Saturday, March 30, 2013

கணித அருங்காட்சியகமாக உருமாறுகிறது கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு

                ஈரோடு: ஈரோட்டில் கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு ஈரோட்டில் உள்ளது. இந்த வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்லூரிகள் ஏப்.1-ல் திறப்பு இல்லை?: தள்ளிப்போகிறது பல்கலை தேர்வுகள்

             அரசிடமிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வராததால், கல்லூரிகள் திறப்பது பெரும்பாலும் ஏப்ரல் 1-ம் தேதி இருக்காது என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு

          வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 
                மார்ச் 25ம் தேதி மத்திய அரசின் தீர்மானத்தின்படி, பிபிஎப் வட்டி விகிதம்இப்போதுள்ள 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. 2013,14ம் நிதியாண்டு முழுவதும் இது அமலில் இருக்கும். புதிய வட்டி விகிதம் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டங்களை இயக்கி வரும் வங்கிகள், இதுகுறித்த அறிவிப்பை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?

          நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
 
 
               சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

           உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

          இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

          முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

             சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

                  அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


                       இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

                  என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

                        உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் காலிப்பணியிடங்களில் 2 விழுக்காடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தகுதியுள்ள அமைச்சு பணியாளர்களை கொண்டு நியமனம் செய்தல் சார்பான விவரங்கள் கோருதல்
22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

      பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
 
 
           பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ. சௌந்திரராசன் (பெரம்பூர்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எம். ஆறுமுகம் (வால்பாறை), சு. குணசேகரன் (சிவகங்கை), கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), வி. பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), பி.எல். சுந்தரம் (பவானிசாகர்), காங்கிரஸ் உறுப்பினர்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சர் பேசியது:

            அதிமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

               64,435 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

             43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மேலும் 22,269 ஆசிரியர்கள், 1091 காவல் உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042, கூட்டுறவு வங்கிகளில் 3607, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்தால் 2,159 டாக்டர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

               அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் 43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் அரசின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் முனுசாமி.
தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை

          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
 
 
          தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.

          ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.

           கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

                  தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.

              நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

         கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
 
 
             கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன.

               மத்திய அரசு உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

             காலக்‌கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் அச்சட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளன. கல்வி உரிமை சட்ட விதிகளின்படி போதிய மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம் இருக்க வேண்டும், போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ள வேலை நாட்கள் மற்றும் வேலை நேரம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

                  ஆசிரியர்கள் குறைபாடு: மத்திய அரசு 52 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கி இருந்தும் இன்னும் 11 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் திறமையற்ற, முறையான பயிற்சி இல்லாத 8.6 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்ற ஆசிரியர்கள் மேற்குவங்கத்தில் 1.97 லட்சம் பேரும், பீகாரில் 1.86 லட்சம் பேரும், ஜார்கண்ட்டில் 77,000 பேரும் உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

                       இதே போன்று 94 சதவீதம் பள்ளிகள் குடிநீர் வசதி இல்லாமலும், 64 சதவீதம் பள்ளிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி கழிப்பறை இல்லாமலும் உள்ளன.

               மாநிலங்கள் கோரிக்கை: போதிய வளங்கள் இல்லாததாலும், அரசியல் தலையீடுகளாலும் கல்வி உரிமை சட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாததால் காலக்கெடுவை மேலும் நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தரமற்ற கல்வி இல்லாததால் திறமையற்றவர்கள் வேறுவழியின்றி ஒவ்வொரு ஆண்டும் பணி அமர்த்தப்பட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

              2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஏஎஸ்இஆர் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின்படி, அதிக அளவிலான குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இந்த இலக்கை எட்டி விட்டதாகவும், மத்திய அரசின் சட்டத்தின் படி கட்டுமான தேவைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், 4 முதல் 5 கோடி மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment