Wednesday, April 10, 2013

பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-ன் படி தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2013 முதல் ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

PG Botany Candidate's List Published to TRB Office.


                  முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் தேர்வு பட்டியல் TRB அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் TRB இணைய தளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் - கருணை மதிப்பெண் கிடைக்குமா/

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் /ஆசிரியர்/ பெற்றோர் / ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு


2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு

அகஇ - 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் - மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு

7th CPC News : 7th Pay Commission Projected Pay Scale


SIXTH CPC PAY STRUCTURE
PROJECTED PAY STRUCTURE FOR NEXT (VII) PAY COMMISSION
Name of Pay Band/ ScaleCorresponding Pay BandsCorresponding Grade PayEntry Grade +band pay
Projected entry level pay using uniform multiplying factor` 3’
Band PayGrade PayEntry Pay
PB-15200-202001800700015600-60600540021000
PB-15200-202001900773015600-60600570023190
PB-15200-202002000846015600-60600600025380
PB-15200-202002400991015600-60600720029730
PB-15200-2020028001136015600-60600840034080
PB-29300-3480042001350029900-1044001260040500
PB-29300-3480046001714029900-1044001380051420
PB-29300-3480048001815029900-1044001440054450
PB-315600-3910054002100029900-1044001620063000
PB-315600-3910066002553046800-1173001980076590
PB-315600-3910076002950046800-1173002280088500
PB-437400-67000870046100112200-2010026100138300
PB-437400-67000890049100112200-2010026700147300
PB-437400-670001000053000112200-2010030000159000
HAG67000- (ann increment @ 3%) -79000Nil


201000
HAG+ Scale75500- (ann increment @ 3%) -80000Nil


226500
Apex Scale80000 (Fixed)Nil


240000
Cab. Sec.90000 (Fixed)Nil


270000
Posted: 08 Apr 2013 10:56 PM PDT
'Merger of 50% of DA and DR with basic pay' - Finance Ministry explained as a reply to a unstarred question in the Parliament on 14th December, 2012.

The below explanation was presented by the Minister of States for Finance Shri.Namo Narain Meena to the questions regarding merger of DA / DR with basic pay of Central Government employees and Pensioners in the Parliament on 14.12.2013...

Whether various Associations/ Organisations of Central Government employees demanded merger of 50 per cent Dearness Allowance into the basic pay of Central Government employees and pensioners and the recommendation of the Sixth Central Pay Commission in this regard and action taken by the Government thereto?

Yes, A number of representations have been received from Associations/Organizations of Central Government Employees/Pensioners and individuals demanding merger of 50% of Dearness AHowance/ Dearness Relief with basic pay/pension respectively. The demand has been considered by the Government and not agreed to since the 6th Central Pay Commission has not recommended as such. 

The 6th Central Pay Commission did not recommend merger of dearness allowance with Basic Pay at any stage. Government accepted this recommendation vide Government of India Resolution dated 29.08.2008. 

(Note : Merger 50% of Dearness Allowance with basic pay to the employees of Central Public Sector Enterprises (CPSEs) following 1997 Industrial Dearness Allowance (IDA) pattern of scales of pay with effect from 1.1.2007.)

அரசுத் தேர்வுகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்த கருத்தரங்கம்

          சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் தமிழக அரசு பொதுத் தேர்வுகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
             மாணவி வி.ரம்யா வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வித்துறைப் பேராசிரியர் ஆர்.முத்துமாணிக்கம் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

           கல்லூரித் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் கருத்தரங்கின் பொருள் குறித்துப் பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆர்.ரவிசங்கர், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜி.ராஜன், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டி.சந்திரசேகரன், கொள்ளிடம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் டி.வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.

           கல்வித்துறைப் பேராசிரியர் பி.மின்னல்கொடி நிறைவுரையாற்றினார். மாணவி எஸ்.ஐஸ்வர்யலட்சுமி நன்றி கூறினார். துணை முதல்வர் ஜி.ஷீலா, காமராஜ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, டி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

          மின்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் ஜெனரேட்டரை அரசு வழங்க வேண்டும். தேர்வு நாள்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

           பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவதால், ஏப்ரல் இறுதி வாரத்தில் முற்பகலில் 12-ம் வகுப்பு தேர்வும், பிற்பகலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்பட வேண்டும்.

          75 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு பின்னரே செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.

          11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் அரசு தேர்வுகள் நடத்தி, 11-ம் வகுப்பில் பாதிப் பாடங்களும், 12-ம் வகுப்பில் மீதிப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்துவதும், குறிப்பாக மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் 11-ம் வகுப்பிலேயே முடித்துக் கொள்வதும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.

               எனவே செமஸ்டர் முறையை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்


           சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

            அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் அரசு கருவூலத்திலிருந்து வங்கிகள் மூலம் அந்தந்த ஊழியரின் வங்கிக் கணக்குக்கு மாத ஊதியம் மாற்றப்பட்டு வந்தது.

           இந்நிலையில் சிதம்பரம் துணைக் கருவூலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சாஃப்ட்வேர் கோளாறினால் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்ய முடியாமல் போனது.

              இதனால் அந்தந்த அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத் தொகையை மொத்தமாக காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த அலுவலக நிர்வாக மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காசோலையை வங்கிக்குக் கொண்டு சென்று பணமாக மாற்றி அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டதால் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த மாதம் கூடுதல் சுமை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

              இனி வரும் காலங்களில் ஊதியம் வழங்கும் மாத இறுதிநாளில் சாஃப்ட்வேர் நல்லமுறையில் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாமல் இருக்க கருவூல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!

           "அரசு ஆரம்பப்பள்ளியை, பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம், கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
           கூட்டத்தில், தமிழகத்தில், முன்பு, அரசு கடைநிலை ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை, அரசு ஆரம்ப பள்ளியில் பயின்று, பெரிய பொறுப்புகளை வகித்தனர். ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக, கடைநிலை ஊழியர்கள் முதல் பெரிய அதிகாரிகள் வரை, அரசுப் பள்ளியில், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.
            அரசு, கல்விக்காக மொத்த வருமானத்தில், 40 சதவீதம் செலவு செய்கிறது. அரசு ஆரம்பப்பள்ளியை பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
         மேலும், முதற்கட்டமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், அரசு ஆரம்பப்பள்ளியில் சேர்க்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தேர்வு மைய முறைகேடுகள், அரசுப் பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும், இந்த அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
           எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், நேர்மையாக தேர்வுகள் நடத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழை, நடுத்தர மாணவர்களை சேர்த்து வந்தது, வரும் ஆண்டு முதல் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், மத்திய, மாநில அரசின் ஆர்.டி.இ., உத்தரவுபடி, 25 சதவீதம் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள்: சதம் எண்ணிக்கை உயரும்


             பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
          எம்.கோகுல், மாணவர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: அனைத்து கேள்விகளுமே எளிமையாக இருந்தன. ஒரு மார்க் கேள்விகளில் இரண்டு கேள்விகள் மட்டுமே ""புக் இன்&'&'இல் இருந்து (பாடத்திற்குள் இருந்து) கேட்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து கேள்விகளுமே, ""புக்பேக்&'&'கில் (பாடத்திற்குரிய கேள்விகளில்) இருந்து கேட்கப்பட்டிருந்தன.

           குறிப்பாக 2 மார்க் கேள்விகள், காலாண்டு, அரையாண்டு கேள்வித்தாள்களில் இருந்தும், கடந்த ஆண்டுக்குரிய கேள்வித்தாள்களில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. ஓரிரு கேள்விகள் மட்டுமே புளூ பிரின்டிற்கு மாறாக, ஆனாலும் எளிமையான முறையில் கேட்கப்பட்டிருந்தன. மற்ற கேள்விகள் அனைத்தும் புளூ பிரின்டில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. இதனால் அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவது உறுதி.

             எம்.தீபா, மாணவி, பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: வழக்கமாக ஒரு மார்க் கேள்விகளில், 13 கேள்விகள் எளிமையாகவும், இரண்டு கேள்விகள் கடினமாகவும் இருக்கும். ஆனால் இம்முறை அத்தனை கேள்விகளுமே எளிமையாக இருந்தன. புத்தகத்தில் இருந்து கேள்வி பதில்களை படித்த சுமாரான மாணவர்கள் அத்தனை பேரும் அதிக மார்க் பெற முடியும்.

           கணக்கு பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததால், அறிவியல் பாடம் எப்படியிருக்குமோ, என பயந்த மாணவர்கள், கணக்கில் குறைந்த மார்க்கை அறிவியலில் ஈடுகட்டி விட முடியும்.

           கே.எஸ்.கலா, ஆசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: அறிவியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண்கள் பெறுவது எளிது. ஒரு மதிப்பெண், இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே புத்தகத்தில் பின்புறமுள்ள கேள்விகளாக கேட்கப்பட்டன. கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்படாமல், எளிமையாக இருந்தது. மறைமுக கேள்விகளே இல்லை.

           வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கணக்கு, புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. கார்பன் பண்புகள் கேள்வி, கணக்கு இரண்டுமே மாணவர்கள் எழுதி பார்த்தது தான். இயற்பியல், உயிரியல் பாடங்களும் கடினமாக இல்லாததால், மாணவர்கள் நூறு மதிப்பெண் பெற நல்ல வாய்ப்புள்ளது.

         முன்னாள் தலைமை ஆசிரியர் வி.சுப்ரமணியன்: முதல், இரண்டாம் திருப்புதல் தேர்வுகளின் போது கேட்கப்பட்ட வினாக்களில், 70 சதவீத வினாக்கள் இடம்பெற்றதும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பாக உள்ளது. அதே சமயம் ஆங்கில வழி மாணவர்களுக்கான, ஒரு இயற்பியல் வினாவுக்கு மட்டும் சரியான விடை தரப்படவில்லை.

            ஒரு மதிப்பெண் வினாவில் 14வது வினா, "ஒரு கம்பிச் சுருளுடன் தொடர்புடைய காந்தம் பாயம் மாறும்போதெல்லாம், அச்சுற்றில் மின்னியக்கும் விசை உருவாகும் நிகழ்வு...? என்ற வினாவிற்கு தமிழ் மாணவர்களுக்கு, 4 விடைகள் தரப்பட்டுள்ளன. அதில் அ) மின்காந்த தூண்டல் என்பது சரியான விடை. இது வினாத்தாளில் உள்ளது.

           ஆனால் ஆங்கில வழி மாணவர்களுக்கு விடை அதில் இல்லை. இதற்கு சரியான விடை "எலக்ட்ரோ மேக்னடிக் இண்டக்ஷன்" என்பது. ஆனால் அது இடம்பெறவில்லை. மாறாக, வெறும் "மேக்னடிக் இண்டக்ஷன்" என தரப்பட்டுள்ளது. அது சரியானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

          தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
          பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

          மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

           இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

            இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!

            அல்ஜீப்ரா குறித்து பயமும், கவலையும் கொண்டவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. டிராகன் பாக்ஸ் என்ற ஒரு கருவியின் மூலம், அல்ஜீப்ராவை எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
           இந்த புதிய கண்டுபிடிப்பு, விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இக்கற்றல் முறையில், ஒவ்வொன்றும், படமாக தொடங்குகிறது. மின்மினிப் பூச்சிகள், விநோத ஜந்துக்கள், பூதங்கள் மற்றும் தாயக்கட்டை உள்ளிட்ட உருவங்கள் இந்த விளையாட்டு கற்றலில் இடம் பெற்றிருக்கும். நீங்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது, மேலே குறிப்பிட்ட உருவங்களில் ஒவ்வொன்றும், கணித மாறுபாடுகளாகவும், எழுத்துக்களாகவும், எண்களாகவும் மாற்றமடையும்.

              பாடத்தை நம்பியிராமல், அல்ஜீப்ராவின் விதிமுறைகளை, இந்த புதிய முறையின் மூலமாக, படிப்படியாக கற்றுக்கொள்ளலாம். இதில், பெற்றோர்களும் பங்கு கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன், K-12 கரிகுலத்தை வழங்குகிறது. இதை, ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில், ஏறக்குறைய ரூ.350க்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

             இந்த டிராகன் பாக்ஸ், IOS, Android devices and Mac version, tablets and desktops போன்றவைகளில் கிடைக்கிறது.

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

        எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.

         கடந்த 2009-10ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பலர், சுயமுகவரியிட்ட கடிதத்தை ஒப்படைக்காததால், பலருக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை. அவை மதுரை அரசு தேர்வுகள் துறை துணைஇயக்குனர் அலுவலகத்தில் உள்ளன.

          விதிப்படி தேர்வு முடிவுகள் வெளியான, 2 ஆண்டுகளில் அவை அழிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு மாதத்திற்குள் ரூ.30 ஸ்டாம்ப் ஒட்டிய தபால் உறையை வழங்கி, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என, துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment