரதான பாடங்களின் தேர்வுகள் நிறைவு


          கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதான தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
                கடந்த 21ம் தேதி நடைபெற்ற உயிரியல் தேர்வுகளுடன் மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு நேற்று நடைபெற்றது.

               கணினி அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் யாவும் எதிர்பார்த்ததைப் போலவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

              கடைநிலை மாணவரும் தேர்ச்சி அடைந்துவிடக் கூடிய அளவிலேயே வினாத்தாள் இருந்ததாகவும், சராசரி மாணவர்கள் 150 மதிப்பெண்கள் வரை பெற முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதானத் தேர்வுகள் முடிவடைந்துள்ளன. வரும் 27ம் தேதி அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் தேர்வுகளுடன் அனைத்துத் தேர்வுகளும் நிறைவடைகின்றன. கணினி அறிவியல் தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 2 எழுத்துப் பிழைகள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

                ஒரு மதிப்பெண் பிரிவில், "எவை ஒரு மாறியின்' என்று தொடங்கும் வினாவுக்கான விடையில், "வரை எல்லை செயற்குறி' என்பதற்கு பதிலாக, "வரை எல்லை செயற்கூறு' என்றும், 62வது வினாவாக இடம் பெற்றுள்ள "பைரஸி' தொடர்பான வினாவுக்கு, "உரிமை இல்லா' என்று இருப்பதற்குப் பதிலாக, "உரிடை இல்லா' என்றும் எழுத்துப் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

                   இதைத் தொடர்ந்து 27ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தமிழகம், புதுவையில் தொடங்குகின்றன. இத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை சுமார் 12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

                  பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சிபாரிசு
சிறுசேமிப்பு ஆதாயங்கள், சந்தை மதிப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று சியாமளா கோபிநாத் கமிட்டி கடந்த ஆண்டு சிபாரிசு செய்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டு (2013–2014) தொடங்க உள்ளதால், அந்த ஆண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.
வட்டி குறைப்பு
அதன்படி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் பொது சேமநல நிதிக்கான (பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்) வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, வருகிற 1–ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. வருகிற நிதி ஆண்டு முழுவதற்கும் இது பொருந்தும்.பொது சேமநல நிதிக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான (என்.எஸ்.சி.) வட்டி விகிதம், 8.5 சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம், 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றம் இல்லை
அதே சமயத்தில், அஞ்சலகங்களில் ஓராண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட் திட்டங்கள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே 4 சதவீதமாகவும், 8.2 சதவீதமாகவும் நீடிக்கும்.அதுபோல், 5 ஆண்டுகளில் முதிர்வடையும் மாதாந்திர வருவாய் திட்டத்துக்கான வட்டி விகிதத்திலும் (8.4 சதவீதம்) மாற்றம் இல்லை.


TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2012



Results of Departmental Examinations - DECEMBER 2012
(Updated on 25 Mar 2013)
Enter Your Register Number :                                                         
(Enter Your Register Number, Then Press Enter)

TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012




Bulletin No.View/Download
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View/Download
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download

Forms & Proposals





Thanks to Mr. K.Manavalan,
B.T.Asst.,
GHRSS.,
Thokkanampakkam,
Cudalore District.
தியாகம், சேவை செய்வதே ஆசிரியர் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி

           தியாகம் மற்றும் சேவை செய்யும் பணி ஆசிரியர் பணி. ஆகவே, அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்புடன் செய்து சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

            கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் (விசை) மற்றும் ராயல் அக்ரோ டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்ட அளவில் 10 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதனை விருதுகளும், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும் வழங்கும் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

           இதில், விருதுகளை வழங்கி அமைச்சர் கே.சி. வீரமணி மேலும் பேசியதாவது:

              தமிழகத்தைக் கல்வித் துறையில் மிகச் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.

                    அதனால்தான் நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வி அனைவருக்கும் இன்றியைமையாதது. ஆகவே கல்வியை அனைவரும் கற்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார் வீரமணி.

                   விழாவுக்கு விசை இயக்கத்தின் நிறுவனர் அறிவொளி ஆனந்தன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்,
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிபுரிந்த தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதம் கிருஷ்ணன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜுடோ கே.கே. ரத்தினம், ஓய்வு பெற்ற சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டி.எஸ். செல்வராஜன், ஆயுர்வேத வைத்தியர் என். ரமேஷ் நாயுடு, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் சி. சித்ரா, மல்லகுண்டா கிராம கல்விக் குழுத் தலைவர் எம்.கே. ராஜா, குடியாத்தம் அரிசி வியாபாரி டி. ராஜேந்திரன், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் கே.பி. அர்ஜுனன், நகைத் தொழிலாளி சி.எஸ். தேவன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

DPI OFFICE SHIFTED

           சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 7 அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம்.


              கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
         பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

                      சம்பத் மாளிகை: ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வளாகத்தில், மிகப் பெரிய கட்டடமாக, சம்பத் மாளிகை கட்டடம் உள்ளது. இது, 10 தளங்களைக் கொண்டதாகும். 1985ல், அப்போதையமுதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பந்த், திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடம் கட்டி, 23 ஆண்டுகள் தான் ஆகின்றன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநூல் கழகம், மத்திய அரசின், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம், சி.பி.ஐ.,-கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடம், இடிப்பு பட்டியலில் உள்ளது.

               பள்ளிக் கல்வி இயக்குனரகம்: இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடத்தைப்போல் பிரதிபலிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகமும், இடிக்கப்படுகிறது. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் இந்த கட்டடம் வலுவாகவே உள்ளது. மேலும், இந்த கட்டடம், தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேய அரசு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில், கல்விக்கென தனி இயக்குனரகத்தை கட்டியது. டி.பி.ஐ., (Directorate of Public Instruction) அதிகாரிகளாக, 1854ல் இருந்து, பல பேர் பதவி வகித்துள்ளனர். இதற்கான பெயர் பட்டியலும், அலுவலகத்திற்கு வெளியே உள்ளது.

               எஸ்.எஸ்.ஏ., கட்டடம்: கூவம் ஆற்றை ஒட்டியுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக கட்டடம், 2000த்திற்கு முன்பு கட்டப்பட்டது. வெறும் 13 ஆண்டுகள் ஆன இந்த கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

                      அறிவுசார் பூங்கா: தேர்வுத் துறை வளாகத்தில், முந்தைய, தி.மு.க., அரசில், புதிய கூடுதல் கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடமும், இடிப்பு பட்டியலில் உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து கட்டடங்களை தவிர, மற்ற அனைத்து கட்டடங்களையும், விரைவில் தரை மட்டமாக்கி விட்டு, அனைத்து துறை அலுவலகங்களை உள்ளடக்கி, "ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா" கட்டடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.

               அலுவலகங்களை தேடி: புது கட்டடத்தை கட்டுவதில், அரசு வேகம் காட்டுவதால், அனைத்து துறை அதிகாரிகளும், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்குமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

                      இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கட்டடங்கள், நன்றாகவே உள்ளன. ஆனாலும், சில கட்டடங்களை தவிர, மற்ற அனைத்தும் இடிக்கப்பட உள்ளன. தற்காலிகமாக, வேறு இடங்களை, வாடகைக்கு பார்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப, கட்டடங்கள் கிடைக்குமா என்பது, சந்தேகம் தான். ஆவணங்கள் அனைத்தையும், புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

                    
இடிக்கப்படும் கட்டடங்கள்

1. பள்ளிக்கல்வி இயக்ககம்
2. சம்பத் மாளிகை
3. மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
4. தேர்வுத்துறை இயக்குனரகம்
5. எஸ்.எஸ்.ஏ., இயக்குனரக கட்டடம்
6. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
7. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

                  புது கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? கடந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வித்துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா கட்டடம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோட்டூர்புரம் நூலகமும்,  இந்த கட்டடத்தில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

          டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின்  முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.

            கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் காணலாம்.


பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?

              "பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

            தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி தொடங்கி நாளை முடிகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகள் நாளை துவங்கி, வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது.

              கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவியர்களை அழைத்து, குறிப்பிட்ட நாட்களை அனுசரிக்கும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தனியார் பள்ளிகள், அவர்களது மாணவ, மாணவியர்களை பெரும்பாலும், விழிப்புணர்வு பேரணிக்கு அனுப்புவதில்லை.

               கல்வித்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், இதை கண்டு கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட, பேரணிக்காக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைக்கும் கொடுமை, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே, அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவில் இல்லை.

                    இந்நிலையில், பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலை யில், கடந்த வாரம் கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்த, உலக வனநாள் விழா மற்றும் கருத்தரங்கிற்காக மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, உலக காசநோய் விழிப் புணர்வு பேரணிக்காக தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

                தேர்வுகள் நெருங்கும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாண விகளை விழிப்புணர்வு பேரணிக்காக வரவழைத்து, முக்கிய விருந்தினர்கள் வரும் வரை பல மணி நேரம் காக்க வைத்து, கோடை வெயிலில் நடக்க வைத்து அலைகழிக்கப் படுகின்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் மாணவ, மாணவி யர்களின் கல்வித்திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது.

                    எனவே, பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தும் வகையில், அவர்கள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்த தற்காலிகமாக தடை விதிக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு

         அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.
              இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

          ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன.

நான் எந்தப் பிரிவை தேர்ந்தெட

No comments:

Post a Comment