Tuesday, March 19, 2013


மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்

 
             ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர்  மன்மோகன்சிங் அமைச்சரவையில்  முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய  குழு அமைப்பது தற்போதைய  சூழலில்  தேவை  எனவும் அதை நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும்  பாரத பிரதமரை  யூனியன் மினிஸ்டர் அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
CTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

click here to download the CTET Advertisement

click here to Apply Online

Important Dates: 

Starting Date for Online Registration: 15-03-2013.

Closing Date for Online Registration: 16-04-2013.

Last Date for Receipt of Application: 22-04-2013.

Last Date for Receipt of Application (far flung areas): 29-04-2013.

Date of Written Examination: 28-07-2013.

 

 

தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு

             இடை நிலை பள்ளி விடுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் - செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்து கருத்தியல் தேர்விற்கு Online இல் விண்ணப்பிக்க தவறியதால் செய்முறை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு - மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வினை நடத்திட அனைத்து  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

 
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் அனைத்தும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.

             தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி துவங்கியது. தமிழகத்தில் 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


NON DUMMY PAPERS :
முக்கிய தேர்வுகள் அனைத்தும் 21ம் தேதி முடிவடையும் நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வரும் 22ம் தேதி முகாம் அலுவலர்கள் பொறுப்பேற்கின்றனர்.

# C.E மற்றும் S.O தங்கள் பணிகளை 25.03.2013 துவக்குகின்றனர்.

# A.E தங்கள் பணிகளை 26.03.2013 அன்று துவக்குகின்றனர்.

DUMMY PAPERS :
# C.E மற்றும் S.O தங்கள் பணிகளை 28.03.2013 துவக்குகின்றனர்.

# A.E தங்கள் பணிகளை 30.03.2013 அன்று துவக்குகின்றனர்.

மேற்கண்ட தேதிகளில் பணிகளை துவக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

         தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
             இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

                வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன.

                குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

                  இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

                    முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (Objective Type) நடத்தப்படும்.

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

          இலங்கை விவகாரத்தில் கலை, அறிவியல், சட்டம் மற்றும் வேளாண் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

         இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment