Thursday, March 28, 2013


ஆசிரியர்தான் உலகிலேயே மாணவருக்கு மிகச் சிறந்த உந்துதல் தருபவர்.

வரும்...ஆனா...வராது: ஒரு பையன் அவரிடம் வந்து தயங்கித் தயங்கி, எனக்கு நீங்கள் கணக்கு சொல்லித் தர முடியுமா? என்று கேட்டான். என்று அவர் கேட்டதற்கு கணக்கு வராது என்றான் அவன். மறுநாள் அவன் வந்தான். சுவாமிகள் அவனுடைய வகுப்புக் கணக்குகளைப் போடச் சொன்னார். அவன் தப்பு தப்பாகப் போட்டான். தம்பி, தவறாகப் போடுகிறாய்? என்று சுவாமிகள் கேட்டார். சொன்னேனே சுவாமி, எனக்குக் கணக்கு வராது என்று - பையனின் பதில். சுவாமிகள் அவனுக்கு எளிய கணக்குகளாகக் கொடுத்து, வராது என்ற எண்ணத்தை அழித்துவிட்டு வரும் என்பதை மனதில் பதிய வைத்துப் பின் பாடத்தை ஆரம்பித்தார். மாணவனின் மனதில் இது வராது என்ற எண்ணம் பதிந்துவிட்டால் அதை அழிக்க வேண்டியது ஆசிரியரின் வேலை. ஆகவே ஓர் ஆசிரியர்தான் உலகிலேயே மாணவருக்கு மிகச் சிறந்த உந்துதல் தருபவர்.

No comments:

Post a Comment