Saturday, March 9, 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய முறையில், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கும், இந்திய வனப்பணிக்கும் (ஐ.எப்.எஸ்.) சேர்த்து பொதுவாக ஒரே முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இந்த புதிய தேர்வுமுறை நடப்பு ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் 26–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 4–ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது


ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்!
 
           படிப்பு சுமையாகிவிட்ட இக்காலத்தில், அதைச் சுவையாக்குவது எப்படி? என்று யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தைக்கு 3 வயது எப்போது ஆகும் என்று காத்திருக்கும் பெற்றோர், எங்கேயாவது பள்ளியில் தள்ளி விட்டு விட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் காலம் இது. எனவே  குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அத்தனைக்கும் பொறுப்பு, பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்தாம்.

             ""ஆசிரியர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் மாணவர்களிடம் பழகும்போது ஒரு தாயைப் போல நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுக்குள் உள்ள தாய்மை வெளி வர வேண்டும்'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா. சென்னை யானை கவுனி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் அவரின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக உள்ளது:
             ""இப்போது ஒரு வகுப்பில் 60 - 70 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு வேலைச் சுமை கூடிவிடுகிறது. மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டிய கட்டாயம். ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக செயல்பட நேரிடுகிறது. ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாகக் கவனிக்க நேரமில்லை.
                இருந்தாலும் இந்தச் சூழ்நிலையிலும் கூட மாணவனை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு இருக்கவே செய்கிறது. பிற வேலைகளைப் போல ஆசிரியர் வேலையை நினைக்க முடியாது. ஏனென்றால் ஆசிரியர்கள் வேலை செய்வது உயிருள்ள குழந்தைகளிடம்.
              முதலில் கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகளிடம் குழந்தைகள் கதைகள் கேட்டார்கள். தங்களுடைய மனதில் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இப்போது வீட்டில் தாத்தா, பாட்டிகள் இல்லை. தனிக்குடித்தனமாகிவிட்டது.  அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில்,  குழந்தைகளுடன் அவர்களால் நன்கு பழக முடியவில்லை. குழந்தைகளின் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள யாரும் விரும்புவதுமில்லை. அதற்கு நேரமும் இல்லை. குழந்தைகளிடம் உள்ள குழந்தைமை இப்போது தொலைந்து போய்விட்டது. எனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள்தாம் குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஆசிரியர்கள் அம்மாவாக மாற வேண்டியிருக்கிறது. 
             என்னைப் பொறுத்தவரையில் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன். குழந்தைகளிடம் எதையும் கண்டிப்பாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  எனவே ஆசிரியர்கள் குழந்தைகளின் மனது தெரிந்து பழக வேண்டும்.
            நான் என் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். வகுப்பறையில் குப்பைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பேன். மாணவர்கள் குப்பை போட்டால்,  ஏன் குப்பை போட்டீர்கள்? என்று அவர்களைத் திட்டமாட்டேன். நானே வகுப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். அதைப் பார்க்கும் மாணவர்கள் அடுத்தமுறை நான் சொல்லாமலேயே அவர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். 
               மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று எல்லாரும் இப்போது வற்புறுத்துகிறோம். எதிர்பார்க்கிறோம். ஆசிரியர் மாணவர்களைக் கசக்கிப் பிழிந்து நல்ல மார்க் எடுக்க வைக்க முடியாது. ஆசிரியரைப் பிடித்தால்தான் மாணவர்களுக்கு சப்ஜெக்ட் பிடிக்கும். அப்போதுதான் நல்ல மார்க் எடுப்பார்கள்.
பெரியவர்களுக்கு இருக்கும் ஆயிரம் டென்ஷன்களைப் போலவே குழந்தைகளுக்கும் இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் மன உணர்வுகளைப் பெரியவர்களாகிய நாம், புறக்கணித்துவிடுகிறோம். ஓர் ஆசிரியர் தனது மாணவர்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொண்டு, அன்பாகப் பேசினால் மாணவர்களை நன்றாகப் படிக்கும்படி செய்ய முடியும். அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும். 
             என்னிடம் பயிலும் மாணவர்களில் பலர் ஏழைகள். ஏன் ஹோம் ஒர்க் முடிக்கவில்லை என்று அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வேன். அவர்கள் சொல்லும் பதில்களைக் கேட்டால் சில நேரங்களில் அதிர்ச்சியாக இருக்கும். அப்பா இல்லாத குழந்தைகள். குடித்துவிட்டு வீட்டில்  ரகளை செய்யும் அப்பாக்கள். கூலி வேலை செய்யும் அம்மா.  உணவுக்குக் கூட வழியில்லாத சூழ்நிலை உள்ள குழந்தைகள் என  அவர்களின் சூழ்நிலைகளைத் தெரிந்து கொண்டால், எப்படி ஹோம் வொர்க் செய்யாததற்காக அவர்களைத் தண்டிக்க முடியும்?
           இந்தச் சூழ்நிலையில் வளரும் சில மாணவர்கள் 16 வயதுக்குள்ளாகவே போதை மருந்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்களுடைய பிரச்னைகளை அன்புடன் பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்பதால் அப்படி ஆகியிருக்கிறார்கள். எனவே நான் என் மாணவர்களிடம் ஓர் அம்மாவைப் போல அன்பாக நடந்து கொள்கிறேன். அவர்களும் என்னிடம் மிக அன்பாக நடந்து கொள்வதுடன், அவர்களுடைய குறைகளையும் திருத்திக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கிறார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்.
            ஏழை மாணவர்களின் பிரச்னைகளை  எல்லாம் தெரிந்து கொண்டதால், ஏழை மாணவர்களுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும்வகையில் "கோல்டு ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். என்னிடம் படித்த மாணவர்கள் பலர் என்னுடன் இணைந்து செயல்படுகிறார்கள். 
                 குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் மூலமாகக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம். சென்னையில் கொருக்குப்பேட்டை, யானைக் கவுனி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறோம். 
               சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பண்டிகைகளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம். "தித்திக்கும் தீபாவளி' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.  தீபாவளியன்று அந்தக் குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து, நம் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்படி தீபாவளியன்று மகிழ்ச்சியாக இருப்பார்களோ, அதைப் போல அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப் போட்டி என பல போட்டிகளை வைக்கிறோம். என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது இதைத்தான்:  அன்பு என்ற ஒன்றைத் தவிர, குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்க வேறு எந்த வழிகளும் இல்லை'' என்கிறார் ஸ்ரீ ப்ரியா
6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம்

          6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை  SCERT மற்றும்  SSA இணைந்து அளிக்க திட்டம் ..

ஆங்கிலத்தில் உள்ள 
L - Listening
S - Speaking
R - Reading
W - Writing ஆகிய திறன்கள் பல்வேறு பயிற்சிகள் மூலம் கையேடு வாயிலாக பல உபகரணங்களின் உதவியோடு ஒரு மாதம் குறைந்தபட்சம் 20 செயல்பாடுகள் வாயிலாக அளிக்கப்பட இருக்கிறது. 
SC/ST மாணவர்கள் - 1000
சிறுபான்மையினர் - 1500
மொத்தம் - 2500 பேர் 
மேலும் இது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்பட்டு வகுப்பு வாரியாக 3 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
டி.இ.டி: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மரம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: உடலியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மாற்றம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஒளியியல் : அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: செல்லின் அமைப்பு: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: காந்தவியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா - விடை

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்

ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது. 

இது தவிர, தேசிய அளவில் 2,80,000 பள்ளிகளில் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 12,46,000 ஆசிரியர்கள் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வே தெரிவிக்கிறது. 2011 -2012 கணக்கின் படி, 10 கோடியே 50 லட்சம் மாணவர்கள் ‘மதிய உணவு திட்டத்தின்’ கீழ் பயனடைகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நான்கு வகை கட்டணம் வலியுறுத்தல்

"அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம், நேற்று மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகள், நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில் திரண்டனர். கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன் திரண்ட அவர்கள், "அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலுவிடம், மனு அளித்தனர்.

சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், ""தற்போது, பல வகைகளில், கட்டணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இதை மாற்றி, 1 முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; 6, 7, 8 வகுப்புகளுக்கு, 20 ஆயிரம்; 9,10 வகுப்புகளுக்கு, 25 ஆயிரம்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார். மனுக்களை பெற்றுக் கொண்ட சிங்காரவேலு, ""சட்டத்திற்கு உட்பட்டு, உரிய கட்டண உயர்வை அளிப்பேன்,'' என, தெரிவித்தார். கட்டண உயர்வு கோரிக்கை மனுவை, கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வனிடமும், பள்ளி நிர்வாகிகள் அளித்தனர்.
பத்திர பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்

பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நில ஆவணங்கள் உள்ளிட்ட, பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர், தமிழக ஆவண எழுத்தர்கள் சட்டத்தின்படி, முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே அமலில் இருந்த வணிக வரித் துறை மற்றும் பதிவுத்துறை சட்டத்தில், திருத்தம் ஏற்படுத்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன், 10ம் வகுப்பு தேர்ச்சியும், 10ம் வகுப்பில் தமிழ் மொழி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை.

 ஆரம்ப காலத்தில், கன்னியாகுமரி, நீலகிரி போன்ற கேரள எல்லை மாவட்டங்களில் உள்ள பலர், மலையாள மொழியை படித்து, மலையாள மொழியில் ஆவணங்களை எழுதி வந்தனர். தமிழில் ஆவணங்கள் எழுதும் பழக்கம் நடைமுறைக்கு வந்த பின், மலையாள மொழியை முதன்மை பாடமாக படித்தாலும், தமிழ் மொழி தேர்வு, கூடுதலாக எழுதி வந்தனர். தற்போது, "உரிமம் பெற விண்ணப்பிப்போர், தமிழ் மொழியை முதல் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ படித்து, 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்., 15க்கு முன், உரிமம் பெற்றோர் அல்லது உரிமம் புதுப்பித்தோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான ஆணை, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது
இயற்பியலில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது சிரமம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், அதிகம் பேர் நூற்றுக்கு நூறு பெறுவது சிரமம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளை விட, இந்தாண்டு கேள்விகள் எளிதாக இருந்தன.

தேர்வு குறித்து திண்டுக்கல் மாணவர்கள், ஆசிரியர் கருத்து.
எஸ்.சிவானி (எஸ்.எம். பி. எம்., மேல்நிலைப்பள்ளி மாணவி, திண்டுக்கல்): கேள்விகள் எளிதாக இருந்தது. எதிர்பார்த்து சென்ற ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் கேள்விகள் வந்திருந்ததால் விடையளிப்பது சுலபமாக இருந்தது. இதனால் நேரம் போதவில்லை என்ற பிரச்னை எழுவில்லை. ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்தன. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்புக்களை படித்திருந்ததால், பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. நிலைமின்னியல், மின்னோட்டவியல், அணு இயற்பியல், அணு கரு இயற்பியல் ஆகியவற்றில் இருந்து அனைத்து மதிப்பெண்களிலும் கேள்விகள் வந்திருந்தது. பள்ளியில் ஏற்கனவே, தொடர் தேர்வு எழுதி பழகியதால் பதில் அளிக்க முடிந்தது.

எஸ்.பூபதி (அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மாணவர், திண்டுக்கல்): ஒரு மதிப்பெண் கேள்விகள், மூன்று மதிப்பெண் கேள்விகளில் சில, சற்று சிரமமாக இருந்தன. இதற்கு பதில் அளித்திருந்தாலும், சரியான விடையா என்ற குழப்பம் உள்ளது. இதில் முழு மதிப்பெண் பெறுவது என்பது அனைவருக்கும் சிரமம் தான். ஐந்து மதிப்பெண் கேள்விகள், 10 மதிப்பெண் பழைய கேள்விகள் வடிவில் கேட்கப்பட்டிருந்ததால் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், இயற்பியலில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது சிரமம். அதே சமயம் அதிக மதிப்பெண் பெற முடியும்.

எஸ்.பாண்டியராஜன் (ஆசிரியர், எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்) கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் எளிதான கேள்வித்தாள் இதுதான். ஒரு மதிப்பெண் கேள்விகள் மாணவர்களுக்கு சிரமமானதாக தோன்றியிருக்கும். நான்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள விதம் மாணவர்களுக்கு புதிதாக இருந்திருக்கும். இதற்கு சற்று யோசித்திருந்தால், அவைகளுக்கும் எளிதில் மாணவர்கள் விடையளித்திருக்க முடியும். மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் திரும்ப, திரும்ப கேட்கும் கேள்விகளாக வந்துள்ளது. இதற்கு மாணவர் எளிதில் பதில்அளித்திருப்பர். படிப்பில் சுமாரான மாணவர் கூட, எதிர்பார்த்து சென்றதைவிட பத்து மதிப்பெண்கள் கூடுதலாக பெறமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம்!

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலும் ஆய்வகப் பணிகள், கணினிப் பணிகள், அலுவலகப் பணிகள் போன்றவை தொய்வில்லாமல் நடைபெறவும், கற்றல் கற்பித்தல் பணிகள் தொய்வின்றி சிறந்து மேலோங்கவும் அனைத்து சென்னை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலும் ஜெனரேட்டர் நிறுவப்படும்.


மாணவர்கள் பள்ளிகளிலேயே, நுண்கலை மற்றும் பண்பாட்டு அறிவைப் பெறும் வகையில், கைவினைக் கலைகள், ஓவியம், வண்ணம் தீட்டுதல், இசைக்கருவி மீட்டல், நடனம் போன்ற பல நுண்கலைகளைக் கற்பிக்கும் வகையில் கலைக் கூடம், 10 பள்ளிகளில் உருவாக்கப்படும்.

உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் மாணவர்கள் சிறந்த அறிவைப் பெற்றிட 15 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம் அமைக்கப்படும். இந்த ஆங்கில ஆய்வகங்களின் மூலம் மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆங்கிலத்தில் எழுதும் திறன் மேம்படுத்தும் பயிற்சி ஆகியன அளிக்கப்படும்.

6 முதல் 10-ம் வகுப்பு வரைப் பயிலக்கூடிய அனைத்து சென்னை உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் கணினி அறிவை வளர்த்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வண்ணச் சீருடைகளும், காலணிகளும் வழங்கப்பட உள்ளன. அவை சின்னஞ் சிறார்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்.

மாணவர்களுக்குக் கலை, கலாச்சாரத்தை ஒருங்கிணைத்த அனுபவத்தை அளித்திட, கலை நயமிக்க பல்வேறு குடும்பங்களின் இருப்பிடத்தை நினைவு படுத்தக் கூடிய தட்சன் சித்ரா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் சென்னைப் பள்ளிகளில் 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் அங்கேயே தங்கி நமது கலைகளையும், கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய கனவுப் பட்டறைகளாக விளங்கும் வகையில் 30 உறைவிட முகாம்கள் நடத்தப்படும்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இயங்கக் கூடிய 30 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் உடல் மற்றும் மன உறுதியை உண்டாக்கும் வகையில் இயற்கைச் சூழலுடன் கூடிய, விளையாட்டு உபகரணங்கள் நிறைந்த விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

இடவசதி உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் புதிதாக கணித ஆய்வகங்கள் உருவாக்கப்படும். மேலும் இட வசதி இல்லாத பள்ளிகளில் இடவசதி செய்து தரப்பட்டு கணித ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்திற்கொண்டு சிறந்த சூழலுடன் கூடிய 10 மழலையர் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும். பள்ளியளவிலேயே இளம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கிட ஒவ்வொரு மண்டலத்திலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மண்டல அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப் பெற்று சிறந்த அறிவியல் படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளியில் நிரந்தர அறிவியல் கண்காட்சியகம் அமைக்கப்படும். நம் தேசிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கவும், மாணவர்களின் உடல் வளத்தைப் பேணி வளர்க்கும் விதத்திலும் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கிடையே கபடி விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். தகுதி வாய்ய்ய்ய்ந்த 10 மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்தில் நீச்சல் பயிற்சி அமைக்கப்படும்.

9 முதல் 12-ம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் களையவும் வளர் இளம் பருவ மாணவியர்கள் எதிர்கொள்ளும் உடல், மனச் சிக்கல்களை அகற்றிடவும் தகுந்த பயிற்சி பெற்ற நலவாழ்வு ஆலோசகர் மண்டலத்திற்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் பள்ளிகளுக்கே சென்று பணிபுரியும் வகையில் நியமிக்கப்படுவார்.

தற்போது 99 சென்னை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆங்கில வழி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்திட பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெற்றோர்களின் விருப்பத்தைக் கருத்திற்கொண்டு 20 சென்னைத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் வகையில் ஒன்றாம் வகுப்புகள் தொடங்கப்படும்.

சென்னைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான மதிப்பெண் தரப் பட்டியலில் இடம்பெற்றிட, தகுதி வாய்ந்த 500 மாணவர்களை, சென்னை உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்து 50 மாணவர்களுக்கு ஒரு மையம் வீதம் 10 மையங்களில் பாடத்தில் நிபுணத்துவம் வாய்ந் தவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment