Friday, March 22, 2013

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?


            இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,


பள்ளிக் கல்வித்துறை

இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் கல்வியாண்டில், 381 கோடி ரூபாய் வரையிலான பணப் பயனை 24.76 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள்.

         பள்ளிகளுக்கான, கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் போன்ற பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கும் பணி, அனைவருக்கும் கல்வித்திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம் மற்றும் நபார்டு வங்கி நிதியுதவி ஆகியவற்றின் மூலம், தொடர்ந்து நடைபெறும்.
இந்த 2013-14ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 700 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு 366.57 கோடி ரூபாயும், நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு 293 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

            பள்ளிகளுக்கு, கூடுதல் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2013-14 கல்வியாண்டின் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 100% பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கழிப்பறை வசதிகளும் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.

விரிவான ஒதுக்கீட்டு விபரங்கள்

97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க 217.22 கோடி ஒதுக்கீடு.
86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க 110.96 கோடி ஒதுக்கீடு.
14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க 323.70 கோடி ஒதுக்கீடு.
53.53 லட்சம் மாணவர்களுக்கு, நான்கு சீருடை தொகுப்புகள் வழங்க 353.22 கோடி ஒதுக்கீடு.
13 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் புத்தக பைகள் வழங்க 19.79 கோடி ஒதுக்கீடு.
6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க 8.47 கோடி ஒதுக்கீடு
9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபட புத்தகங்கள் போன்றவை வழங்க 6.65 கோடி ஒதுக்கீடு.
6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 200.98 கோடி ஒதுக்கீடு.
மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ஒதுக்கீடு.
32.79 லட்சம் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு

புதிதாக 10 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளையும், 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கல்வியாண்டில்(2013-14), இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் துவங்கும்.  ஏற்கனவே அறிவித்தபடி, கூடுதலாக, மாநிலத்தில், 8 கலை-அறிவியல் கல்லூரிகள், இக்கல்வியாண்டு முதல் செயல்படத் துவங்கும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தை அளிக்கும் திட்டத்திற்கு, இக்கல்வியாண்டில், 673 கோடி ஒதுக்கீடு.
இக்கல்வியாண்டில், 5.65 இலவச மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக, 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்காக, இக்கல்வியாண்டில், 112.50 கோடி ஒதுக்கீடு.

மதிய உணவுத்திட்டம்

இக்கல்வியாண்டில், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவிற்கு, 1,492.86 கோடி ஒதுக்கீடு.
மேலும், 14,130 மதிய உணவு மையங்களில், 359.70 கோடி செலவில், சமையலறை, இருப்பு அறைக்கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம், இக்கல்வியாண்டில், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்வியாண்டில், ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.


          தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 26.03.2013 அன்று   தொடக்கக் கல்விஇயக்ககத்தில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது அளிக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு




முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு

          யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும்
என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
          திருத்தங்களுக்கு எதிர்ப்பு :@@ சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும் எனவும், இலக்கியம் தொடர்பான தேர்வுகள் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுத வேண்டும் எனவும் யூ.பி.எஸ்.சி., தனது தேர்வு விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்தது. இலக்கிய தேர்வுகள், தேர்வாளர்கள் தங்களின் பட்டப்படிப்பின் போது விருப்ப பாடமாக ஆங்கிலத்தை தேர்வு செய்யாதிருந்தாலும் ஆங்கில வழியிலேயே எழுத வேண்டும் என தெரிவித்திருந்தது.புதிய அறிவிப்பு : பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்த தனது திருத்தங்களை திரும்பப் பெற்ற யூ.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
 
 
                உயர் சேவை பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய அரசு வேலைகளுக்களுக்கு தகுதி பட்டியலில் தேர்தெடுக்கப்பட்டவர்களின் ஆங்கில தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; கட்டுரை தேர்வுகளின் அதிகபட்ச மதிப்பெண்கள் 200ல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; முதன்மை தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 1750 ஆக ஆக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 4 தேர்வுகளில் பொது தேர்வு 1000 மதிப்பெண்களுக்கும், 2 விருப்பப்பாட தேர்வுகள் 500 மதிப்பெண்களுக்கும், கட்டுரை தேர்வுகள் 250 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட உள்ளது; ஆங்கில தேர்வுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. திருத்தங்களின் அடிப்படையிலான புதிய விதிமுறைகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
 
                      பார்லிமென்டின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்த புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், புதிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.


         2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. 

             மேற்காணும் விவரங்களை உரிய படிவத்தில் 22.03.2013க்குள் இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!

          நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித் தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.


        பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தற்போது முடியும் தருவாயை அடைந்துள்ளன. பொதுத்தேர்வையடுத்து, அதைவிட பெரிய சவாலாக, நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. தங்களின் விருப்பமான கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்க, மாணவர்கள், நுழைவுத்தேர்வுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அத்தகைய நுழைவுத்தேர்வுகளை வெற்றிகரமாக எழுத, நேர அடிப்படையிலான

           மாதிரித் தேர்வுகள்(mock tests) மிகவும் உதவிகரமாக திகழ்கின்றன.
ஏனெனில், போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம். எனவே, நேர அடிப்படையிலான மாதிரித் தேர்வுகளே சிறப்பானவை. நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள், சிறப்பாக செயல்படும் வகையில், கல்வியாளர்கள், இலவச ஆன்லைன் தேர்வுகளை உருவாக்கியுள்ளார்கள். இதன்மூலம், ஒரு மாணவருக்கு, நிஜத் தேர்வுகளை எழுதும் உணர்வு கிடைப்பதோடு, அனுபவமும் கிடைக்கிறது.
இத்தகைய ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளின் மூலம் கிடைக்கும் பயிற்சியால், ஒரு மாணவர், சிறப்பான வகையில் நிஜத் தேர்வுக்கு தயாராகிறார். இத்தகைய இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை, குறிப்பிட்ட தளத்தில் பதிவுசெய்தவுடன் எழுதலாம்.

          இத்தகைய மாதிரித் தேர்வுகள், பல வகைகளில் நடத்தப்படுகின்றன. CAT, MAT, XAT, IIT - JEE போன்றவை அவற்றுள் முக்கியமானவை. இவைத்தவிர, மருத்துவம், பாதுகாப்பு, அரசுப் பணிகள் உள்ளிட்ட பலவிதமான துறைசார்ந்த நுழைவுத்தேர்வுகளுக்கும், மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நேர கணிப்பு
நீங்கள் மாதிரி ஆன்லைன் தேர்வை எழுதும்போது, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணிக்க முடிகிறது. இதன்மூலம், எந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க, அதிக நேரம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளலாம்.

           தேர்வின் இறுதியில் உங்களுக்கான மதிப்பெண் வழங்கப்படும். இதில் குறைந்த மதிப்பெண்கள் வந்தால் வருந்தக்கூடாது. மாறாக, உங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

                இதுபோன்ற ஆன்லைன் தேர்வுகளின் கேள்விகள், முந்தைய தேர்வுகளின் மாதிரியிலேயே கேட்கப்படும். இதன்மூலம், நிஜத் தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகிறது என்பதை உங்களால் யூகிக்கவும் முடியும்.

              ஆன்லைன் தேர்வை, நீங்கள் எத்தனைமுறை எழுத விரும்புகிறீர்களோ, அத்தனை முறையும் திரும்ப திரும்ப எழுதலாம். இதன்மூலம், உங்களின் நேர மேலாண்மைத் திறன் மேம்படும். மேலும், இத்தகைய தளங்களில், பலவிதமான ஆலோசனைகளும்(counselling) வழங்கப்படுகின்றன. இவைகளின் மூலம், தேர்வு மாதிரிகளை, எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

               தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
  
"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"


          "அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
.

          தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, தேர்வாணையம் நடத்தும், துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால், சீனியாரிட்டிபடி, ஊழியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும்.
துறை தேர்வுகளுக்கான பாடத்திட்டம், 1990ல் மாற்றி அமைக்கப்பட்டது. 
          
         அதன்பின், 22 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மாற்றி அமைத்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது. போட்டித் தேர்வுகளைப் போலவே, துறை தேர்வு பாடத் திட்டங்களும், மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தேர்ச்சி சதவீதம் குறையுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

            இது குறித்து, தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ் கூறியதாவது: ஒவ்வொரு துறைகளிலும், பல மாற்றங்கள், நூற்றுக்கணக்கான புதிய அரசாணைகள், பல்வேறு புதிய திட்டங்கள் என, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுபோன்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு முந்தைய திட்டங்கள், அரசாணைகள் அடிப்படையில், துறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்ததால், தேர்ச்சி சதவீதம், மிகக் குறைவாக, 12 என, இருந்தது. தற்போதைய திட்டங்களுக்கும், மாறுபாடுகளுக்கும் தகுந்தாற் போல், துறைத் தேர்வுகள் அமையாதது தான், தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு காரணம்.

          மாற்றங்களுக்கு ஏற்ப, இப்போது புதிய தேர்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.வணிக வரித்துறையில், "வாட்" அமலுக்கு வந்துவிட்டது. அத்துறையில், பல்வேறு புதிய அரசாணைகள் அமலில் இருக்கின்றன. இவை எல்லாம், புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

                 எனவே, புதிய பாடத் திட்டங்கள் மூலம், அரசு திட்டங்களை, அரசு ஊழியர், ஆசிரியர் நன்கு தெரிந்து கொள்ளவும், தேர்வில், அதிகளவில் தேர்ச்சி பெறவும், தற்போதைய பாடத் திட்டம் வழி வகுக்கும். இவ்வாறு, நடராஜ் கூறினார்.

10 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் : விரைவில் வருகிறது அறிவிப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து முக்கிய முடிவு - நாளிதழ் செய்தி


 
 

உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்


            பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.

        இதில், உயிரியல் மற்றும் வரலாறு பாடங்களில் மட்டும், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 36 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

            இவர்களையும் சேர்த்து, தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் எண்ணிக்கை, 325 ஆக உயர்ந்துள்ளது.




No comments:

Post a Comment