Saturday, April 20, 2013


மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு :
 மத்திய அமைச்சரவை ஒப்புதல்




மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி 01.01.2013 முதல் வழங்க  இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 72% உள்ள அகவிலைப்படியுடன்  8% சேர்த்து 80%மாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதிப்பு - உயர் நீதி மன்ற ஆணை நகல்


டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 1

பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி

              பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


           பள்ளி கல்வித்துறையில், பிரச்சனைக்குரிய மாணவ, மாணவியருக்கு, கலந்தாய்வு அளிப்பதற்கான திட்டம், கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 10 மாதம் பணியாற்ற, 10, உளவியல் வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்போது, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

               இதற்கான மாதிரி விண்ணப்பம், தமிழக அரசு இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. எம்.எஸ்சி., சைக்காலஜி படித்தோர், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

               தேர்வு செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியமாக, மாதம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பத்தை, "பதிவிறக்கம்" செய்தோ, அதே மாதிரி தட்டச்சு செய்தோ விண்ணப்பிக்கலாம். வரும், 25ம் தேதியில் இருந்து, மே, 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

                   பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "ஜாய் எபினேசர், உதவி இயக்குனர், பள்ளிகல்வி இயக்குரனகம், கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு, பதிவு அஞ்சல் மூலம் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி

              சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


               சென்னை மாநகராட்சியில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. 95 ஆயிரம் மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். 99 ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், மேலும், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படும் வகையில், முதல் வகுப்புகள் துவங்கப்படும் எனவும், 10 இடங்களில், மழலையர் பள்ளிகள் துவங்கப்படும் எனவும், மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.

                    இதன்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த பள்ளிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் அமையும் இடங்களை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய உடன், இதற்கான சேர்க்கை நடக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

                  புதிய ஆங்கில வழி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விரிவாக்க பகுதிகளில் இந்த பள்ளிகள் துவங்கப்படவில்லை.

                       இதுகுறித்து, மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விரிவாக்க பகுதிகளில், 133 பள்ளிகள் உள்ளன. இவை, அரசின் கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. மாநகராட்சி கல்வி துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால், ஆங்கில வழி, மழலையர் பள்ளிகள் துவங்க முடியவில்லை" என்றனர்.

                   எப்போது, இணைக்கப்படும் என, கேட்ட போது, "பள்ளிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து, அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
எங்கெங்கே ஆங்கில வழிக்கல்வி?
வார்டு பள்ளி, இடம்
35 நடுநிலைப் பள்ளி, சின்னாண்டி மடம்
37 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
46 நடுநிலைப் பள்ளி, வியாசர்பாடி
48 நடுநிலைப் பள்ளி, 40, டி.எச்.,சாலை
58 நடுநிலைப் பள்ளி, வைக்கங்கராயன் தெரு
60 நடுநிலைப் பள்ளி, அங்கப்பா தெரு,
65 தொடக்கப் பள்ளி, கொளத்தூர்
67 தொடக்கப் பள்ளி, ஜி.கே.எம்.காலனி
68 நடுநிலைப் பள்ளி, கோபாலபுரம்
75 நடுநிலைப் பள்ளி, வெங்கடம்மாள் தெரு
76 நடுநிலைப் பள்ளி, அங்காளம்மன் தெரு
102 நடுநிலைப் பள்ளி, அமைந்தகரை
102 நடுநிலைப் பள்ளி, குஜ்ஜி தெரு
104 நடுநிலைப் பள்ளி, புல்லாபுரம்
114 நடுநிலைப்பள்ளி, பெல்ஸ் சாலை
120 நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணாம்பேட்டை
123 தொடக்கப் பள்ளி, வன்னிய தேனாம்பேட்டை
140 தொடக்கப் பள்ளி, வண்டிக்காரன் தெரு
175 தொடக்கப் பள்ளி, இந்திரா நகர்
177 தொடக்கப் பள்ளி, குயில்குப்பம்
மழலையர் பள்ளிகள் எங்கே?
39 தொடக்கப் பள்ளி, டி.எச்.,சாலை
50 உருது தொடக்கப் பள்ளி, அரத்தூண் சாலை
73 தொடக்கப் பள்ளி, திரு.வி.க.நகர்
102 நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்
96 தொடக்கப் பள்ளி, பாலவாயல் தெரு
110 தொடக்கப் பள்ளி, காம்தார் நகர்
116 நடுநிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி
137 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
130 தொடக்கப் பள்ளி, புலியூர்
174 தொடக்கப் பள்ளி, மடுவன்கரை

No comments:

Post a Comment