Tuesday, April 30, 2013


DTEd 2nd Year Exam starts from June 24th    
   2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது 
            தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை,
25–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும்,மேம்படுத்துதலும் –2,
26–ந்தேதி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)–2,இளஞ்சிறார் கல்வி –2,
27–ந்தேதி ஆங்கிலம் மொழிக்கல்வி –2,
28–ந்தேதி கணிதவியல் கல்வி –2
29–ந்தேதி அறிவியல் கல்வி –2,
ஜூலை 1–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –2,
4–ந்தேதி கற்கும் குழந்தை, 5–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்–1,
6–ந்தேதி மொழிக்கல்வி( தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) –1, இளஞ்சிறார் கல்வி –1 8–ந்தேதி ஆங்கில மொழிக்கல்வி –1,
9–ந்தேதி கணிதவியல் கல்வி –1,
10–ந்தேதி அறிவியல் கல்வி –1,
11–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –1 அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கும்.இவ்வாறு தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

         அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

               பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 
 
               அந்த வகையில், வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்த ஒரே வாரத்தில் வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக இலவச பொருட்களை கொள்முதல் செய்யவும் துறை ரீதியாக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

                புத்தக பைகளை பொருத்தவரை மொத்தம் 13 லட்சம் பைகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.19 கோடியே 79 லட்சமாகும். அதேபோல மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகளையும் முதல் வாரத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அட்லஸ்களையும் (உலக வரைபடம்) உடனே கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 11.85 லட்சம் அட்லஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு

                இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

             இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து.             இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவியுயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
2013-14 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?
          நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?'' பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை
''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 32 முதுகலை ஆசிரியர், 6239 + 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 785 BT+5 PG, பணியிடங்களு க்கு ஏப்ரல் 2013 மாத ஊதியம் வழங்க ஆணை

             இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.


           இந்தியாவின் உயர்தர மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,களில் எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த கேட் தேர்வில் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இத்தேர்வு, மொத்தம் 20 நாட்கள் நடத்தப்படுகிறது.

               இத்தேர்வுக்கான வவுச்சர்கள்(vouchers), அக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், வரும் ஜுலை 29ம் தேதி முதற்கொண்டு, செப்டம்பர் 24ம் தேதி வரை கிடைக்கும். மேலும், Registration window, ஜுலை 29 முதல் செப்டம்பர் 26 வரை திறந்திருக்கும். இந்தமுறை, 4 புதிய தேர்வு மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

               இதன்மூலம், மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்கிறது. சூரத், உதய்பூர், திருவனந்தபுரம், விஜயவாடா போன்ற இடங்களில் அந்த புதிய தேர்வு மையங்கள் அமையவுள்ளன என்று ஐ.ஐ.எம்., வடடாரங்கள் தெரிவித்த
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

               தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

              (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

                 பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 
              பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தியது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் என, இரு பிரிவினர் குறித்தும், கணக்கு எடுக்கப்பட்டது.

                       இதில், 51 ஆயிரத்து, 173 பேர், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முழுமையான தகவல்களை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது.

                "பள்ளி செல்லாததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது" என, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் தெரிவித்தார்.

               அவர் மேலும் கூறியதாவது:பள்ளி செல்லாத குழந்தைகளில், பிற மாநிலங்களில் இருந்து, இங்கு குடிபெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர்களும் இருக்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயர், அவர்களுடைய புகைப்படங்கள், குடும்ப பின்னணி, சமூக, பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம்.

                        அனைவரையும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்துவிட்டால், பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

               குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
 
 
               "பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

                அதன்படி, தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

                  கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரித்தை ரத்து செய்ய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை விபரம்:

* பள்ளிகளில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* அனைத்து கழிப்பறைகளும், பயன்பாட்டில் உள்ளதா என்பதை, பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து, பயன்பாட்டில் இருப்பதை, அவ்வப்போது, உறுதி செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்பதை அறிய, கல்வித்துறை அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முன், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேணடும்.

* ஒன்றிய அளவில், ஒரு குழுவை அமைத்து, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை ஏற்படுத்த, தனியார் பள்ளிகள் தவறினால், அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

             இது குறித்து, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தேவையான அளவிற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், பள்ளிகளை தரம் உயர்த்தியது மற்றும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது போன்ற காரணங்களால், கூடுதல் வசதி தேவைப்படுகிறது.

                  அந்த வகையில், மாநிலம் முழுவதும், 2,733 அரசுப் பள்ளிகளில், கூடுதலாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் தேவைப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை நிதி மற்றும் தேசிய கிராமப்புற குடிநீர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 50 கோடி ரூபாயை, நபார்டு வங்கி, இந்த வசதியை செய்ய, ஒதுக்கீடு செய்துள்ளது.

                         இந்த நிதியை பயன்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

இயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்

              ஒடிசா தலைநகர் புபனேஷ்வரிலுள்ள இயற்பியல் கல்வி நிறுவனம், ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு ஆற்றல் துறை மற்றும் ஒடிசா மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து இதற்கு நிதியளிக்கின்றன. இக்கல்வி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
 
              இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரங்கள், கவர்னிங் கவுன்சிலிடம் உள்ளன.

ஆராய்ச்சித் துறைகள்

HIGH ENERGY THEORY
CONDENSED MATTER THEORY
NUCLEAR PHYSICS THEORY
EXPERIMENTAL CONDENSED MATTER PHYSICS
EXPERIMENTAL HIGH ENERGY PHYSICS

போன்ற துறைகளில், இந்நிறுவனம விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.

உள்கட்டமைப்பு

பலவகை வசதிகளையும் கொண்ட நூலகம், கணினி மையம் போன்றவை உள்ளன. மேலும், சிறப்பான மருத்துவ வசதியும், இந்த வளாகத்தில் உண்டு.

நிகழ்வுகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல்வேறான தலைப்புகளில் செமினார்கள், மாநாடுகள் மற்றும் இயற்பியல் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

பணிவாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல நிலைகளிலான பணி வாய்ப்புகளும் உள்ளன. அவைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in/job/viewjobs.php என்ற வலைதளம் செல்ல்க.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

டாக்டோரல் படிப்பு

ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் வழங்கும் பிஎச்.டி., பட்டத்தைப் பெறும் வகையிலான, டாக்டோரல் படிப்பு இங்கே வழங்கப்படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்ள இயற்பியலில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பொது நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், ஒரு வருட, Pre - Doctoral படிப்பையும் வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும். High Energy Physics, Condensed Matter Physics, Nuclear Physics போன்ற துறைகளில், விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் ஆண்டில், மாதம் ரூ.16 ஆயிரமும், அதன்பிறகு, மாதம் ரூ.18 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதர செலவுகளுக்காக, ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இவைத்தவிர, ஆய்வு மாணவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் பயனுள்ள கல்வி கலந்தாய்வுகளில் பங்கேற்குமாறு, ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்கின்றன.

ப்ரீ-டாக்டோரல் படிப்பு

இந்தப் படிப்பானது, 3 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு Semester -கள், 3 மாத காலஅளவைக் கொண்டது மற்றும் கடைசி Semester, 4 மாத காலஅளவைக் கொண்டது.

இப்படிப்பில், பல பாடங்கள் உண்டு. அனைத்து பாடங்களையும் படிப்பது, ஆய்வாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து தியரி படிப்புகளுக்குமான வகுப்பறை நேரம் 40 மணிநேரங்கள். அனைத்திற்கும் மொத்த மதிப்பெண்கள் 100.

மேலும், இக்கல்வி நிறுவனத்தில், அட்வான்ஸ்டு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இக்கல்வி நிறுவனத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in என்ற வலைத்தளம் செல்க.
நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

          புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
          திருப்பூரில் நர்சரி பள்ளிகள், ஜூன் மாதம் துவங்குகிறது; ஏப்., துவக்கத்தில் இருந்து, மே இறுதி வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கையில் "பிஸி"யாக உள்ள பள்ளிகள், அதிக வேலைப்பளு காரணமாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் வாய்ப்புள்ளது.

             அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக துவங்கப்படும் நர்சரி பள்ளிகள்; மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள் வரும் மே 30க்குள், அங்கீகாரத்தை பெற வேண்டும்.

            அங்கீகாரம் பெறவோ, புதுப்பிக்கவோ தவறும் பட்சத்தில், நர்சரி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Saturday, April 27, 2013


Posted: 26 Apr 2013 10:18 AM PDT
வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————
இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
——————————-
மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
————————–

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

உலகப் புத்தக நாள் மற்றும் சிறந்த நூலாசிரியர்கள் பதிப்பாசிரியர்களுக்கான பரிசளிப்பு விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் பரிசுகள் வழங்கி கௌரவிப்பு

Press Release 

Press Release

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கவும், உடனடியாக இடைகால நிவாரணமாக 2009-க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு 1.86ஆல் பெருக்கி வழங்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த SSTA முடிவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. இராபர்ட் கூறுகையில் ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதம் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் 6வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் பின் என இரு வேறுப்பட்ட ஊதியம் பெரும் அவலநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது எனவும், எனவே இது குறித்து தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றவும், உடனடியாக இடைகால அடிப்படையில் 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் வருகிற மே 4ல் மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  மேலும் RTE சட்டப்படி தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு சட்டப்படி தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டும் 10000 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.





பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30ம் தேதியும் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும்  வெளியாக உள்ளது.

பணி நீட்டிப்பை விரும்பும் AEEO / AAEEO அலுவலர்களுக்கு பணி மாறுதல் மூலம் மீண்டும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோரி தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
CEO's Meeting

         பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது
அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

         வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.


           இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம், கடந்த கல்வி ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1 முதல் பிளஸ் 2 வரை, புத்தகப் பை; 1 முதல் 5ம் வகுப்பு வரை, கலர் பென்சில்கள்; 6 முதல் 10ம் வகுப்பு வரை, அட்லஸ் வழங்குவது ஆகிய திட்டங்களும், புதிதாக அறிவிக்கப்பட்டன.

                இந்த நான்கு திட்டங்களுக்காக, கடந்த நிதி ஆண்டில், 136 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவழித்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மேற்கண்ட இலவச திட்டங்களை செயல்படுத்த, 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

                        டெண்டர் விண்ணப்பங்கள், நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. "மே, 23ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மே, 24ம் தேதி, பிற்பகல், 2:00 மணி வரை பெறப்படும்&' என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும், 3.50 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

             "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


             தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள்; 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவை, ஆண்டுதோறும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

                  எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்களை, வரும் மே, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பெறலாம்.

               பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மொத்தம், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்துவதில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

           www.tnhealth.orgwww.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும், மே 9ம் தேதி முதல், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களை, குறிப்பிட்ட இணைய தளங்களில் பெறலாம்.

                பொறியியல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக, ஜூன் முதல் வாரத்தில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுகுமார் கூறினார்.

             285 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்?: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, இந்த ஆண்டு துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) அனுமதி கோரப்பட்டுள்ளது.

               மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது குறித்து, இக்கல்லூரிகளில், சமீபத்தில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிவுகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக வந்தால், இந்த ஆண்டு, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

            "கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


          சங்க தலைவர், தமிழ்மணி கூறியதாவது: கலை கல்லூரி ஆசிரியர்களுக்கான, இடமாற்ற பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன்பே, முறையற்ற வகையில், பணி இடமாற்றங்கள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. அரசு தலையிட்டு, உடனே கலந்தாய்வு தேதியை அறிவித்து, வெளிப்படையாக ஆசிரியர் பணி இடமாற்றங்களை நடத்த வேண்டும்.

               கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திலும் லஞ்ச புகார்களில் கைது செய்யப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 4ம் தேதியும், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.
கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு
           தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.


            இந்தாண்டு கோடை முகாமில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி, வரும் 9ம் தேதி, துவங்குகிறது. கோடை கால பயிற்சி வரும், 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், அடிப்படை அறிவியல், உயிர் அறிவியல், நானோ தொழில்நுட்பம், பல்நோக்கு தொழில்நுட்பம் குறித்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

              வானவியல் முகாம், மே, 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மேல்படிப்பில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என, துறை வல்லுனர்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி, வரும், 17ம் தேதி நடக்க உள்ளது.

              இதில், மருத்துவம், பொறியியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறை வல்லுனர்கள் வழிகாட்டுவர்.

              தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் கூறுகையில், "கோடை கால பயிற்சி முகாமில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்களும், "பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்" என்ற நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம்" என்றார்.

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

            தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.


              இதற்காக, ஒரு மாணவருக்கு, ரூ.2,800 வீதம், 6, 500 பேருக்கு, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க,7 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை, ஜூன் மூன்றாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகளை துவக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

               டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.


                  கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர்.

           ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில் சேரவில்லை. இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

                இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணிநியமன கவுன்சிலிங் நடக்கிறது.

                  தேர்வில் வெற்றி பெற்று மறு கவுன்சிலிங் அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு பெறாமல் 
Dir. of School Education: Application for the post of Coordinator for IEDSS
Public Services – Equivalence of Degree – M.Tech., (Environmental Science & Tech) as equivalent to M.E., (Environmental Engineering) – Recommendation of Equivalence Committee –Orders – issued.
தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்
          
            தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

           இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் தெரிவித்தது, “பள்ளி வேலை நாட்கள் முடிவதற்குள் கலந்தாய்வு குறித்து விவரங்கள்  அறிவித்தால் தான் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளிக்க ஏதுவாக இருக்கும்.
                 இதுவரை அறிவிப்பு ஏதும் வராததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வித் துறை இயக்குனருக்கு இதுகுறித்து வலியுறுத்தி கடிதம் அளித்ததோடு நேற்று மாலையும் இன்று காலையும் தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசுகையில், கல்வித்துறை அமைச்சர் மற்றும்  கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து விட்டு இன்று (26.04.2013) மாலைக்குள் இது குறித்து உறுதியான தகவலை தருவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

              கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
                   அதனால் இவற்றைத் தலைமையாசிரியரோ பிற ஆசிரியர்கள் சேர்ந்தோ தமது பொறுப்பில் வைத்திருந்துவிட்டு கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மறுதிறப்பு நாளன்று மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் கோடை விடுமுறையில் மடிக்கணினி களவு போனதும் அப்பள்ளித் தலைமையாசிரியர் பணிநிறைவு பெற்ற பின்னரும் அப்பிரச்சினை அவருக்குத் தீராத தலைவலியாக இருந்ததும் நாளிதழில் வெளியானதாக நாம் அறிந்துள்ளோம்! ஆகவே பள்ளியின் முக்கியத் தளவாடங்களையும் உபகரணங்களையும் பாதுகாப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Thursday, April 25, 2013


இன்று சந்திர கிரகணம்!

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை இன்றிரவு 1.24 முதல் 1.51 வரை வெறும் கண்களால் பார்க்கமுடியும்.

இந்த பகுதி சந்திர கிரகணத்தை, ஆஸ்திரேலியா, ஆசியா , ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அன்டார்க்டிகா கண்டங்களில் காண முடியும். இந்த ஆண்டில், மொத்தம், ஐந்து கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அவற்றில், மூன்று சந்திர கிரகணம்; இரண்டு, சூரிய கிரகணம்.

இன்று சந்திர 

கிரகணம்!


இந்த ஆண்டின் முதல் சந்திர
 கிரகணத்தை இன்றிரவு 1.24 முதல் 1.51 வரை வெறும் கண்களால் பார்க்கமுடியும்.
இந்த பகுதி சந்திர கிரகணத்தை, ஆஸ்திரேலியா, ஆசியா , ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அன்டார்க்டிகா கண்டங்களில் காண முடியும். இந்த ஆண்டில், மொத்தம், ஐந்து கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அவற்றில், மூன்று சந்திர கிரகணம்; இரண்டு, சூரிய கிரகணம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்கள்
2012-13ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) வட்டி விகிதம் 8.8%ம், 2013-14ஆம் நிதியாண்டிற்கு 8.7% அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது-தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சொக்கலிங்கம்

             மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி தாய்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் படி வாழ வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே, மாணவர்கள் தங்களை விட அதிகம் பணம் சம்பாதித்தாலும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வளர்ந்தாலும் அவர்களை கண்டு பொறாமைப் படாமல், மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

               மாணவர்கள் தாங்கள் வாழ்வில் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்கக் கூடாது. மாணவர்கள் கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கம்,கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்

2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்
              வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக

                  தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும். இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

               காரைக்கால் மாவட்டம், நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் கல்வி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

             இன்றைய கால நிலைக்கு ஏற்ப கல்வி கற்பித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும், புதிய உத்திகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் விளக்கினர்.

             மேலும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், அறிவியல் வரலாறு ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு புதிய அணுகுமுறை மூலம் கற்பித்தல் குறித்தும் வல்லுநர்கள் விளக்கினர். ஆசிரியர்-மாணவர் உறவு முறை எளிதாகி, கற்றலில் புதிய அனுபவத்தை மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு
                 இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை" என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

               இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது. "பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை" என, நீதிமன்றம் கூறியது.

            "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்" என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற்கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது.

               அரசு கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை" சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி" சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது.

                 ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

                   கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார்.
563 இளநிலை உதவியாளர்களுக்கு ஏப்.25ல் பணியிட கலந்தாய்வு

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 563 இளநிலை உதவியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணியிடக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

               காலை 10 மணிக்கு அவரவர் சொந்த மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லாததால் வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடம் கோருபவர்களுக்கான கலந்தாய்வும் இதைத் தொடர்ந்து நடைபெறும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாடு திறந்த பல்கலை: பி.எட்., படிப்பிற்கான அறிவிப்ப

            தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

           இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து, முழு நேர பணியிலுள்ள ஆசிரியர்களாக 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

           கல்வி கட்டணமாக ரூ.500ம், தபால் மூலம் பெற ரூ.550ம் வரைவோலை எடுக்க வேண்டும்.

             பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 25ம் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு  www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

          அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

               பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

            இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.

              அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

              கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

             மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது.

                பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார்.
வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்
            கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல;

          உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள்.

           "எனது வாழ்க்கையை புரட்டியது புத்தகம் தான்", என சொல்வோர் பலர். ஆயுதத்தின் வலிமையை விட, சக்தி வாய்ந்த இந்த புத்தகங்கள், சமூக மாற்றத்திற்கான திறவுகோல். புத்தகத்தை, அன்றாடம் தங்கள் வாழ்வில் ருசிக்கும் சிலரது பக்கங்கள்...

            படிக்காத நாளில்லை: மதுரையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா மோகன். 22 புத்தகங்களின் ஆசிரியர். இவரது கணவர் முனைவர் இரா.மோகன் எழுத்தாளர், பேச்சாளர். இவரது வீட்டின் ஒவ்வொரு அறையையும், புத்தகங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. பள்ளியில் படிக்கும் போதே, புத்தகத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், புத்தகங்கள் மீது தீராத காதல் ஏற்பட்டது, முதுகலை தமிழ் படிக்கும் போது தானாம்.

           வங்கியில் பணிபுரிந்து வந்த போது, "மேடம் கியூரி" புத்தகத்தை படித்த போது தான், ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும், என்ற ஆர்வம் இவரை எழுத்தாளராக மாற்றியது. பெண்கள் எந்த துறையில் சாதித்திருந்தாலும், அவர்களை குறித்து படிக்க தவறுவதே இல்லை. சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறப்பது இல்லை, என்பதற்கேற்ப, ஒரு நாள் கூட படிக்காத நாள் இல்லை, என்கிறார் நிர்மலா மோகன்.

           ""வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு - இது தான் புத்தகம். அதில் அதிக நேரம் செலவு செய்யும் போது மனம் நிறைந்த மகிழ்ச்சி கிடைக்கும்,&'&' என்கிறார். இவருடன் பேச 94436 75931.

             சிறையில் சுவாசித்த புத்தகம்: மதுரை அண்ணாநகரில் வாடகை நூல் நிலையம் நடத்தி வருபவர் பி.ஆர்.ரமேஷ். பதிப்பாளர், எழுத்தாளர் இது தான் பி.ஆர்.ரமேஷின் தற்போதைய அடையாளம். 6ம் வகுப்பு படித்த இவர், 3 ஆண்டுகள் குண்டாஸ் கைதி. 6 ஆண்டுகள் விசாரணை கைதி. 23 வழக்குகளில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். 17 வயதில் ரவுடியான, இவரது தலைமையில், இருதரப்புகளில் நடந்த மோதல்களில் 23 கொலைகள். "என்கவுண்டர்" பட்டியலில் தப்பி, அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்று, புத்தகங்களோடு தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

               தன் வாழ்க்கையை மையமாக வைத்து, இவர் எழுதிய "தொலைந்த நேரங்கள்" உட்பட 5 புத்தகங்களை தொடர்ந்து, அச்சில் ஏற 3 புத்தகங்கள் காத்திருக்கின்றன. "சிறை தான் எனது அறிவுக்களம். மதுரை மத்திய நூலகத்திலிருந்து யாரும் விரும்பாத புத்தகங்கள் தான் சிறைக்கு வரும்.

           அவற்றையும் ஆர்வமாய் படிப்பேன். எல்லோரும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக, வாடகை நூல் நிலையத்தை நடத்தி வருகிறேன். என் வாசமும், சுவாசமும் புத்தகங்களே," என்கிறார். இவரோடு பேச 96596 16669.

              ஒரு புத்தகம் படிக்க 100 ரூபாய்: திண்டுக்கல் தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர் ஏகாம்பரம், 46. மதுரை புதூரில் உள்ள இவரது வீட்டில் பீரோ, பரண் என எங்கும் புத்தகங்களின் குவியல்கள். 10 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகம். 100க்கும் மேற்பட்ட திருக்குறள் விரிவுரையை சேகரித்து உள்ளார்.

            பள்ளிப் பருவத்தில் துவங்கிய புத்தகக் காதல் இன்று வரை தொடர்கிறது. "பொது அறிவுக்காக படிக்கத் துவங்கினேன். அதன் பின் அதுவே பழக்கமாகி விட்டது. நாகூர் ரூமியின் "அடுத்த வினாடி" புத்தகம் என்னை பெரிதும் ஈர்த்துவிட்டது. மாதம் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குகிறேன். எனது சொத்து புத்தகங்களே. அதை வைத்து நீங்கள் முன்னேறும் வழியை பாருங்கள் என, பிள்ளைகளிடம் சொல்வேன்" என்கிறார்.

             இவரது மகன் பி.இ., முதலாம் ஆண்டு, மகள் 8ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, ஒரு புத்தகத்தை படித்து அதை இவரிடம் சொன்னால், 10 ரூபாய் கொடுத்து ஊக்குவித்துள்ளார். இப்போது 100 ரூபாய் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி, நல்ல வாசிப்பாளர்களாக உருவாக்கியுள்ளார். இவரிடம் பேச 98430 36765.

               கதை கதையா படிப்பேன்: மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த மாணவி விஷ்வாதிகா,10. ஜீவனா பள்ளி மாணவி. பள்ளி பாடத்தை விட, அதிகம் படிப்பது கதை புத்தகங்கள். சிறுவர்களுக்கான எந்த புத்தகம் இருந்தாலும் அதை விடுவதே இல்லை. வீட்டில் புத்தகம் வாங்குவதற்காகவே ஒரு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.

            "சார்லஸ் டிக்சன் கதைகள் ஸ்வீட் மாதிரி. பள்ளி பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாதிரி, நூலக புத்தகங்களை படிப்பேன்" என்கிறார். கம்ப்யூட்டரில் கூட டேட்டாக்களை பதிவு செய்யும் போது "மெமரி" நிறைந்து விட்டதாக காட்டும். ஆனால் புத்தகங்களை படிக்க, படிக்க மனித மூளை மட்டும், இன்னும் இன்னும் என ஆர்வமாய், புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் பயன் தந்து கொண்டிருக்கும்.

               நம்மை நாமே மேம்படுத்த, புத்தகங்களை படியுங்கள். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசாக வழங்குங்கள். குழந்தைகளிடம், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்போம்.

           இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்: உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்., 23ம் தேதி, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.

            புத்தகம் மற்றும் நூலாசியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகம் என்பது கல்வி மற்றும் அறிவை வளர்க்க, உலகிலுள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக உள்ளது.

            புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் நமது அறிவை வளர்க்கலாம். மனிதர்களை நல்வழிப்படுத்தவும் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சிறந்த புத்தகங்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்; அப்போதுதான் அனைத்து தரப்பினரையும் அது சென்றடையும்.

              எப்படி வந்தது: ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்ற சர்வதேச புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்., 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில், இவர்களது மறைந்த நாளையே, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ உருவாக்கியது.

              யுனெஸ்கோ விருது:  மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், புத்தகங்கள் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தி, இலக்கியத்தில் அவர்களது பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும். உலகில் சகிப்புத்தன்மை வளர்வதற்கு இலக்கியம் மூலம் பங்காற்றிய, சிறந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, யுனஸ்கோ அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது.
புதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை

               "பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க, அரசு உத்தேசிக்கவில்லை" என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.

              சட்டசபை கேள்வி நேரத்தின் போது, நடந்த விவாதம்: அ.தி.மு.க.,- சண்முகவேல்: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில், அரசு பாலிடெக்னிக் துவங்கப்படுமா?

             உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன்: இந்தியாவில், தமிழகத்தில் தான் மிக அதிகபட்சமாக, 498 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் அடக்கம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டிலும், சுயநிதி கல்லூரிகளில், 50 சதவீத இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. இடஒதுக்கீட்டில் நிரப்பப்படும் இடங்களிலேயே, மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை.

            பெரும் பகுதி இடங்கள் காலியாக உள்ளன. இதனால், புதிய பாலிக்டெக்னிக் கல்லூரிகள் துவங்கும் எண்ணம், அரசுக்கு இல்லை. காற்றாலை மின் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கான, டிப்ளமோ கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

                 பல்கலைக்கழகங்களில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம், காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான கல்வி அளிக்கப்படுகிறது. இதை, இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது.
பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்
                "நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

             பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்", மதிப்பெண்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்", பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன.

அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்" கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

துணைவேந்தர் அறிவிப்பு: நடப்பு ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், "மே, 4ம் தேதி முதல், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன.

எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளோம்.விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.

இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.

ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்:
* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13
* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13
* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu - March 2013


Employment Exchange Statistics - Community-wise  break up of Job Seekers waiting on the rolls of 


Employment Exchanges in Tamilnadu as on 30.06.2012
Chennai-4 (Professional & Executive)AriyalurChennai-4 (Technical Personnel)
Chennai-4Chennai-35 (Unskilled)Coimbatore
Coimbatore (Technical Personnel)Chennai-4 (Physically Handicapped)Dindigul
ErodeCuddaloreKarur
KrishnagiriKancheepuramNagapattinam
NagercoilMaduraiPerambalur
PudukottaiNamakkalSalem
SivagangaiRamanathapuramTheni
TiruvannamalaiThanjavurTirunelveli
ThiruvallurThoothukudiTrichy
UthagamandalamThiruvarurVillupuram
VirudhunagarVelloreMadurai (Professional & Executive)
TiruppurDharmapuri

Employment Exchanges Act
                
 
Addition and Correction list for Physical Education Teacher, Music Teacher, Sewing Teacher & Drawing Teacher nominated to Teachers Recruitment Board
Cut-off dates for B.T Assistants
List for the post of B.T Assistants (for various Subjects)
Tentative Cut-off dates for Physical Education Teachers
Tentative list for the post of Physical Education Teacher
Tentative Cut-off dates for Drawing, Sewing and Music Teachers
Tentative list for the post of Drawing Teacher
Tentative list for the post of SewingTeacher
Tentative list for the post of Music Teacher
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers  
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
Tamil/English        Telugu        Kannada        Malayalam      Urdu
GOV OF TAMILNADU - INSTRUCTIONS TO PENSIONERS
Announcement and forms  
1. Announcement :
Pensioners have to appear before the Pension Pay Officer/ Treasury Officer for mustering from 1st April 2013 to 30th June 2013 on all Government working days. Pensioners who are unable to appear for mustering may produce Life Certificate in the format prescribed below.
3. Press Release of Pension Pay Office, Chennai