Sunday, April 14, 2013

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. உறவுகள் அனைவருக்கும்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?

               டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.

             போட்டித் தேர்வு: தேர்வாணைய தலைவராக நடராஜ் பதவி வகித்தபோது, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை, தற்போதைய காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தார்.

           
பழைய பாடத்திட்டத்தின் கீழ், குரூப்-2 மற்றும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4 தேர்வுகளில், தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து, அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.பாடத்திட்டம் மாற்றப்பட்ட போது, குரூப்-2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திட்டம், முற்றிலும் நீக்கப்பட்டன. இதற்கான, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டன.

             "ஆப்டிடியூட்" என்ற புதிய பகுதியும், இதில் சேர்க்கப்பட்டது.பல லட்சக்கணக்கான தேர்வர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதி கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட கேள்விகள், "ஆப்டிடியூட்" பகுதிக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும், மொழிப்பாட கேள்விகள் (தமிழ் அல்லது ஆங்கிலம்), 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டன.

புதிதாக, கிராம நிர்வாகம் மற்றும், "ஆப்டிடியூட்" பகுதிகள் சேர்க்கப்பட்டன. தேர்வாணையம் மேற்கொண்ட இந்த புதிய நடவடிக்கைக்கு, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறைக்கக் கூடாது என்றும், இதனால், கிராமப்புற தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

             ஆலோசனை: இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபையில், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் பேசுகையில், "தேர்வாணைய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, தேர்வாணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்" என, தெரிவித்தார்.

               "அரசின் ஆலோசனை குறித்து, பரிசீலனை செய்து வருகிறோம்" என, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனும், அப்போது தெரிவித்திருந்தார். கடந்த மாத இறுதியில், இது தொடர்பாக, தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும், தமிழ் பாடத்திற்கு, பழையபடி உரிய முக்கியத்துவம் அளிப்பது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.

             இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், "பழைய பாடத்திட்டத்தில், மொழிப்பாடத் திட்டங்களுக்கு, எத்தகைய முக்கியத்துவம், எத்தனை கேள்விகள் இருந்தனவோ, அவற்றை, அப்படியே மீண்டும் சேர்க்க, ஆலோசிக்கப்பட்டு உள்ளது. எனினும், அடுத்த வாரத்தில் நடக்கும் மற்றொரு கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு, உடனடியாக அறிவிக்கப்படும்" என தெரிவித்தன.

          மனம் மாறியது ஏன்?: பழைய பாடத்திட்டங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தது குறித்து, தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ் சிறப்பு பேட்டி, "தினமலர்" நாளிதழில், மார்ச், 20ம் தேதி வெளியானது.

           அப்போது அவர் கூறுகையில்,"வி.ஏ.ஓ., பணிக்குச் செல்பவர்களுக்கு, தமிழ் இலக்கணம் மிகவும் அவசியமா; அல்லது, கிராம நிர்வாகத்தைப் பற்றியும், ஆறு, ஏரிகள், நில அமைப்புகள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமா?&' என, கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

              வி.ஏ.ஓ., பணிக்கு வருபவர்கள், கிராம நிர்வாகத்திறனை பெறுவது, மிகவும் அவசியம். இதற்காகத் தான், புதிய பாடத்திட்ட பகுதி சேர்க்கப்பட்டது. அதுவும், தமிழ் வழியில் தான் சேர்க்கப்பட்டன.மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்காமல், நடராஜ் வெளியிட்டு இருக்க மாட்டார்.

              அப்படியிருக்கும்போது, அப்போது அனுமதி அளித்த தமிழக அரசு, இப்போது திடீரென, மனம் மாறியது ஏன்? "தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை" என, அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், புதிய பாடத்திட்டம், கிராமப்புற படித்த இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினால், அது, அரசியல் ரீதியாக, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான், தமிழக அரசு, பின்வாங்கியதற்கு காரணம் என, கூறப்படுகிறது.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்


            இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில் குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், "ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.

என்ன காரணம்: நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி, மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற, மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில், 1919 மார்ச் 21ல் "ரவுலட் சட்டம்' என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. "எது குற்றம்' என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான விசாரணை நடைபெறும். மேல்முறையீடுக்கு வழி இல்லை' போன்ற அதிகாரங்கள் இச்சட்டத்தில் இருந்தன. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது:


இச்சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய காந்தியடிகள், 1919 ஏப்.,10ல் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன்வாலா பாக் திடலில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடல், நான்கு பக்கம் மதில்களால் சூழப்பட்டு இருந்தது. வெளியே வர, ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. நாடு முழுவதும் மக்களிடம் பயத்தை ஏற்படுத்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார் டயர். வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே இருந்ததால், மக்களால் தப்பிக்க முடியவில்லை. நெரிசலில் மிதிபட்டும், குண்டு பாய்ந்தும் மக்கள் பலியாகினர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என சொல்லப்படுகிறது. ஆங்கிலேய அரசோ, 379 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்தனர் என தெரிவித்தது.

மன்னிப்பு :இச்சம்பவம் நடந்த 94 ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது பேசிய அவர், "இச்சம்பவம், பிரிட்டன் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டார். இந்த இடத்திற்கு வந்த முதல் பிரிட்டன் பிரதமர் இவரே. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ல் வந்திருந்தார்.

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

               பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.


                  இந்திய அளவிலும் ,உலக அளவிலும் ஒலிம்பியாட் தேர்வுகள் அரசாங்கத்தின் ஆதரவில் நடைபெறுகிறது..அதை தவிர பல தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தனியாக தேர்வை நடத்துகிறது. நன்கு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல அனுபவம் வழங்கும்.ஆனால் இதற்காக மாணவர்களை பிழிந்து எடுக்காமல் ஒரு அபவம் கிடைக்க எழுதுவதினால் நாளை இது போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
NTSE தேர்வு

இந்திய அளவில நடக்கும் NTSE தேர்வு.இதன் மூலம் வருடா வருட படிப்பு முடியும் வரை ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்க படுகிறது. மிக பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்று. போன்ற வருடம் வரை எட்டாம் வகுப்புக்கு நடந்து கொண்டு இருந்தது. இனத வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகிறது. அதன லிங்க்

http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html

KVPY தேர்வு Kishore Vaigyanic Protsahan Yojana:

இந்த IISC எனப்படும் இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் சைன்ஸ் ஆள் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு. கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்களுக்கு IISC ல் சீட் கிடைக்கும் வாய்ப்பும் அதை தவிர Phdபடிப்பு வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதன் லிங்க்
http://www.kvpy.org.in/main/


NSEC or National Standard Examination in Chemistry:

வேதியல் பாடத்திற்கு நடக்கும் போட்டி தேர்வு.

IAPT or Indian Association of Physics Teachers and HBCSE or Homi Bhabha Centre for Science Education அவர்களால் நடத்தபடுகிறது.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEP or National Standard Examination in Physics:
மிக மதிப்பு மிகுந்த தேர்வு இயற்பியல் போட்டி தேர்வு. இதில் தேர்ந்தேடுகப்டும் மாணவர்கள் உலக அளவில் நடக்கும் இயற்பியல் போட்டி தேர்வுக்கு அனுப்ப படுவார்கள் International physics Olympiad தகுதியாக இந்த தேர்வின் மூலமே தேர்ந்தேடுக்கபடுவார்கள்.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEJS or National Standard Examination in Junior Science:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அறிவியல் தேர்வு.

தகுதி : 10 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEA or National Standard Examination in Astronomy:

ஐந்து சுற்று நடக்கும் வானவியல் ஒலிம்பியாட் முதல் சுற்று தேர்வு.

தகுதி : 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEB or National Standard Examination in Biology:
உயிரியல் பாடத்தில் வைக்கபடும் போட்டி தேர்வு..இதுவும் ஹோமி பாபா மூலமே நடத்தப்படுகிறது .

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

RMO or Regional Mathematics Olympiad:

மிக முக்கியமான கணக்கு பாடத்தில நடத்தப்படும் ஒலிம்பியாட் .தேர்வு செய்யப்பட்டவர்கள் IMO ல் பங்கு பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்வு.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

ZIO or Zonal Information Olympiad:

தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

http://www.iarcs.org.in/inoi/


இதை தவிர தனியாரால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் விவரம் கீழே வருமாறு .

NSTSE or National Science Talent Search Examination:

தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்.
http://www.unifiedcouncil.com/

unified council நடத்தும் மற்ற போட்டி தேர்வு...

UCO or Unified Cyber Olympiad:

தகுதி : 3 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு
http://www.unifiedcouncil.com/why_uco.aspx


science Olympiad Foundation

நடத்தும் போட்டி தேர்வுகள்.

NCO or National Cyber Olympiad.
NSO or National Science Olympiad.
IMO or International Mathematics Olympiad.
IEO or International English Olympiad.

தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்

http://www.sofworld.org/


silver zone அமைப்பு நடத்தும் போட்டி தேர்வுகள் .

IIO or International Information Olympiad.
IOM or International Olympiad in Mathematics.
IOS or International Olympiad in Science.

IOEL or International Olympiad of English Language.

SKGKO or Smart Kid General Knowledge Olympiad.

ICGC or International Computer Graphics championship.

ITHO or Internationa Talent Hunt Olympiad.
http://silverzone.org/newweb/index.asp

Spelling Bee தேர்வுகள்.

http://www.marrsspellingbee.com/index.php.

பள்ளிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டி.பள்ளிகள் மூலமாகவே விண்ணபிக்க வேண்டும்.

HDFC நடத்தும் ஸ்பெல்லிங் போட்டி தேர்வு.விவரங்களுக்கு,

http://www.spellbeeindia.in/

இதை தவிர பள்ளி மாணவர்களுக்கு Mac Millan ,Asset தேர்வுகள் அவர்களை மேம்படுத்தும் தேர்வுகளாக நடத்த படுகிறது. அதன் இணைய முகவரி .

http://www.ei-india.com/about-asset/how-do-i-prepare-for-asset/

http://iais.emacmillan.com/

எனக்கு தெரிந்த அளவில் போட்டி தேர்வுகளை தொகுத்து எழுதி உள்ளேன். இதை தவிர இருந்தால் பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்.

அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்


           அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, அமைக்கப்படும் நடமாடும் அருங்காட்சியகம், அடுத்த மாதத்திலிருந்து செயல்படத் துவங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

             தமிழகம் முழுக்க, 20 இடங்களில், அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில், மானுடவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகள் உள்ளன. நம் நாட்டின் அரிய பொக்கிஷங்கள், இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரிய தபால் தலைகள், காசுகள், பட்டயங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கூட, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

           அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அருங்காட்சியகங்கள் துறை, "நடமாடும் அருங்காட்சியகம்' அமைக்க முடிவு செய்துள்ளது. பஸ்சின் உள் பகுதியை, காட்சிக் கூடமாக்கி, பஸ்சின் இரண்டு புறங்களிலும், காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் குறித்த அறிவிப்பு வைக்கப்படும்.

               பின், அருங்காட்சியகத்தின், பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான பொருட்கள், காட்சிக்கு வைக்கப்படும். ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்டோர், பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

               அடுத்த மாத மாத இறுதியில், நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் அருங்காட்சியகம், தமிழகம் முழுக்க வலம் வரும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.

             பள்ளி, கல்லூரி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம், அருங்காட்சியகம் குறித்தும், பாரம்பரியத்தின் மதிப்பு குறித்தும், அந்தந்த பகுதியில் உள்ள, காப்பாட்சியர்கள் விளக்குவர்.

உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR

              தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் வரும், பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், நிதி ஒதுக்கீடு செய்யாததால், இயலாக் குழந்தைகள், மூன்று நேர உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன.

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளி செல்லும் வயதில் உள்ள இயலாக் குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கல்வி கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்காக, பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.இயலாக் குழந்தைகள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற முறையில், இங்கு கல்வி அளிக்கப்படுகிறது. இப்பணிக் காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், இரண்டு சிறப்பாசிரியர்கள், நான்கு தசை இயக்கப் பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். என்.ஜி.ஓ.,க்கள் மூலம், ஆண்டுதோறும் இயலாக் குழந் தைகளை இனம் காண இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன; பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்காக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் சம்பளம், மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள் வழங்கல், ஆதார அறைகள், சாய்தளம், கழிப்பிடம் அமைத்தல், விழிப் புணர்வு முகாம் நடத்த, இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஒதுக்கீடு பெறப்பட்ட நிதி, தொண்டு நிறுவனங்கள் மூலம், சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தில் முழுமையாக செலவிடப்படுகிறதா என்பதை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உறுதி செய்யவேண்டும்.
வாகன வசதி

தவிர, மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர, வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையேல், மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு, பஸ் கட்டணம் கணக்கிடப்பட்டு, அந்த வாரம் அல்லது மாதக் கடைசியில் வழங்க வேண்டும்.மத்திய அரசு நிதியாக, 60 சதவீதம், மாநில அரசு நிதியாக, 40 சதவீதம் எஸ்.எஸ்.ஏ., மூலம், பராமரிப்பு மையத்துக்கு வழங்கப்படுகிறது. 20 குழந்தைகள் வரை உள்ள, ஒரு மையத்துக்கு மாதத்துக்கு, உணவு செலவுக்காக, 7,000 ரூபாயும், பெற்றோர் குழந்தைகளை அழைத்து வர, போக்குவரத்து செலவுக்காக, 4,500 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிக்கல்

ஆண்டுதோறும் முறையாக வந்து கொண்டிருந்த நிதி, கடந்த மார்ச், 31ம்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால், இம்மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, மூன்று நேர உணவு வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்காக, உணவு கொண்டு வந்து ஊட்டி விடுகின்றனர்.எஸ்.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு அரசும், மார்ச் 31ம் தேதி முதல், நிதியை நிறுத்தி வைத்துள்ளன. சாதாரண குழந்தைகள் எனில் பரவாயில்லை என, விட்டு விடலாம். பரிதாபத்துக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர், அவர்களே உணவு கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். எப்போது நிதி வரும் என தெரியவில்லை' என்றார்.

மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்

           "மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ் பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார்.


          இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், 26வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், சென்னை மண்டலத்தில் படித்த, 1,383 மாணவர்களுக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்பது மாணவர்கள், தங்க பதக்கங்களை பெற்றனர்.

         விழாவில், இக்னோ சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது: சென்னை மண்டலத்தில், பி.காம்., - பி.ஏ., - பி.எஸ்சி., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளும், எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகள் என, 150 படிப்புகள் வழங்கப்படுகின்றன.

         சென்னையில், 106 படிப்பு மையங்களும் செயல்படுகின்றன. இதில், 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பி.எட்., படிப்பில், ஒவ்வொரு ஆண்டும், 2,600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், 80 சதவீதம் மேற்பட்டோர் பெண்கள்.

          நகர்ப்புறங்களில் இக்னோவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதை களையும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்தில், மாதிரி கிராம பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

           அனைத்து மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரும், எந்தவித கட்டணமின்றி இலவசமாக படிக்கும் வகையில், இலவச கல்வியும், இக்னோ சார்பில் அளிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகள் நடந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி கிடைக்காத மலைவாழ் மக்களிடம், கல்வியை கொண்டு செல்லும் வகையில், தொலை தூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

             இவர்கள் மலைவாழ் மக்களிடம், உயர் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து மழைவாழ் மக்கள் படிக்க ஊக்குவிப்பர். தமிழகத்தில், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பகுதியில் தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அசோக்குமார் கூறினார்.

வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்

         கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13 வயது பள்ளி சிறுவன்.
          வித்தியாச முயற்சி: உத்தரபிரதேச மாநிலம், கமாரியா தமுவான் கிராமத்தைச் சேர்ந்தவன், ஓம்கார் தூபே, 13. இவனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் திறந்த வெளியிலேயே, காலைக் கடன்களை முடிப்பது வழக்கம்.

          மழைக் காலங்களில், திறந்த வெளியில், மலம் கழிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த, தூபே, தன் குடும்பத்தினருக்கு என, ஒரு கழிப்பறை கட்ட ஆசைப்பட்டான். தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். குறைந்த வருமானம் உடைய குடும்பம் என்பதால், இரண்டு மாத சேமிப்பிற்கு பின், அந்த தொகையில், கழிப்பறை கட்டினர்.

           இதன்பின், தங்கள் குடும்பத்தினரைப் போன்றே, கிராமத்திலுள்ள மற்றவர்களும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என, எண்ணிய தூபே, ஊர் மக்கள் இடையே, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினான். சிறுவனின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முயற்சியால், கிராமதலைவர், பொது கழிப்பறை கட்ட, நிதி ஒதுக்கினார்.

          2 ஆண்டுகளுக்கு முன், ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டது. அதன்பின், ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்போடு, தற்போது, 13 கழிப்பறைகள், கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், தான் பயிலும் பள்ளியிலும், கழிப்பறை கட்டப்பட வேண்டும் என, நினைத்தான் தூபே.

              விழிப்புணர்வு: பள்ளியை கண்காணிக்க வந்த அதிகாரிகளிடம், தன் விருப்பத்தை தெரிவித்தான். தற்போது, அப்பள்ளியில், மாணவர் மற்றும் மாணவியருக்கென, தனித் தனியாக, இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

             தூபேயின் இந்த தூண்டுதல் மற்றும் விழிப்புணர்வால், தாங்கள் மிகுந்த பெருமை அடைந்து உள்ளதாக, அவனின் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். கிராம மக்களும் அவனை பாராட்டுகின்றனர்.

                பெருகி வரும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில், ஒரு சிறுவனின் தலைமையில், ஒரு கிராமமே, சுகாதார புரட்சியில் ஈடுபட்டு உள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்

           சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட் மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை, வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.


இந்த புதிய முறை இக்கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

            சி.பி.எஸ்.இ., அதிகார வட்டாரங்கள் இதுகுறித்து சில தகவல்களைக் கூறினர். அதாவது, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு முறை(Continuous and Comprehensive Evaluation - CCE) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் படிப்பில் அலட்சியம் காட்டத் தொடங்கி விட்டனர். எனவே, மேற்கண்ட தேர்வுகளின் Attempt எண்ணிக்கையை குறைப்பதின் மூலமாக, அவர்களின் இந்த அலட்சிய மனப்போக்கை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அது.

           CCE முறையானது, மாணவர்களின் பாரத்தை குறைத்து, வகுப்புகள் மீண்டும் மீண்டும் தொடரும் வாய்ப்புகளை தவிர்ப்பது ஆகிய நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டது. இந்த புதிய மாற்றங்கள், இந்த 2013-14ம் கல்வியாண்டை தொடங்கும் மாணவர்களுக்கானது. அதேசமயம், 2011-12 கல்வியாண்டு வரை, வாரியத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. இந்த மாணவர்கள், ஜுலை மாதம், சி.பி.எஸ்.இ., வாரியம் அல்லது பள்ளி நடத்தும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

           10ம் வகுப்பு தேர்வையெழுதி, மொத்தமாக 5 பாடங்களிலோ அல்லது ஏதேனுமொரு பாடத்திலோ, படிப்பு திட்டத்தின்படி, ஸ்காலஸ்டிக் பகுதி ஏ-வின் கீழ், E1 அல்லது E2 கிரேடு பெற்ற மாணவர்கள், அவர்களின் மதிப்பெண்களை, ஏதேனுமொரு பாடத்திலோ அல்லது அனைத்து 5 பாடங்களிலுமோ உயர்த்திக்கொள்ள தகுதியுடையவர்கள். இந்த மாணவர்கள், அதே ஆண்டு, ஜுலை மாதத்தில், வாரியம் நடத்தும் Improvement தேர்வில் பங்கு பெறலாம்.

           மாணவர்களுக்கு, பாடவாரியான செயல்பாட்டு ஸ்டேட்மென்ட் வழங்கப்படும். Improvement மற்றும் Compartment தேர்வுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டதால், இனிமேல், முதல் நாளில் இருந்தே, தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. அலட்சியத்திற்கு இடமில்லை.

புதிய முறையின்படி வாய்ப்புகள்

                                       10 மற்றும் 12ம் வகுப்பிற்கான Improvement தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 1ஆக குறைப்பு.

                  12ம் வகுப்பிற்கான Compartment தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 3ஆக குறைப்பு

                     10ம் வகுப்பிற்கான Compartment தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை - 5இல் இருந்து 4ஆக குறைப்பு.

No comments:

Post a Comment