Tuesday, April 30, 2013


DTEd 2nd Year Exam starts from June 24th    
   2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது 
            தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை,
25–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும்,மேம்படுத்துதலும் –2,
26–ந்தேதி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)–2,இளஞ்சிறார் கல்வி –2,
27–ந்தேதி ஆங்கிலம் மொழிக்கல்வி –2,
28–ந்தேதி கணிதவியல் கல்வி –2
29–ந்தேதி அறிவியல் கல்வி –2,
ஜூலை 1–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –2,
4–ந்தேதி கற்கும் குழந்தை, 5–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்–1,
6–ந்தேதி மொழிக்கல்வி( தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) –1, இளஞ்சிறார் கல்வி –1 8–ந்தேதி ஆங்கில மொழிக்கல்வி –1,
9–ந்தேதி கணிதவியல் கல்வி –1,
10–ந்தேதி அறிவியல் கல்வி –1,
11–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –1 அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கும்.இவ்வாறு தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

         அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

               பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 
 
               அந்த வகையில், வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்த ஒரே வாரத்தில் வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக இலவச பொருட்களை கொள்முதல் செய்யவும் துறை ரீதியாக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

                புத்தக பைகளை பொருத்தவரை மொத்தம் 13 லட்சம் பைகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.19 கோடியே 79 லட்சமாகும். அதேபோல மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகளையும் முதல் வாரத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அட்லஸ்களையும் (உலக வரைபடம்) உடனே கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 11.85 லட்சம் அட்லஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு

                இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

             இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து.             இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவியுயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
2013-14 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?
          நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?'' பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை
''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 32 முதுகலை ஆசிரியர், 6239 + 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் 785 BT+5 PG, பணியிடங்களு க்கு ஏப்ரல் 2013 மாத ஊதியம் வழங்க ஆணை

             இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.


           இந்தியாவின் உயர்தர மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,களில் எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த கேட் தேர்வில் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இத்தேர்வு, மொத்தம் 20 நாட்கள் நடத்தப்படுகிறது.

               இத்தேர்வுக்கான வவுச்சர்கள்(vouchers), அக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், வரும் ஜுலை 29ம் தேதி முதற்கொண்டு, செப்டம்பர் 24ம் தேதி வரை கிடைக்கும். மேலும், Registration window, ஜுலை 29 முதல் செப்டம்பர் 26 வரை திறந்திருக்கும். இந்தமுறை, 4 புதிய தேர்வு மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

               இதன்மூலம், மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்கிறது. சூரத், உதய்பூர், திருவனந்தபுரம், விஜயவாடா போன்ற இடங்களில் அந்த புதிய தேர்வு மையங்கள் அமையவுள்ளன என்று ஐ.ஐ.எம்., வடடாரங்கள் தெரிவித்த
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

               தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

              (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

                 பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 
              பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தியது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் என, இரு பிரிவினர் குறித்தும், கணக்கு எடுக்கப்பட்டது.

                       இதில், 51 ஆயிரத்து, 173 பேர், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முழுமையான தகவல்களை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது.

                "பள்ளி செல்லாததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது" என, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் தெரிவித்தார்.

               அவர் மேலும் கூறியதாவது:பள்ளி செல்லாத குழந்தைகளில், பிற மாநிலங்களில் இருந்து, இங்கு குடிபெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர்களும் இருக்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயர், அவர்களுடைய புகைப்படங்கள், குடும்ப பின்னணி, சமூக, பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம்.

                        அனைவரையும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்துவிட்டால், பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

               குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
 
 
               "பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

                அதன்படி, தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

                  கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரித்தை ரத்து செய்ய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை விபரம்:

* பள்ளிகளில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* அனைத்து கழிப்பறைகளும், பயன்பாட்டில் உள்ளதா என்பதை, பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து, பயன்பாட்டில் இருப்பதை, அவ்வப்போது, உறுதி செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்பதை அறிய, கல்வித்துறை அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முன், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேணடும்.

* ஒன்றிய அளவில், ஒரு குழுவை அமைத்து, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை ஏற்படுத்த, தனியார் பள்ளிகள் தவறினால், அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

             இது குறித்து, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தேவையான அளவிற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், பள்ளிகளை தரம் உயர்த்தியது மற்றும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது போன்ற காரணங்களால், கூடுதல் வசதி தேவைப்படுகிறது.

                  அந்த வகையில், மாநிலம் முழுவதும், 2,733 அரசுப் பள்ளிகளில், கூடுதலாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் தேவைப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை நிதி மற்றும் தேசிய கிராமப்புற குடிநீர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 50 கோடி ரூபாயை, நபார்டு வங்கி, இந்த வசதியை செய்ய, ஒதுக்கீடு செய்துள்ளது.

                         இந்த நிதியை பயன்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

இயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்

              ஒடிசா தலைநகர் புபனேஷ்வரிலுள்ள இயற்பியல் கல்வி நிறுவனம், ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு ஆற்றல் துறை மற்றும் ஒடிசா மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து இதற்கு நிதியளிக்கின்றன. இக்கல்வி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
 
              இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரங்கள், கவர்னிங் கவுன்சிலிடம் உள்ளன.

ஆராய்ச்சித் துறைகள்

HIGH ENERGY THEORY
CONDENSED MATTER THEORY
NUCLEAR PHYSICS THEORY
EXPERIMENTAL CONDENSED MATTER PHYSICS
EXPERIMENTAL HIGH ENERGY PHYSICS

போன்ற துறைகளில், இந்நிறுவனம விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.

உள்கட்டமைப்பு

பலவகை வசதிகளையும் கொண்ட நூலகம், கணினி மையம் போன்றவை உள்ளன. மேலும், சிறப்பான மருத்துவ வசதியும், இந்த வளாகத்தில் உண்டு.

நிகழ்வுகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல்வேறான தலைப்புகளில் செமினார்கள், மாநாடுகள் மற்றும் இயற்பியல் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

பணிவாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல நிலைகளிலான பணி வாய்ப்புகளும் உள்ளன. அவைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in/job/viewjobs.php என்ற வலைதளம் செல்ல்க.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

டாக்டோரல் படிப்பு

ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் வழங்கும் பிஎச்.டி., பட்டத்தைப் பெறும் வகையிலான, டாக்டோரல் படிப்பு இங்கே வழங்கப்படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்ள இயற்பியலில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பொது நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், ஒரு வருட, Pre - Doctoral படிப்பையும் வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும். High Energy Physics, Condensed Matter Physics, Nuclear Physics போன்ற துறைகளில், விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் ஆண்டில், மாதம் ரூ.16 ஆயிரமும், அதன்பிறகு, மாதம் ரூ.18 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதர செலவுகளுக்காக, ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இவைத்தவிர, ஆய்வு மாணவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் பயனுள்ள கல்வி கலந்தாய்வுகளில் பங்கேற்குமாறு, ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்கின்றன.

ப்ரீ-டாக்டோரல் படிப்பு

இந்தப் படிப்பானது, 3 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு Semester -கள், 3 மாத காலஅளவைக் கொண்டது மற்றும் கடைசி Semester, 4 மாத காலஅளவைக் கொண்டது.

இப்படிப்பில், பல பாடங்கள் உண்டு. அனைத்து பாடங்களையும் படிப்பது, ஆய்வாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து தியரி படிப்புகளுக்குமான வகுப்பறை நேரம் 40 மணிநேரங்கள். அனைத்திற்கும் மொத்த மதிப்பெண்கள் 100.

மேலும், இக்கல்வி நிறுவனத்தில், அட்வான்ஸ்டு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இக்கல்வி நிறுவனத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in என்ற வலைத்தளம் செல்க.
நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்

          புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
          திருப்பூரில் நர்சரி பள்ளிகள், ஜூன் மாதம் துவங்குகிறது; ஏப்., துவக்கத்தில் இருந்து, மே இறுதி வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கையில் "பிஸி"யாக உள்ள பள்ளிகள், அதிக வேலைப்பளு காரணமாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் வாய்ப்புள்ளது.

             அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக துவங்கப்படும் நர்சரி பள்ளிகள்; மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள் வரும் மே 30க்குள், அங்கீகாரத்தை பெற வேண்டும்.

            அங்கீகாரம் பெறவோ, புதுப்பிக்கவோ தவறும் பட்சத்தில், நர்சரி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment