Saturday, April 27, 2013




பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30ம் தேதியும் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும்  வெளியாக உள்ளது.

பணி நீட்டிப்பை விரும்பும் AEEO / AAEEO அலுவலர்களுக்கு பணி மாறுதல் மூலம் மீண்டும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோரி தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
CEO's Meeting

         பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது
அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

         வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.


           இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம், கடந்த கல்வி ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1 முதல் பிளஸ் 2 வரை, புத்தகப் பை; 1 முதல் 5ம் வகுப்பு வரை, கலர் பென்சில்கள்; 6 முதல் 10ம் வகுப்பு வரை, அட்லஸ் வழங்குவது ஆகிய திட்டங்களும், புதிதாக அறிவிக்கப்பட்டன.

                இந்த நான்கு திட்டங்களுக்காக, கடந்த நிதி ஆண்டில், 136 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவழித்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மேற்கண்ட இலவச திட்டங்களை செயல்படுத்த, 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

                        டெண்டர் விண்ணப்பங்கள், நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. "மே, 23ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மே, 24ம் தேதி, பிற்பகல், 2:00 மணி வரை பெறப்படும்&' என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும், 3.50 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு

             "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


             தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள்; 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவை, ஆண்டுதோறும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

                  எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்களை, வரும் மே, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பெறலாம்.

               பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மொத்தம், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்துவதில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

           www.tnhealth.orgwww.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும், மே 9ம் தேதி முதல், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களை, குறிப்பிட்ட இணைய தளங்களில் பெறலாம்.

                பொறியியல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக, ஜூன் முதல் வாரத்தில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுகுமார் கூறினார்.

             285 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்?: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, இந்த ஆண்டு துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) அனுமதி கோரப்பட்டுள்ளது.

               மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது குறித்து, இக்கல்லூரிகளில், சமீபத்தில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிவுகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக வந்தால், இந்த ஆண்டு, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

            "கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


          சங்க தலைவர், தமிழ்மணி கூறியதாவது: கலை கல்லூரி ஆசிரியர்களுக்கான, இடமாற்ற பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன்பே, முறையற்ற வகையில், பணி இடமாற்றங்கள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. அரசு தலையிட்டு, உடனே கலந்தாய்வு தேதியை அறிவித்து, வெளிப்படையாக ஆசிரியர் பணி இடமாற்றங்களை நடத்த வேண்டும்.

               கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திலும் லஞ்ச புகார்களில் கைது செய்யப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 4ம் தேதியும், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.
கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு
           தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.


            இந்தாண்டு கோடை முகாமில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி, வரும் 9ம் தேதி, துவங்குகிறது. கோடை கால பயிற்சி வரும், 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், அடிப்படை அறிவியல், உயிர் அறிவியல், நானோ தொழில்நுட்பம், பல்நோக்கு தொழில்நுட்பம் குறித்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

              வானவியல் முகாம், மே, 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மேல்படிப்பில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என, துறை வல்லுனர்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி, வரும், 17ம் தேதி நடக்க உள்ளது.

              இதில், மருத்துவம், பொறியியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறை வல்லுனர்கள் வழிகாட்டுவர்.

              தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் கூறுகையில், "கோடை கால பயிற்சி முகாமில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்களும், "பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்" என்ற நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம்" என்றார்.

மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

            தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.


              இதற்காக, ஒரு மாணவருக்கு, ரூ.2,800 வீதம், 6, 500 பேருக்கு, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க,7 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை, ஜூன் மூன்றாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகளை துவக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்

               டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.


                  கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர்.

           ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில் சேரவில்லை. இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

                இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணிநியமன கவுன்சிலிங் நடக்கிறது.

                  தேர்வில் வெற்றி பெற்று மறு கவுன்சிலிங் அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு பெறாமல் 
Dir. of School Education: Application for the post of Coordinator for IEDSS
Public Services – Equivalence of Degree – M.Tech., (Environmental Science & Tech) as equivalent to M.E., (Environmental Engineering) – Recommendation of Equivalence Committee –Orders – issued.
தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்
          
            தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

           இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் தெரிவித்தது, “பள்ளி வேலை நாட்கள் முடிவதற்குள் கலந்தாய்வு குறித்து விவரங்கள்  அறிவித்தால் தான் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளிக்க ஏதுவாக இருக்கும்.
                 இதுவரை அறிவிப்பு ஏதும் வராததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வித் துறை இயக்குனருக்கு இதுகுறித்து வலியுறுத்தி கடிதம் அளித்ததோடு நேற்று மாலையும் இன்று காலையும் தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசுகையில், கல்வித்துறை அமைச்சர் மற்றும்  கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து விட்டு இன்று (26.04.2013) மாலைக்குள் இது குறித்து உறுதியான தகவலை தருவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

              கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
                   அதனால் இவற்றைத் தலைமையாசிரியரோ பிற ஆசிரியர்கள் சேர்ந்தோ தமது பொறுப்பில் வைத்திருந்துவிட்டு கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மறுதிறப்பு நாளன்று மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் கோடை விடுமுறையில் மடிக்கணினி களவு போனதும் அப்பள்ளித் தலைமையாசிரியர் பணிநிறைவு பெற்ற பின்னரும் அப்பிரச்சினை அவருக்குத் தீராத தலைவலியாக இருந்ததும் நாளிதழில் வெளியானதாக நாம் அறிந்துள்ளோம்! ஆகவே பள்ளியின் முக்கியத் தளவாடங்களையும் உபகரணங்களையும் பாதுகாப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment