Monday, April 22, 2013

மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அன்றா? அல்லது 24.04.2013 அன்றா?
            மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை  என்றும் மற்றும் நாட்காட்டியின் படியும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் தகவல்கள் வருவதால் தமிழ்நாட்டில் விடுமுறை 23.04.13 அன்றா? 24.04.13 அன்றா? என்ற குழப்பம் ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
 
              மகாவீர் ஜெயந்தி 24.04.2013 அன்று தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியலின் படி கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  
 
             இதில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பட்சத்தில் முறையான அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விடுமுறை குறித்து எவ்வித குழப்பம் அடைய தேவையில்லை என்று கேட்டுகொள்கிறோம். தொடக்கக் கல்வி துறையின் கீழ் திருச்சி, மதுரை, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 24.04.2013 புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
           தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் உங்களின் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

click here to download the GO.981 PUBLIC DEPT DATED.19.11.2012 - Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2013 – Orders issued.

இன்று உலக புவி நாள்!. இந்த வாரம் முழுவதுமே உலக புவி வாரமாக அனுசரிக்கப்படுகிறது.


  இன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக!

புவி நாளின் வரலாறு :

1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால்,
உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது.

முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன.

எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். )

புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது :


18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.)

காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது!

நாம் என்ன செய்யலாம்? :


இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக…

வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்!
பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! )
சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்!
சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். )
நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும்.
நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!

ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.இதுவே புவி நாள் (Earth Day) ஆகும். புவி நாளின் வரலாறு : 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால், உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது. முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன. எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். ) புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது : 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.) காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது! நாம் என்ன செய்யலாம்? : இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக… வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்! பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! ) சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்! சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். ) நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும். நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!
இந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக!

நம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.
மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு.

               கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம். 
 
             தமிழகத்தில் முதன்முறையாக, கோவை மாநகராட்சியில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
 
 
            தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு, கல்வித்திறன் போன்ற விபரங்கள் பெற்றோருக்கு "எஸ்.எம்.எஸ்" மற்றும் "இ-மெயில்" மூலம் அனுப்பப்படுகிறது.இதனால், பள்ளி நிர்வாகம், மாணவர் கண்காணிப்பு எளிதாகிறது. ஆனால்,அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் சரியாக செல்கிறார்களா, நன்றாக படிக்கிறார்களா என்ற விபரங்கள் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. தேர்ச்சி அட்டையை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பற்றி பெற்றோருக்கு தெரிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், எப்படி இருக்கும் என, ஏங்காத பெற்றோர் இல்லை
              .ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் மாநிலத்தில் முதல்முறையாக, மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரத்யேக சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், கமிஷனர் லதா ஆகியோர் தலைமையில் நடந்தது.புதிய சாப்ட்வேர் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவது பற்றி "எவரான் கல்வி நிறுவனம்" சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய சாப்ட்வேரை பரீட்சார்த்த முறையில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
 
                "எவரான் கல்வி நிறுவனத்தின்" துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:"கல்வி நிறுவன ஆராய்ச்சி திட்டம்" என்ற பெயரில், "கேம்பஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்" எனும் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது, சேர்க்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, வருகைப்பதிவு, காலஅட்டவணை, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், மாணவர்கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு பாடத்திற்கான வினாவங்கி, விடைத்தாள், பாடத்திட்டம் போன்றவையும் பதிவு செய்யப்படும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் தீர்வு காண்பது, மாதிரி தேர்வு எழுதும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் சாத்தியம். மாணவர்எந்த பாடத்தில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க முடியும்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட நிர்வாக தகவலும் பதிவு செய்யப்படும். 
 
              இதன்மூலம், ஒவ்வொரு மாணவன்பற்றிய விபரமும், பள்ளிகளின் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாநகராட்சி இணையதளத்துடன், இந்த சாப்ட்வேர் இணைக்கப்படும். மாணவர் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு, "எஸ்.எம்.எஸ்" மற்றும்"இ-மெயில்" மூலம் தெரிவிக்கப்படும். புதிய சாப்ட்வேர் மூலம் கல்வித்தரம், நிர்வாகத்தரம் மேம்படும்.இவ்வாறு, கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.கோவை மேயர் கூறுகையில், "மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியில் குழந்தையை சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை, அவர்களின் படிப்பு, நடத்தை உள்ளிட்ட அனைத்தையும், முன்னேற்றத்திற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
 
              கோவை ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, எவரான் நிறுவனத்தினர் இலவசமாக சாப்ட்வேர் நிறுவுகின்றனர். திட்டத்திலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளிலும் புதிய சாப்ட்வேர் நிறுவி, 26 ஆயிரம் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். இது மாநிலத்தில் முன்மாதிரியான திட்டமாகும்" என்றார்.

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., - எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை

            "டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.
 
 
               இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த அமைப்பின் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.இ.டி., தேர்வுகளில், எஸ்.சி, - எஸ்.டி., பிரிவு சமுதாயத்தில் இருந்து தேர்வு பெறுபவர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக இருப்பதையும், பல மாநிலங்களில், இந்த பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை வழங்குவதை சுட்டிக் காட்டியும், தமிழகத்திலும், மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என, அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

                 இந்த சலுகையை, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை, முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பங்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் என்ற, அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில், மேற்கண்ட சமுதாயத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சென்னையில் இலவச பயிற்சியை நடத்தி வருகின்றனர்.
கணித மேதை சகுந்தலா தேவி காலமானார்

            மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
 
 
         தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.

           1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

              கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

                பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

            மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

           இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர் தேர்வு  வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டி-யின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை.
           ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன.  தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது.  18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம். தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர்.

              அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர். இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்.

              ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது. மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன.
               தேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

               இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.  பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல்  பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். 

                    ஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும் டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர். அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலை ஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன.  தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா?

பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பங்களை 27க்குள் சமர்பிக்க திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு


உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடுவதை முன்னிட்டு 23.04.2013 முதல் 22.05.2013 ஒரு இலட்சம் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் மாநில அளவில் 10000 புரவலர்களை சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

T.N.P.S.C குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"

             பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


                   "விவசாய படிப்புகளில் எதிர்காலம்" குறித்து கோவை வேளாண் பல்கலை டீன் ராஜாராமன் பேசியதாவது: உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் பேர், இந்தியாவில் உள்ளனர். இங்கு 9 சதவீதம் மட்டுமே, விளைநிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் குறைந்து, உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

                  வரும் 2050 ஆண்டில், நமது உணவு உற்பத்தியை, இருமடங்கு அதிகரிக்க வேண்டும். விவசாயிகளிடம் வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்துச்செல்ல, துடிப்பான இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். வருங்காலங்களில் வேளாண்துறை சார்ந்த படிப்புகளுக்கு, எதிர்காலம் உள்ளது.

              ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற பலர், விவசாய படிப்புக்களை தேர்வு செய்தவர்களே. கோவை, மதுரை வேளாண் பல்கலையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. நான்கு ஆண்டுகள் படிப்பான, பி.டெக்., பயோ டெக்., அக்ரிக்கல்சர் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, தோட்டக்கலை, உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் உள்ளன.

               பி.எஸ்சி., படிப்புகளும் உண்டு. ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றிபெற, பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்யலாம். ஆற்றல் மற்றும் சோலார் ஆற்றல் துறையில், எதிர்கால வளர்ச்சி அபாரமாக இருக்கும். இப்படிப்புகள், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின் வேளாண் துறை, வங்கிகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம். தொழில்முனைவோராகவும் சாதிக்க முடியும், என்றார்.

                  "கால்நடை மருத்துவ படிப்புகளில் எதிர்காலம்" குறித்து, திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முருகானந்தம் பேசியதாவது: கால்நடை மருத்துவ படிப்புகள், மருத்துவ படிப்புக்கு இணையானது. எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உண்டு. ஐந்து ஆண்டு படிப்பு இது.

                         விண்ணப்பிக்க, பிளஸ் 2 வில், 60 சதவீத மதிப்பெண் வேண்டும். படித்து முடித்தவுடன் வேலைகிடைக்கும்; கடந்த 2011 வரை, இப்படிப்பை முடித்தவர்களுக்கு, அரசு வேலை கிடைத்துவிட்டது. தனியார் மையங்களில் வேலைகள் காத்திருக்கின்றன.

                  ஆண்டுதோறும், 260 கால்நடை மருத்துவர்கள் படித்து வெளியேறுகின்றனர். இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும். திருப்பரங்குன்றம் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் உட்பட நான்கு மையங்களிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும்.

                              மேலும், சொந்தமாகவும் கால்நடை கிளினிக் வைக்கலாம். முதுகலை படிப்பு முடித்தால், பல்கலையில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர், இப்படிப்பை தேர்வு செய்யலாம். வெளிநாட்டு கால்நடை பல்கலையிலும், வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுதவிர மாநில அரசின் ஆவின் மற்றும் வங்கி துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, என்றார்.
கற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்

              பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


           "ஊடகத்துறையின் எதிர்காலம்" குறித்து மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஊடகத்துறை பேராசிரியர் மணிகண்டன் பேசியதாவது: வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில், முக்கியமானது ஊடகத்துறை. பத்திரிகைகள், "டிவி", சினிமாவில் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.

                நம் நாட்டில், 800 வானொலி நிறுவனம்; 5000 "டிவி&' நிறுவனம்; 10 ஆயிரம் "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்கள், தலா 1000 விளம்பர மற்றும் மல்டிமீடியா நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பணிகளில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.

              "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 3.50 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். பெண்கள், "டிவி" நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக ஜொலிக்கலாம். மேலும், ஆடியோ, வீடியோ ஜாக்கிகளாகவும் வலம்வர, பெண்களுக்கு வாய்ப்பு உள்ளது.

               விளம்பர நிறுவனங்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகள், சென்னை, புனே, கோல்கட்டாவில் உள்ளன. மதுரையில், சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், பிலிம் மற்றும் "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு, விஷூவல் மீடியா போன்ற படிப்புகளுக்கு, சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

              இத்துறையில் கற்பனைத் திறனும், கலை ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம். மீடியா படிப்புகளுக்கு, வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்கலை அங்கீகாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ள, கல்லூரிகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெண்கள், வீட்டில் இருந்தே, ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், என்றார்.

               அனிமேஷன்: அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை எதிர்காலம் குறித்து சரண்குமார் பேசியதாவது: அனிமேஷன் என்பது, நாம் மனதில் நினைப்பதை, கற்பனைத் திறன் மூலம் ஸ்கிரீனில் கொண்டு வருவதுதான். 2டி, 3டி போன்ற நவீன தொழில்நுட்பமும், இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

                    "அவதார்", "ஐஸ் ஏஜ்" போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் 3டி அனிமேஷனுக்கு பின்புலத்தில், தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, பல்வேறு துறைகள் வேலை வழங்க காத்திருக்கின்றன.

                    பி.எஸ்சி., அனிமேஷன் படிக்க, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியை போல், தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். பல்கலை அங்கீகாரமும் முக்கியம். இப்படிப்பிற்கு வங்கியில் கல்விக் கடனும் வழங்கப்படுகிறது, என்றார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை

             டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.


              குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட, ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை, மீண்டும் மாற்றி அமைத்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொது அறிவு பாடத்திட்டங்கள், திறன் அறிதல் மற்றும் கூர்மையாக சிந்தித்து விடை அளிக்கும் பகுதி ஆகியவை, ஆங்கில வழியில் வெளியிடப்பட்டு உள்ளன.

              பத்தாம் வகுப்பு தர நிலையில் நடக்கும் குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டங்களும், ஆங்கில வழியில் உள்ளன. இதை, தமிழ் வழியில் வெளியிட்டால், தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விரைவில், இந்தப் பணியை முடித்து, தமிழ்வழியில் வெளியிட, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

               குரூப்-4, வி.ஏ.ஓ., பொது தமிழ் பகுதியில், பொருத்துதல், பொருத்தமான பொருளை அறிதல், பொருந்தாத சொல்லை கண்டறிதல், இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியங்கள் உள்ளிட்டவை, பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்லூரி மாணவியருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு

           சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும், மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


             டில்லியில், நடந்த மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து, அனைத்து பல்கலைக்கழங்களும், கல்லூரிகளில், மாணவியருக்கு பிரத்யேகமாக செய்துள்ள பாதுகாப்பு விவரங்களை தெரிவிக்கும்படி, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் தகவல்களை அனுப்பி வருகின்றன.

               அதில், சென்னை பல்கலைக்கழகம் அனுப்பிய தகவலில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் வரும் அனைத்து இணைப்பு, உறுப்பு பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாகவும், கல்லூரி மாணவியரின் பாதுகாப்புக்கு என, பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்

             பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


           திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் "தினமலர்" மற்றும் நேரு குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய "வழிகாட்டி நிகழ்ச்சி" நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்றும் மாணவர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.

               பல்வேறு கல்லூரிகளில் இருந்து 40 க்கும் மேற்பட்ட "ஸ்டால்"கள் இடம் பெற்றன. எந்த பாடப்பிரிவு தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்பது குறித்து மாணவர்களும், பெற்றோரும் கல்லூரிகள் குறித்த விபரங்களை ஸ்டால்களில் அறிந்து கொண்டனர்.

              பொள்ளச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரி, பிரிஸ்க் வாட்டர் ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. காலையில் துவங்கிய கருத்தரங்கில் "பயோ இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக்னாலஜி துறைகளில் எதிர்காலம்" பற்றி டாக்டர் ரத்னமாலா பேசியதாவது:

             அறிவியல் துறையில் உயிரோட்டமான பகுதி பயோ டெக்னாலஜி. இது தொடர்பாக பி.எஸ்சி.,யில் 25 வகையான படிப்புகள் உள்ளன. மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேதியியல், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இப்படிப்பின் பயன்பாடு முக்கியமானது.

               மனித மரபணுக்களில் இருந்து இன்சுலின் தயாரிப்பது, நானோ டெக்னாலஜி மூலம் ஸ்டெம்செல், மனித உறுப்புகள் மாற்றம் போன்றவற்றிலும் இத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்ற வாய்ப்புண்டு.

             உணவு பதப்படுத்துதல், விவசாய துறையில் அதிக மரபணுக்களை பயன்படுத்தி புதிய ரக தாவரங்கள் கண்டுபிடித்தல், ஆகியவற்றிற்கு இப்படிப்பு உதவுகிறது. இந்த படிப்புகளால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுதுறை, குடிநீர் மற்றும் மணல் அனாலிசிஸ் துறைகளில் அரசு பணியிடங்களில் பொறியாளராக பணியாற்றலாம், என்றார்.

                "நானோ டெக்., ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல்" படிப்புகள் குறித்து எஸ்.ஆர். பாலகிருஷ்ணன் பேசியதாவது: பி.இ., ஏரோ நாட்டிக்கல், மெக்கானிக்கல், சி.இ.சி., ஐ.டி., போன்ற படிப்புக்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை அள்ளித்தருபவை. பிளஸ் 2 ல் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம்.

              ஏரோ ஸ்பேசில், மெக்கானிக்கலுடன் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து தற்போது விமானத்தில் ராக்கெட் இன்ஜின் பொருத்தி, அதிவேகத்தில் செல்லும் சூப்பர்சானிக் ஏரோ ஜெட் தயாரிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். நவீன தொழில்நுட்ப முறையில் இப்போது இத்துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கபடுகின்றன.

                   இத்துறையில் எதிர்காலத்தில் ஏராளமான இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். இத்துறையில் மேற்படிப்பு முடித்தால் பல லட்சம் சம்பளத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன, என்றார்.
மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்

           திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்" குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது:


           ஒவ்வொரு மாணவரும் பிளஸ் 2 முடித்து, சரியான உயர் கல்வி படிப்புக்களை தேர்வு செய்வதன் மூலமே அவர்களின் எதிர்காலம் அமையும். தற்போதைய நிலையில் பட்டங்கள் சார்ந்து இல்லாமல் எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள் சார்ந்த படிப்புக்களை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புக்களை தவிர, அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் ஏராளமான துறைகள் உள்ளன.

              ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அமோகமாக உள்ளன. அவற்றை தேடிகண்டறிய வேண்டும். மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள் இந்திய மருத்துவ படிப்புக்களான சித்தா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம்.

                பல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம், மீன்வளம் போன்ற படிப்புகளும் பயன்தரக்கூடியவை. நர்சிங் முடிக்கும் மாணவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புக்கள் உள்ளன. இதுதவிர வேளாண்மை, ஓவியம், இசை, பிலிம் இன்ஸ்டிடியூட் கேட்டரிங் டெக்னாலஜி, ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு, அனிமேஷன் போன்ற பலதுறைகளும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை எட்டக்கூடியவை.

                கலை மற்றும் அறிவியியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். இந்தியாவில் விளம்பரதுறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

                விளம்பர துறை சார்ந்த பி.எஸ்.சி., விஷூவல் கம்யூனிகேஷன், பிலிம் அன்ட் டெலிவிஷன் தயாரிப்பு, மக்கள் தொடர்பு துறை போன்ற படிப்புக்களையும் மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வு செய்யலாம். மாணவர்கள் படிப்புடன் கூடுதல் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

                இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று, மாணவர்களை பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. விரும்பி படிக்கும் படிப்பில்தான் மாணவர்கள் சாதிப்பார்கள், என்றார். 
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

           "பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

               இதுகுறித்து, வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர், செல்வராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், உள்ளன. இப்பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க, சிறப்பாசிரியர்கள், நியமிக்கப்படுகின்றனர்.

                   பள்ளிகளில், இது போன்ற பயிற்சிகளை அளிக்க, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், காலியாக உள்ளன. பணி மாறுதல், ஓய்வு என, ஆண்டுதோறும் பணியிடங்கள் காலியாகி வருகின்றன, இவை, கடந்த, 15 ஆண்டுகளாக, நிரப்பப்படவில்லை.

                   தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படவில்லை. கடந்தாண்டு, 1,200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, பணி நியமனம் நடைபெறவில்லை. அரசு தலையிட்டு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேணடும். இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.
 

No comments:

Post a Comment