Thursday, February 28, 2013

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை



மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு

வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். 

மீதம் உள்ள, 185 பணியிடங்களை நிரப்ப, நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள் விவரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்படாது. இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.


உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...? 

முன்புறத்தில், டிரைவருக்கு வலதும், இடதுமாக 2 அல்லது 3 பேர், பின்புற இருக்கையிலும், இடையில் அமைக்கப்பட்டுள்ள கட்டையிலுமாகச் சேர்த்து 7 அல்லது 8 பேர் என மொத்தம் பத்துக் குழந்தைகள், கம்பிகளையும், உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு அன்றாடம் பயணிக்கிறார்கள். பார்க்கும்போதே பதறுகிறது மனசு...

ஆனால், இப்படித்தான் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விட்டு, குதூகலமாக "டாட்டா" காட்டுகிறார்கள் பெற்றோர்கள். கேட்டால், "நம்ம சக்திக்கு ஆட்டோவுலதான் அனுப்ப முடியும்" என்பார்கள்; ஆட்டோக்காரர்கள், "பெட்ரோல் விக்கிற விலைக்கு இத்தனை பேரை ஏத்திட்டுப் போனால்தான் கட்டுப்படியாகுது" என்பார்கள். 

ஆட்டோவில் புளி மூட்டைகளைப் போல, குழந்தைகளை அடைத்துக் கொண்டு போனாலும், வாங்கும் கட்டணத்தில் இவர்கள் குறைவு வைப்பதில்லை; ஆபத்தான வகையில் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலும், வேகத்தையும் குறைப்பதில்லை. ஏதேனும் ஒரு விபரீதம் நிகழும் வரை, இத்தகைய விதிமீறல்கள் யாரையும் உறுத்துவதில்லை.

வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தினமும் ஆயிரம் வேலை இருக்கிறது. பத்திரிக்கையில் படம் பிடித்துப் போட்டால், இரண்டு நாட்களுக்கு நாலைந்து ஆட்டோக்களைப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்; மூன்றாவது நாளில் அவர்களின் மாமூல் பணிக்குத் திரும்பி விடுவார்கள். 

ஆட்டோக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய், ஒரு மனுவைக் கொடுத்து விட்டு, மறுபடியும் தங்கள் அன்றாடப் பயணத்தைத் தொடர்வார்கள். இதில், ஆட்டோக்காரர்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை. 

மாணவ, மாணவியர்க்கான தனி போக்குவரத்தை உருவாக்காத அரசாங்கம், பல கோடி ரூபாய்களில் கட்டடங்கள் கட்டினாலும் தேவையான பஸ்களை இயக்க மறுக்கும் பள்ளி நிர்வாகங்கள், விதிமீறலைத் தடுக்காத போக்குவரத்துத்துறை அலுவலர்கள், சிக்கனம் என்ற பெயரில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத பெற்றோர்கள்... எல்லோருமே தவறிழைப்பவர்கள்தான். 

இத்தனை பேருடைய தவறுகளால், ஒரு மழலை கூட ரத்தம் சிந்தி விடக்கூடாது என்பதுதான் நமது மன்றாட்டு.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு 10 சதவீதம் பாஸ்!

       மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, கடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய தேர்ச்சி விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.


       கடந்த அக்டோபர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வை (செட்) 51,699 மாணவர்கள் எழுதினர். இதில் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 41,164 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,396 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி விகிதம் 3.39 சதவீதம். 2002-ஆம் ஆண்டில் இத்தேர்வில் தேர்ச்சி 0.68 சதவீதம். 2004-ஆம் ஆண்டில் 0.85 சதவீதமாகவும் 2006-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாகவும் 2008-ஆம் ஆண்டில 2.19 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் இருந்தது. தற்போதைய தேர்வில் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


          பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 9 சதவீதம் பேர் தேர்ச்சியடையும் மதிப்பெண்ணையே கட் ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயித்து, தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதன்படி, இத்தேர்வு எழுதிய தமிழ்ப்பாட மாணவர்களில் 5,886 பேரில் 826 பேர் (14.03 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் அறிவியல் பாடத்தில் 2,639 பேரில் 136 பேரும் வணிகவியல் பாடத்தில் 5,484 பேரில் 630 பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 6,587 பேரில் 589 பேரும் பொருளாதாரப் பாடத்தில் 2,410 பேரில் 280 பேரும் கல்வியியல் பாடத்தில் 2,164 பேரில் 264 பேரும் ஆங்கிலத்தில் 4,605 பேரில் 572 பேரும் வரலாறு பாடத்தில் 2,815 பேரில் 387 பேரும் நூலக அறிவியலில் 1,118 பேரில் 149 பேரும்  உயிர் அறிவியலில் 4,863 பேரில் 501 பேரும் மேலாண்மை பாடத்தில் 2,456 பேரில் 317 பேரும் கணிதத்தில் 4,778 பேரில் 329 பேரும் இயல் அறிவியலில் 2,638 பேரில் 125 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுயாளர் தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், நூலக அறிவியல் போன்ற பாடங்களில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத நிலை இருந்தது. தற்போது 27 பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

           அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களும் அரசுக் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் செட் தேர்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இத்தேர்வில் தகுதி பெற்ற பலரும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இத்தேர்விலும் தகுதி பெற்று பிஎச்டி படித்துள்ள மாணவர்கள்தான் பெரும்பாலும் விரிவுரையாளர் பணியில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

ஆயிரம் காலி இடங்கள்!

          தமிழ்நாட்டில் உள்ள 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 1063 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. முக்கியப் பாடப்பிரிவுகளில் உள்ள உத்தேசக் காலி இடங்கள் விவரம்:

தமிழ்  
76
ஆங்கிலம்
140
கணிதம்
135
இயற்பியல்
100
வேதியியல் 
95
தாவரவியல்
60
விலங்கியல்
55
கம்ப்யூட்டர் சயின்ஸ்
95
வரலாறு
77
பொருளாதாரம்
58
வணிகவியல்
75
அரசியல் அறிவியல்
5
நிர்வாகவியல்
8
புள்ளியியல்
18

பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
         முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5  ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.

             எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.


எய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள

        எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போன்று, அமைக்கப்பட்ட புதிய 6 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், இந்த 2013ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்.

        இதுதொடர்பான அறிவிப்பை, மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார். இதற்காக, ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

         அந்தக் கல்லூரிகள், ஜோத்பூர், போபால், ரிஷிகேஷ், புபனேஷ்வர், ராய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில், கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாணவர் சேர்க்கையைத் துவக்க, அனுமதி வழங்கப்பட்டது.

         இக்கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள், இந்தாண்டு முதல் செயல்படத் தொடங்கும்.

இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!

     பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப் பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

        தேர்வை வெற்றிகரமாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற நம் இணையதளம், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை, மாணவர்களுக்கு உரித்தாக்குகிறது.

01-03-2013
(வெள்ளிக்கிழமை)
மொழிப்பாடம் முதல் தாள்(தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்)
04-03-2013
(திங்கட்கிழமை)
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
06-03-2013
(புதன்கிழமை)
ஆங்கிலம் முதல் தாள்
07-03-2013
(வியாழக்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்
11-03-2013
(திங்கட்கிழமை)
இயற்பியல்/பொருளாதாரம்/உளவியல்
14-03-2013
(வியாழக்கிழமை)
கணிதம்/விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ்
15-03-2013
(வெள்ளிக்கிழமை)
ஹோம் சயின்ஸ்/புவியியல்/வணிகவியல்
18-03-2013
(திங்கட்கிழமை)
வேதியியல்/சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி
21-03-2013
(வியாழக்கிழமை)
உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ்
25-03-2013
(திங்கட்கிழமை)
கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ்
27-03-2013
(புதன்கிழமை)
அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள்/அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல்

        தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க. 
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்

         தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

              பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா, விளையாட்டு, இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி, பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில், ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன.

             ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு" வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ" கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி" கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.

                புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%
           மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.


         தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன. மொத்தம், 8 லட்சத்து, 4,534 மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர். மாணவர், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேரும்; மாணவியர், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 746 பேரும் எழுதுகின்றனர். மாணவரை விட, மாணவியர், 56 ஆயிரத்து, 958 பேர், கூடுதலாக எழுதுகின்றனர்.

             மொத்த மாணவ, மாணவியரில், 69.60 சதவீதம் பேர், தமிழ் வழியில், அனைத்து தேர்வுகளையும் எழுதுகின்றனர். மாணவர், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 903 பேரும்; மாணவியர், 3 லட்சத்து, 8,061 பேரும், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். மொத்தத்தில், 5.59 லட்சம் பேர், தமிழ்வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில் தேர்வை எழுதுகின்றனர்.

               ஆங்கில வழியில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 570 பேர் எழுதுகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு, நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 69 சதவீதம் பேர், தமிழ் வழியில், பிளஸ் 2 தேர்வை எழுதுவது, எதிர்காலத்தில், அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளில் சேர, ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும்.
தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற, குரூப்-4 நிலையிலான அரசுப் பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தாலே போதும். இந்த மாணவ, மாணவியர் அனைவரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும், தமிழ் வழியில் எழுதியிருப்பர். மேலும், பிளஸ் 2 தகுதி நிலையில், அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும், தமிழ் வழி கல்வி, உதவியாக இருக்கும்.

             ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

                 சென்னை நகரில், 406 பள்ளிகளில் இருந்து, 51 ஆயிரத்து, 531 பேரும், புதுச்சேரியில் 107 பள்ளிகள் சார்பில், 12 ஆயிரத்து, 611 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

              
Latest Materials - 2013
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

          நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை

* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.

*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி

* சிகரெட் மீதான கலால் வரி 18 விழுக்காடு அதிகரிப்பு.

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

* ஒரு லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் புதிய எப்.எம். சேனல் தொடங்கப்படும்.

* ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நில ஒப்பந்தங்கள் மீதான டிடிஎஸ் 1 விழுக்காடாக நிர்ணயம்.

* அஞ்சல் நிலையங்களில் வங்கிப் பணிகளுக்கு ரூ.532 கோடி.
* ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் உடைய உள்ளூர் கம்பெனிகளுக்கு 5-10% சர்சார்ஜ் விதிக்கப்படும்

* கல்வி வரி தொடரும்

* அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ் ஒரே ஒரு நிதியாண்டுக்கு மட்டுமே


* 2014 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.3 %

* வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும்;ஒரு ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களை தயார்படுத்த முடியும்

* காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.

* நிலக்கரி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ரூ.253 கோடி செலவில் பாட்டியாலாவில் அமைக்கப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 கோடி பேருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு.

* விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு ரூ.5,400 கோடி ஒதுக்கீடு.

* அணு சக்தி துறைக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

* பாதுகாப்பு துறைக்கு ரூ.2,20,000 கோடி ஒதுக்கீடு.
 * நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி 43 விழுக்காடு. * கடந்த ஆண்டில் இந்தியாவை விட வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவும், இந்தோனேஷியாவும் மட்டுமே. * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே. * மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.
* சர்வதேச பொருளாதாரம் 3.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக சரிவு

* 2013-14 ல் சீனா மட்டுமே இந்தியாவைவிட வேகமாக வளர்ச்சி அடையும்
 * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே. * மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. * பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக 41,000 கோடி மற்றும் 28,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. * மொத்த செலவினம் 16,30,825 கோடி ஆக உள்ளது. இதில் 5,55,322 கோடி திட்டச் செலவுகள். * சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகள் நலனிற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவத் துறைக்கு மொத்தமாக 33,000 கோடி ஒதுக்கீடு.

*கல்வித் துறைக்கு ரூ.65,000 கோடியும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.27,257 கோடியும் ஒதுக்கீடு.

*குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ.11,700 கோடி நிதி ஒதுக்கீடு.

*குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

*தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி உதவித் தொகை ரூ.5,200 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறைக்கு ரூ. 27,500 கோடி ஒதுக்கீடு
* *தூய்மையான குடி நீர் வழங்க ரூ.15,260 கோடி ஒதுக்கீடு
* மருத்துவ கல்வி, பயிற்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு

* ஊனமுற்றோர் நலத்துறைக்கு ரூ. 110 கோடி ஒதுக்கிடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ. 37,330 கோடி ஒதுக்கீடு. இதில் ரூ.21,239 கோடி புதிய தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும்

* ஆயுஷ் திட்டத்திற்கு ரூ. 1069 கோடி ஒதுக்கீடு

* AIIMS போன்ற நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு

* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு

* மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 13,215 கோடி ஒதுக்கீடு

* குழந்தைகள் நலம் மற்றும் கல்விக்கு ரூ. 17,700 கோடி ஒதுக்கீடு

* தண்ணீர் சுத்திகரிப்புக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு
* உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்கும்

* வேளாண் ஏற்றுமதியால் ரூ.1,38,403 கோடி வருவாய்

* வேளாண் அமைச்சகத்திற்கு ரூ. 27,049 கோடி  ஒதுக்கீடு

* கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

* சராசரி வேளாண் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது

* கிழக்கு இந்திய மாநிலங்களில் ரூ.1000 கோடி அளவுக்கு பசுமை புரட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளது.

* வேளாண் கடன் இலக்கு ரூ. 7 லட்சம் கோடி.

* ராய்ப்பூர் மற்றும் சட்டீஸ்கரில் தேசிய உயிரியில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்

* ராஞ்சியில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப மையம்

* தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ரூ.10000 கோடி பெறும்

*13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளுக்கும் ஏடிஎம் வசதி 2014 ஆண்டிற்குள் வழங்கப்படும்.

*பசுமைப் புரட்சி செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி.

*சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மேம்பாட்டிற்கு ரூ.1,061 கோடி ஒதுக்கீடு.

*கைத்தறி துறைக்கு கூடுதலாக ரூ.96 கோடி ஒதுக்கீடு.

*சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 ஆண்டு வரிச் சலுகை.

*விவசாயத் துறையின் சராசரி வளர்ச்சி 3.6 விழுக்காடாக உள்ளது.

*மேற்குவங்கம், ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு.

*கிராமப்புற முன்னேற்றத்திற்காக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு.

*உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

*ரூ.25 லட்சம் வரையிலான முதல் வீட்டுக் கடன் வட்டியில் மேலும் ரூ.1 லட்சம் குறைக்கப்படுகிறது.

*தூத்துக்குடி துறை மேம்பாட்டிற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.

*மின் இயந்திரங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.

*உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்களாக இருக்கும்.

*வேளாண் ஏற்றுமதி மூலம் ரூ.1,38,403 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

*நபார்டு மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.17,000 கோடி

*ஊட்டச்சத்து பயிர் சாகுபடி முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.300 கோடி

*மாற்றுப் பயிர் சாகுபடி வளர்ச்சிக்கு ரூ.75 கோடி

*கேரளா, அந்தமான் தென்னங்கன்று வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.75 கோடி

*புதிய தேசிய சுகாதாரப் பணித் திட்டத்திற்கு ரூ.21,239 கோடி.

*இந்திரா அவாஸ் திட்டத்திற்கு ரூ.80,195 கோடி ஒதுக்கீடு.

*சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.37,300 கோடி ஒதுக்கீடு.

*ஜவஹர்லால் நேரு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.14,873 கோடி ஒதுக்கீடு.

*4 உள் கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.25,000 கோடி நிதி திரட்ட முடிவு.

* குழந்தைகள் நலனிற்காக ரூ.77,236 கோடி ஒதுக்கீடு. 
*ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 2,400 கோடி

* கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டிவிகிதத்தில் தொழில் மூலதனம்

*13 பொதுத் துறை வங்கிகள் 2013-14 ல் ரூ.14000 கோடி மூலதனமாக பெறும்

* அனைத்து கூட்டுறவு வங்கிகளும் CBS கீழ் கொண்டுவரப்படும்

* அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் தங்களது சொந்த இடத்திலேயே ஏடிஎம் இயந்திரங்கள் 

* ரூ. 100 கோடி தொடக்க முதலீட்டில், இந்தியாவின் முதல் பெண்கள் வங்கி பொதுத் துறை வங்கியாக தொடங்கப்படும்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

         அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.

         கடந்த ஆண்டுதான் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வரி செலுத்துபவர்களுக்கு ரூ.2,500 வரி த‌ள்ளுபடி.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

      2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி

         ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.

          2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றா‌ர்.

                இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ‌சித‌ம்ப‌ர‌ம் கூ‌றினா‌ர்.
6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்

       அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
 
 
             அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்

       ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
 
      அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

           எந்த நாகரிகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது.

           வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

          இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.

             தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள்.

             பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்" நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

           ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக் கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது" என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை" கண்டுபிடித்தார்.

           "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது" என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

      கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Monday, February 25, 2013

TENTH ENGLISH STUDY MATERIALS FOR PAPER I &II




குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 - கல்வி விழிப்புணர்வு நாடகம், கல்வி விழிப்புணர்வு பாடல் மற்றும் மெட்டுகள்

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்.

எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 76 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட் வழங்கப்படும்.

கணித திறமையை வளர்த்துக் கொள்ள....

உங்களின் குழந்தைகள் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேக இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக
அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.
கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது.

இணையதள முகவரி: www.mathplayground.com

இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.
கல்விச் சேவைக்காக விருதுபெறும் பேராசிரியர்

திருச்சி என்.ஐ.டி.டி., பேராசிரியரின் கல்வி சேவையைப் பாராட்டி தி இந்தியன் இன்டர்நேஷனல் பிரன்ட்ஷிப் சொசைட்டி, "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" பட்டத்தை வழங்கியது.
திருச்சி தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கோபி. இவர் தொழில் நுட்பத்துறையில் நான்கு நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் கல்விச் சேவையைப் பாராட்டி, புதுடில்லி இந்திய இன்டர்நேஷனல் சென்டரில் நடந்த பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயணசிங் "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" விருதையும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் சயித் சிப்டி ரஷி "குளோரி ஆப் இந்தியா கோல்ட் மெடல்" விருதையும் வழங்கினர்.

இவர் எழுதிய புத்தகங்கள், கேம்பிரிட்ஜ் மஸ்ஸசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்க கல்வி நிறுவன நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி

"தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட் பெற, டி.பி.ஐ., வளாகத்தில், குவிந்தனர். ஒரே நாளில், அதிக மாணவ, மாணவியர் திரண்டதால், ஹால் டிக்கெட் பெற முடியாமல், அவதிக்குள்ளாயினர்.
மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, தத்கால் திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, நேற்றும், இன்றும், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 1000 மாணவ, மாணவியர் குவிந்தனர். இவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்க, நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, கூட்டம் திரண்டதால், ஹால் டிக்கெட் வழங்குவதில், பிரச்னை ஏற்பட்டது.

ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைக்க முயற்சித்தார். அது நடக்கவில்லை. இதனால், அவர் சோர்ந்துபோய், ஓரங்கட்டினார். கடைசி நேரத்தில், அவசரம், அவசரமாக ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்னைக்கு காரணம் என, தேர்வர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு, 300 பேர் வீதம், 4,5 நாட்கள் வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


LET US LEARN TO MAKE A SIMPLE ROCKET




CLICK TO VIEW THE VIDEO
ரத்தாகுமா? ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி... அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி - நாளிதழ் செய்தி

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை - 2009-10 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது - விவரம் கோரி உத்தரவு.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; மாணவ, மாணவியருக்கு பரிசு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில், திருப்பூர் பெம் பள்ளியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி, நேற்றும், நேற்று
முன்தினமும் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள், கண்காட்சியில் வைக்கப்பட்டன. ஓவிய போட்டியிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஓவியப்போட்டி ஜூனியர் பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி துர்கா தேவி முதலிடம்; வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் மதுசுதன் பாரிக் இரண்டாமிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில், கே.எஸ்.சி., அரசு பள்ளி பிளஸ் 1 மாணவன் பாலசந்தர் முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராகேஷ் இரண்டாமிடம் பெற்றனர்.

பணிமனை மாதிரி (ஒர்க்ஷாப் மாடல்) போட்டியில், பெம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ரோசினி, அஸ்வதி, ரக்ஷன்யா முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், ஹரீஸ், இசாத் அகமது இரண்டாமிடம்; கே.எஸ்.சி., பள்ளி மாணவர்கள் மோகன், அரவிந்த், பிரகாஷ் ஆறுதல் பரிசு பெற்றனர்.

ஆலோசனை தரும் (ஐடியா பிரசன்டேசன்) போட்டியில், சுயசிந்தனை கருத்துகளை கம்ப்யூட்டர் வாயிலாக தெரிவித்த வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சாருலதா முதலிடம் பெற்றார்; பெம் பள்ளியை சேர்ந்த ரிதன்யா, சிவானி, ரித்திகா இரண்டாமிடம்; ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் திவ்யபாரதி, புவனேஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது.
ஆர்வம் இருந்தால் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
"நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றிய ஆர்வம் இருந்தால், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்," என, ரி-சாட்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி பேசினார்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், முதலாவது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு, "என்கோனெட்13&' நேற்று நடந்தது. துவக்க விழாவில், பெங்களூரு இஸ்ரோ "ரி-சாட்-1&' திட்ட இயக்குனர் வளர்மதி பேசியதாவது:

விஞ்ஞானி ஆவதற்கும், தொழில்நுட்ப வல்லுனராகவும் கல்வியே உதவுகிறது. கற்றலை மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டால் விரைவாக முன்னேற முடியும். அறிவியல் தொழில்நுட்பத்திலும், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதிலும் இந்தியா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. பல சிக்கலான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ராக்கெட் ஒன்றை ஏவுவது மிகவும் கடினமான பணி. நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு செயற்கைகோள் வெற்றி பெறும்.

இன்ஜினியரிங்,தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றியும், அவை எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்து, அவை இயங்கும் முறைகளை அறிந்தாலே தொழில்நுட்ப அறிவு உயரும். இவ்வாறு, அவர் பேசினார்.
வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்கம்

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா வரவேற்றார்.
தமிழக ஐ.சி.டி அகடமியின் இணைத்தலைவர் அன்புதம்பி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: அகடமி சார்பில், மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தேர்வு செய்யப்படும் 5,000 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்றைய உலகில் வேலை வாய்ப்பு போட்டிகள் என்பது தேசிய அளவில் இருக்கும். இதை மாணவர்கள் எதிர்கொள்ள தங்கள் கல்வி, மென்திறன், தனித்திறன் அனைத்தையும் மேம்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.

இந்த வாயப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப திறன் என்ற பிரிவுகளின் கீழ் நடப்பு ஆண்டில் 220 மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Sunday, February 24, 2013

ஐந்து நட்சத்திர உணவகத்தில் பஞ்சு மேத்தையில் அமர்ந்து உணவு அருந்தும்பொழுது கிடைக்கும் சுகம் சுவையை விட...

வயல் வாய்கால் வரப்பில் அமர்ந்து வாழை இலை போட்டும் சாப்பிடுவதில் சுவையும் சுகமும் அதிகம்...!


RECRUITMENT OF WOMEN CONSTABLE (EXECUTIVE) IN DELHI POLICE - 2013

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்






பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...!



'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...!

USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை. முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

பிளாப்பி(Floppy) கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb கள். இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவைதான். பயந்துவிடாதீர்கள். இதற்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகம். அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொள்ளும். உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் அற்புதமான ஒரு செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.

USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.

http://www.usbalert.nl/usbalert/download.php
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.


இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar -ல் USB alert செய்திப்படம் காட்டும்.

இம் மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
‎'

USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை. முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

பிளாப்பி(Floppy) கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb கள். இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவைதான். பயந்துவிடாதீர்கள். இதற்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகம். அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொள்ளும். உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் அற்புதமான ஒரு செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.

USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.

http://www.usbalert.nl/usbalert/download.php
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.


இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar -ல் USB alert செய்திப்படம் காட்டும்.

இம் மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

Saturday, February 23, 2013


தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.

Friday, February 22, 2013

MATHS ACTIVITIES

CLICK TO LINK

இந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன 

வேலைக்குச் செல்ல முடியும்?



      கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


         கேடட் என்ட்ரி (பிளஸ்  2யு.பி.எஸ்.சி., நடத்தும் நேவல் அகாடமி தேர்வு மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கிராஜுவேட் ஸ்பெஷல் என்ட்ரி (நேவல் அகாடமி, கோவா). சி.டி.எஸ்.இ., தேர்வு மூலமாக சேர்க்கை. 19 முதல் 22 வயதுள்ள பி.எஸ்சி., (இயற்பியல், கணிதம் படித்த) அல்லது பி.இ., முடித்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

 என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி நேவல்
அகாடமி, கோவா. 19 முதல் 24 வயதுள்ள ஆண்கள் மட்டும். பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் படித்த அல்லது பி.இ., முடித்திருக்கும் என்.சி.சி., சி சான்றிதழ் பெற்றவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

       டைரக்ட் என்ட்ரி நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பணிகள். பி.இ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் முடித்த அல்லது எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் இவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

          டைரக்ட் என்ட்ரி லா கேடர் 22 முதல் 27 வயதுள்ள ஆண்கள் சட்டத்தில் பட்டப்படிப்பு 55 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் கேடர் குறுகிய கால பணி களுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பொருளாதாரம் அல்லது பி.காம்., அல்லது பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் அல்லது பி.இ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் தகுதி.  ஏடிசி குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல் அல்லது கணிதம் அல்லது இவற்றில் எம்.எஸ்சி., குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி.

           இதைத்தவிர கல்விப் பிரிவில் எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்திருப்போருக்கும் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படித்திருப் போருக்கும் பணிகள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் பி.இ., தகுதி பெற்றவருக்கும் பணியிடங்கள் உள்ளன.

                      உங்களது தகுதிக்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து அதன் போட்டித் தேர்வுக்காக தயாராக வேண்டும். மேலும் ராணுவ பணிகளுக்கு உடற்திறன் அவசியம் என்பதால் நமது ராணுவ பிரிவுகளின் இன்டர்நெட் தளங்களை பார்வையிட்டு பிற விபரங்களை அறியவும்.


எந்த இடத்தில் எந்த பல்கலை?


இந்தியாவில் உள்ள பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகள், தகுதி, சேர்க்கை முறை, கேள்வித்தாள்கள், தேர்வுத் தேதி, தேர்வு முடிவுகள் போன்றவை பற்றிய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதல் 20 இடங்களை பெற்ற பல்கலைகள்:

தரம்பல்கலைக்கழகங்கள்அமைவிடம்
1டில்லி பல்கலைடில்லி
2ஜவகர்லால் நேரு பல்கலைடில்லி
3பனாரஸ் இந்து பல்கலைவாரணாசி
4கல்கத்தா பல்கலைகோல்கட்டா
5சென்னை பல்கலைசென்னை
6ஐதராபாத் பல்கலைஐதராபாத்
7உஸ்மானியா பல்கலைஐதராபாத்
8ஜாமியா மிலியா பல்கலைடில்லி
9பெங்களூரு பல்கலைபெங்களூரு
10எம்.எஸ். பரோடா பல்கலைவதோரா
11அலிகார் முஸ்லீம் பல்கலைஅலிகார்
12ஆந்திரா பல்கலைவிசாகப்பட்டினம்
13அலகாபாத் பல்கலைஅலகாபாத்
14பிர்லா தொழில்நுட்ப டெக்னாலஜி அண்டு சயின்ஸ்பிலானி
15லக்னோ பல்கலைலக்னோ
16பாண்டிச்சேரி பல்கலைபுதுச்சேரி
17மைசூரு பல்கலைமைசூரு
18காமராஜ் பல்கலைமதுரை
19கோவா பல்கலைகோவா
20குருநானக் தேவ் பல்கலைஅமிர்தசரஸ்