Friday, March 8, 2013


ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பாசிரியர்களுக்கு, ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பயிற்சி முகாமில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய நிறுவனம் மற்றும் சித்தர் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய பயிற்சி முகாமில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலையில் நடந்தது. இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நீரதா, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு குறித்து பயிற்சிகளை அளித்தார்.

பயிற்சியில் திருப்பூர், கோவை, நாமக்கல், திண்டுக்கல், திருவாரூரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த, 55 சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.ஆர்.சி., மையத்தின் பயிற்சியாளர் ராஜேஷ், பேச்சுமொழி ஆய்வாளர் பிரியதர்சினி, சித்தர் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சேதுலிங்கன், ஒருங்கிணைப்பாளர் கலா உட்பட பலர் பங்கேற்றனர்.
புரிந்து கொண்டு படித்தால் எளிதாக வெற்றி பெறலாம்
"பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்" என, கலெக்டர் தீபக்குமார் பேசினார்.
தொன்போஸ்கோ வழிகாட்டி மற்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சமுதாய நலப்பணித் திட்டம் (சிஎஸ்எஸ்) இணைந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டும் வகையில், "வெற்றி உறுதி&' நிகழ்ச்சி, வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.புதுச்சேரி தொன் போஸ்கோ வழிகாட்டி மைய இயக்குனர் எட்வர்ட் வரவேற்றார். சென்னை மைய இயக்குனர் ஜோசப் லியோ, தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்தின் கல்விப் பணிகள் மற்றும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினார்.

கலெக்டர் தீபக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி, தேர்வு வைத்து தயார்படுத்தி இருப்பார்கள். அனைவரும் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள். மொழிப்பாடம், அறிவியல் பாடங்களைப் புரிந்து படித்தால் மிகவும் நல்லது. தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை அனுபவித்துப் படிக்க வேண்டும். அறிவியலைப் புரிந்து படிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுங்கள். பின்தங்கிய மாணவர்கள் நன்கு படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்&' என்றார்.

நாவலர் பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ ஆங்கிலப் பாடத்திற்கும், சேலியமேடு வாணிதாசனார் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன் கணிதப் பாடத்திற்கும், பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதிராஜன் அறிவியல் பாடத்திற்கும், சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் திமோத் நன்றி கூறினார்.
விளையாட்டு வீரர், உடற்கல்வி ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் பரிசு

சேலம் மாவட்டத்தில், தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள், சிறந்த வீரர்களை உருவாக்கிய உடற்கல்வி ஆசிரியருக்கு, தமிழக அரசு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று, சிறந்து விளங்கும், இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் விளையாட்டு வீரர்களுக்கு, முதல்வர் மாநில விளையாட்டு விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின்படி, 2012-13ம் ஆண்டு விருதை பெற விரும்புவோர், விருது பெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள், தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனை படைத்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில், அதாவது, உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள், மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், தனி நபர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல், "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு, வரும், 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி"

தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை!!!

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படு
...
GPF Forms ( Full Set for Bill Preparation ) now available in  our site

No comments:

Post a Comment