இங்கிலாந்தின் "டைம்ஸ் ஹையர் எஜுகேசன்" என்ற வார இதழ், ஆண்டுதோறும் சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது. 2013ம் ஆண்டுக்கான பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு முதன் முறையாக இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, இந்தியாவுக்கான "டாப்-10" கல்வி நிறுவனங்களின் தர பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது, சர்வதேச கல்வி தரம் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தை பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த பத்து கல்வி நிறுவனங்கள்
1. ஐ.ஐ.எஸ்சி., பெங்களூரு
2. ஐ.ஐ.டி., மும்பை
3. எய்ம்ஸ், டில்லி
4. ஐ.ஐ.டி., கான்பூர்
5. ஐ.ஐ.டி., டில்லி
6. டில்லி பல்கலை, டில்லி
7. ஐ.ஐ.டி., சென்னை
8. ஐ.ஐ.டி., காரக்பூர்
9. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்
10. ஐதராபாத் பல்கலை, ஐதராபாத்
உலகின் சிறந்த பத்து கல்வி நிறுவனங்கள்:
சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக்காவின் ஹாவார்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
1. ஹாவர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா
2. எம்.ஐ.டி., அமெரிக்கா
3. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து
5. கலிபோர்னியா பல்கலைக்கழகம், (பார்க்கலே) அமெரிக்கா
6. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா
7. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
8. கலிபோர்னியா பல்கலைக்கழகம், (லாஸ் ஏஞ்சல்ஸ்) அமெரிக்கா
9. டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
10. யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா
No comments:
Post a Comment