Monday, April 15, 2013

துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு


துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு
மே மாதம் நடைபெறும் துறைத்தேர்வு எழுதுவதற்கான தேதி நீட்டிப்பு.
தேதி: 22-4-2013 
மாலை 5-45 வரையில் நீட்டிக்கப்படுகிறது.

ஆன்-லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு செய்யலாம்

      தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம்.இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு

CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு 
 
          மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர்களாகப் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதுவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது 
 
           கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக சேர விரும்புபவர்கள் மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். சண்டீகர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் அண்ட் டையூ, தாத்ரா அண்ட் நாகர்ஹவேலி, என்சிடி (தில்லி) ஆகிய யூனியன் பிரதேச நிர்வாகப் பகுதிக்குள் வரும் பள்ளிகளில் ஆசிரியர்களாக விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். 
 
          தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 
 
          ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுபபு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாவது தாளை எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஜூலை 28-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் தாள் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெறும். 
 
         ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், சீனியர் செகண்டரி, அதாவது பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தொடக்கக் கல்வி டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் தொடக்கக் கல்வி இளநிலைப்பட்ட (பி.இஎல்.எட்) வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சிறப்புக் கல்வியில் டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
 
          ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், பட்டப் படிப்பை முடித்த பிறகு, தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பிஎட் படிக்கும் மாணவர்களும் என்சிடிஇ விதிமுறைகளின்படி பட்டப் படிப்பில் 45சதவீத மதிப்பண்களுடன் தேர்ச்சி பெற்று பிஎட் படிக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 
 
          சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிஏஎட், பிஎஸ்சிஎட் நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஓராண்டு பிஎட் (சிறப்புக் கல்வி) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதி ஆண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினார், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண்களின் 5 சதவீத விலக்கு உண்டு. கல்வி தொடர்பான பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். பிஎட் சிறப்புக் கல்விப் படிப்பு, இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 
 
               இந்தத் தகுதித் தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாளை எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இரண்டு தாள்களையும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. விண்ணப்பிப்பதற்கான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி 16-4-2013.

 விவரங்களுக்கு: www.ctet.nic.in

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

தெரிந்த நெட்வொர்க் ..தெரியாத பல விசயம் ..உங்களுக்கவும் உங்க நண்பர்களுக்கவும் ஷேர் பண்ணுங்க ..எல்லோரும் பயன் பெறுவார்கள்



வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்


கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13 வயது பள்ளி சிறுவன்.
வித்தியாச முயற்சி: உத்தரபிரதேச மாநிலம், கமாரியா தமுவான் கிராமத்தைச் சேர்ந்தவன், ஓம்கார் தூபே, 13. இவனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் திறந்த வெளியிலேயே, காலைக் கடன்களை முடிப்பது வழக்கம்.

மழைக் காலங்களில், திறந்த வெளியில், மலம் கழிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த, தூபே, தன் குடும்பத்தினருக்கு என, ஒரு கழிப்பறை கட்ட ஆசைப்பட்டான். தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். குறைந்த வருமானம் உடைய குடும்பம் என்பதால், இரண்டு மாத சேமிப்பிற்கு பின், அந்த தொகையில், கழிப்பறை கட்டினர்.

இதன்பின், தங்கள் குடும்பத்தினரைப் போன்றே, கிராமத்திலுள்ள மற்றவர்களும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என, எண்ணிய தூபே, ஊர் மக்கள் இடையே, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினான். சிறுவனின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முயற்சியால், கிராமதலைவர், பொது கழிப்பறை கட்ட, நிதி ஒதுக்கினார்.

2 ஆண்டுகளுக்கு முன், ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டது. அதன்பின், ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்போடு, தற்போது, 13 கழிப்பறைகள், கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், தான் பயிலும் பள்ளியிலும், கழிப்பறை கட்டப்பட வேண்டும் என, நினைத்தான் தூபே.

விழிப்புணர்வு: பள்ளியை கண்காணிக்க வந்த அதிகாரிகளிடம், தன் விருப்பத்தை தெரிவித்தான். தற்போது, அப்பள்ளியில், மாணவர் மற்றும் மாணவியருக்கென, தனித் தனியாக, இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தூபேயின் இந்த தூண்டுதல் மற்றும் விழிப்புணர்வால், தாங்கள் மிகுந்த பெருமை அடைந்து உள்ளதாக, அவனின் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். கிராம மக்களும் அவனை பாராட்டுகின்றனர்.

பெருகி வரும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில், ஒரு சிறுவனின் தலைமையில், ஒரு கிராமமே, சுகாதார புரட்சியில் ஈடுபட்டு உள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.

No comments:

Post a Comment