பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்கள்
| ||
2012-13ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) வட்டி விகிதம் 8.8%ம், 2013-14ஆம் நிதியாண்டிற்கு 8.7% அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
| ||
ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது-தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சொக்கலிங்கம்
மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி தாய்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் படி வாழ வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே, மாணவர்கள் தங்களை விட அதிகம் பணம் சம்பாதித்தாலும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வளர்ந்தாலும் அவர்களை கண்டு பொறாமைப் படாமல், மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
மாணவர்கள் தாங்கள் வாழ்வில் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்கக் கூடாது. மாணவர்கள் கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கம்,கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் | ||
2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்
வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக
தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும். இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. | ||
கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
காரைக்கால் மாவட்டம், நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் கல்வி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இன்றைய கால நிலைக்கு ஏற்ப கல்வி கற்பித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும், புதிய உத்திகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் விளக்கினர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், அறிவியல் வரலாறு ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு புதிய அணுகுமுறை மூலம் கற்பித்தல் குறித்தும் வல்லுநர்கள் விளக்கினர். ஆசிரியர்-மாணவர் உறவு முறை எளிதாகி, கற்றலில் புதிய அனுபவத்தை மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. | ||
உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு
இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை" என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது. "பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை" என, நீதிமன்றம் கூறியது. "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்" என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற்கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது. அரசு கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை" சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி" சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது. ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார். | ||
563 இளநிலை உதவியாளர்களுக்கு ஏப்.25ல் பணியிட கலந்தாய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 563 இளநிலை உதவியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணியிடக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு அவரவர் சொந்த மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லாததால் வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடம் கோருபவர்களுக்கான கலந்தாய்வும் இதைத் தொடர்ந்து நடைபெறும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். | ||
தமிழ்நாடு திறந்த பல்கலை: பி.எட்., படிப்பிற்கான அறிவிப்ப
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து, முழு நேர பணியிலுள்ள ஆசிரியர்களாக 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வி கட்டணமாக ரூ.500ம், தபால் மூலம் பெற ரூ.550ம் வரைவோலை எடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 25ம் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். | ||
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?
அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது. பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார். | ||
வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்
கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல;
உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள். "எனது வாழ்க்கையை புரட்டியது புத்தகம் தான்", என சொல்வோர் பலர். ஆயுதத்தின் வலிமையை விட, சக்தி வாய்ந்த இந்த புத்தகங்கள், சமூக மாற்றத்திற்கான திறவுகோல். புத்தகத்தை, அன்றாடம் தங்கள் வாழ்வில் ருசிக்கும் சிலரது பக்கங்கள்... படிக்காத நாளில்லை: மதுரையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா மோகன். 22 புத்தகங்களின் ஆசிரியர். இவரது கணவர் முனைவர் இரா.மோகன் எழுத்தாளர், பேச்சாளர். இவரது வீட்டின் ஒவ்வொரு அறையையும், புத்தகங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. பள்ளியில் படிக்கும் போதே, புத்தகத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், புத்தகங்கள் மீது தீராத காதல் ஏற்பட்டது, முதுகலை தமிழ் படிக்கும் போது தானாம். வங்கியில் பணிபுரிந்து வந்த போது, "மேடம் கியூரி" புத்தகத்தை படித்த போது தான், ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும், என்ற ஆர்வம் இவரை எழுத்தாளராக மாற்றியது. பெண்கள் எந்த துறையில் சாதித்திருந்தாலும், அவர்களை குறித்து படிக்க தவறுவதே இல்லை. சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறப்பது இல்லை, என்பதற்கேற்ப, ஒரு நாள் கூட படிக்காத நாள் இல்லை, என்கிறார் நிர்மலா மோகன். ""வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு - இது தான் புத்தகம். அதில் அதிக நேரம் செலவு செய்யும் போது மனம் நிறைந்த மகிழ்ச்சி கிடைக்கும்,&'&' என்கிறார். இவருடன் பேச 94436 75931. சிறையில் சுவாசித்த புத்தகம்: மதுரை அண்ணாநகரில் வாடகை நூல் நிலையம் நடத்தி வருபவர் பி.ஆர்.ரமேஷ். பதிப்பாளர், எழுத்தாளர் இது தான் பி.ஆர்.ரமேஷின் தற்போதைய அடையாளம். 6ம் வகுப்பு படித்த இவர், 3 ஆண்டுகள் குண்டாஸ் கைதி. 6 ஆண்டுகள் விசாரணை கைதி. 23 வழக்குகளில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். 17 வயதில் ரவுடியான, இவரது தலைமையில், இருதரப்புகளில் நடந்த மோதல்களில் 23 கொலைகள். "என்கவுண்டர்" பட்டியலில் தப்பி, அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்று, புத்தகங்களோடு தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தன் வாழ்க்கையை மையமாக வைத்து, இவர் எழுதிய "தொலைந்த நேரங்கள்" உட்பட 5 புத்தகங்களை தொடர்ந்து, அச்சில் ஏற 3 புத்தகங்கள் காத்திருக்கின்றன. "சிறை தான் எனது அறிவுக்களம். மதுரை மத்திய நூலகத்திலிருந்து யாரும் விரும்பாத புத்தகங்கள் தான் சிறைக்கு வரும். அவற்றையும் ஆர்வமாய் படிப்பேன். எல்லோரும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக, வாடகை நூல் நிலையத்தை நடத்தி வருகிறேன். என் வாசமும், சுவாசமும் புத்தகங்களே," என்கிறார். இவரோடு பேச 96596 16669. ஒரு புத்தகம் படிக்க 100 ரூபாய்: திண்டுக்கல் தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர் ஏகாம்பரம், 46. மதுரை புதூரில் உள்ள இவரது வீட்டில் பீரோ, பரண் என எங்கும் புத்தகங்களின் குவியல்கள். 10 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகம். 100க்கும் மேற்பட்ட திருக்குறள் விரிவுரையை சேகரித்து உள்ளார். பள்ளிப் பருவத்தில் துவங்கிய புத்தகக் காதல் இன்று வரை தொடர்கிறது. "பொது அறிவுக்காக படிக்கத் துவங்கினேன். அதன் பின் அதுவே பழக்கமாகி விட்டது. நாகூர் ரூமியின் "அடுத்த வினாடி" புத்தகம் என்னை பெரிதும் ஈர்த்துவிட்டது. மாதம் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குகிறேன். எனது சொத்து புத்தகங்களே. அதை வைத்து நீங்கள் முன்னேறும் வழியை பாருங்கள் என, பிள்ளைகளிடம் சொல்வேன்" என்கிறார். இவரது மகன் பி.இ., முதலாம் ஆண்டு, மகள் 8ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, ஒரு புத்தகத்தை படித்து அதை இவரிடம் சொன்னால், 10 ரூபாய் கொடுத்து ஊக்குவித்துள்ளார். இப்போது 100 ரூபாய் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி, நல்ல வாசிப்பாளர்களாக உருவாக்கியுள்ளார். இவரிடம் பேச 98430 36765. கதை கதையா படிப்பேன்: மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த மாணவி விஷ்வாதிகா,10. ஜீவனா பள்ளி மாணவி. பள்ளி பாடத்தை விட, அதிகம் படிப்பது கதை புத்தகங்கள். சிறுவர்களுக்கான எந்த புத்தகம் இருந்தாலும் அதை விடுவதே இல்லை. வீட்டில் புத்தகம் வாங்குவதற்காகவே ஒரு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. "சார்லஸ் டிக்சன் கதைகள் ஸ்வீட் மாதிரி. பள்ளி பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாதிரி, நூலக புத்தகங்களை படிப்பேன்" என்கிறார். கம்ப்யூட்டரில் கூட டேட்டாக்களை பதிவு செய்யும் போது "மெமரி" நிறைந்து விட்டதாக காட்டும். ஆனால் புத்தகங்களை படிக்க, படிக்க மனித மூளை மட்டும், இன்னும் இன்னும் என ஆர்வமாய், புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் பயன் தந்து கொண்டிருக்கும். நம்மை நாமே மேம்படுத்த, புத்தகங்களை படியுங்கள். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசாக வழங்குங்கள். குழந்தைகளிடம், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்போம். இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்: உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்., 23ம் தேதி, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகம் மற்றும் நூலாசியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகம் என்பது கல்வி மற்றும் அறிவை வளர்க்க, உலகிலுள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக உள்ளது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் நமது அறிவை வளர்க்கலாம். மனிதர்களை நல்வழிப்படுத்தவும் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சிறந்த புத்தகங்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்; அப்போதுதான் அனைத்து தரப்பினரையும் அது சென்றடையும். எப்படி வந்தது: ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்ற சர்வதேச புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்., 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில், இவர்களது மறைந்த நாளையே, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ உருவாக்கியது. யுனெஸ்கோ விருது: மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், புத்தகங்கள் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தி, இலக்கியத்தில் அவர்களது பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும். உலகில் சகிப்புத்தன்மை வளர்வதற்கு இலக்கியம் மூலம் பங்காற்றிய, சிறந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, யுனஸ்கோ அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. | ||
புதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை
"பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க, அரசு உத்தேசிக்கவில்லை" என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.
சட்டசபை கேள்வி நேரத்தின் போது, நடந்த விவாதம்: அ.தி.மு.க.,- சண்முகவேல்: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில், அரசு பாலிடெக்னிக் துவங்கப்படுமா? உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன்: இந்தியாவில், தமிழகத்தில் தான் மிக அதிகபட்சமாக, 498 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் அடக்கம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டிலும், சுயநிதி கல்லூரிகளில், 50 சதவீத இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. இடஒதுக்கீட்டில் நிரப்பப்படும் இடங்களிலேயே, மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை. பெரும் பகுதி இடங்கள் காலியாக உள்ளன. இதனால், புதிய பாலிக்டெக்னிக் கல்லூரிகள் துவங்கும் எண்ணம், அரசுக்கு இல்லை. காற்றாலை மின் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கான, டிப்ளமோ கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்கலைக்கழகங்களில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம், காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான கல்வி அளிக்கப்படுகிறது. இதை, இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது. | ||
பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்
"நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்", மதிப்பெண்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்", பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன. அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்" கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர். துணைவேந்தர் அறிவிப்பு: நடப்பு ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், "மே, 4ம் தேதி முதல், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன. எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளோம்.விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார். கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது. ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்: * விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13 * விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13 * விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13 * பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13 * "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13 * "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13 * மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13 * கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13 இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம். | ||
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu - March 2013
Employment Exchange Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment Exchanges in Tamilnadu as on 30.06.2012 Addition and Correction list for Physical Education Teacher, Music Teacher, Sewing Teacher & Drawing Teacher nominated to Teachers Recruitment Board Cut-off dates for B.T Assistants List for the post of B.T Assistants (for various Subjects) Tentative Cut-off dates for Physical Education Teachers Tentative list for the post of Physical Education Teacher Tentative Cut-off dates for Drawing, Sewing and Music Teachers Tentative list for the post of Drawing Teacher Tentative list for the post of SewingTeacher Tentative list for the post of Music Teacher
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
Tamil/English Telugu Kannada Malayalam Urdu | ||
GOV OF TAMILNADU - INSTRUCTIONS TO PENSIONERS
Announcement and forms
1. Announcement :
Pensioners have to appear before the Pension Pay Officer/ Treasury Officer for mustering from 1st April 2013 to 30th June 2013 on all Government working days. Pensioners who are unable to appear for mustering may produce Life Certificate in the format prescribed below. 2. Forms : i) Pensioner’s Life Certificate ii) Family Pensioner’s Non Marriage/ Non – Remarriage/ Non employment Certificate |
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Thursday, April 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment