Sunday, April 21, 2013



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 12.04.2013 வெள்ளிக்கிழமை அன்று ஆண்டுவிழா நடைபெற்றது. பிற்பகல் 2.00 மணியளவில் பள்ளி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அனைத்து பணி நிறைவு மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாலையில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீ.அறிவழகன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் அஞ்சுகம்நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் ரஞசித்குமார் ரவி சிறப்பு பங்கேற்பாளராக கலந்துகொண்டார்.கலைநிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக இரணியன் வதம் என்னும் கர்நாடகத் தெருக் கூத்து பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப் பட்டது.கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ்ர்களை செஞ்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.தே.கருணாநிதி. கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.பெ. அந்தோணிராஜ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு..கு. ஜெயகோபால் ஆகியோர் வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் இப் பள்ளியின் ஆசிரியர்கள் இரா.அமுதா.ந.விஜயலட்சுமி.சா. சாந்தி. பெ.விஜயலட்சுமி.து.சசிகலா மற்றும் பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment