Friday, April 12, 2013

1.விழுப்புரம் மாவட்டம்-SSLC விடைத்தாள் திருத்தும் பணி ஆணை
கிளிக் செய்க

2.பள்ளிக்கல்வித் துறையில் உள்ள 6,7,8 வகுப்புகளுக்கான CCE இறுதி பருவ மதிப்பெண் படிவம் மார்க் எண்டர் செய்தால் கிரேடாக மாறும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
மதிப்பெண் படிவம் 
பூர்த்தி செய்வது குறித்த விளக்கம்


தேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.


              பொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.  மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

              "கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 
            பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.

           எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. "யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
           ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?

           தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
           தமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் பணியாற்று கின்றனர். இந்த ஊழியர் களுக்கு அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஆசிரியர்களும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அரசு ஊழியர்க ளாகவே கருதப்படுகின்றனர்.

          கடந்த 1980 முதல் 84 வரை லட்சகணக்கான ஊழியர்கள் அரசு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு ஆணை 996ன்படி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்தவர்களில் 58 வயதை கடந்தவர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இதில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஓட்டுமொத்தமாக பலர் ஓய்வு பெறுகின்றனர்.

         2012ம் ஆண்டு ஏராளமானவர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. 2012ம் ஆண்டை விட 2013, 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

             அதாவது, 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஸி8 லட்சமும், ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி10 லட்சமும், ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி15 லட்சமும், ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி20 லட்சம் வரையிலும் ஓய்வூதிய பணப்பலன்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது.

           இதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சட்டத்துறையில் உயரதிகாரிகள் அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு வயது 60ஆக உள்ளது. எனவே, அதேபோல் இங்கும் மாற்றுவதற்கு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

              இவ்வாறு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும் போது, ஓய்வு கால பணப்பலன்களை சில ஆண்டுகள் தள்ளி போட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது. எனினும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு நடந்து வரும் சட்ட பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிடப்படலாம்  என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

15 லட்சம் ஊழியர்கள்

              தமிழகத்தில் அனைத்து சலுகைகளை பெறக்கூடிய தகுதியில் 4 லட்சம் ஊழியர்களும், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் 3.15 லட்சம் பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 7 லட்சம் பேரும், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்களும் என மொத்தம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


           தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.
          இந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

          கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.

How to Unlock Data Card-Internet Modems? for use any network sim ?
      

     நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?


      முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று



உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.

         இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.

          அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.
பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-ன் படி தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2013 முதல் ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment