Thursday, February 14, 2013


CPS interest 8.6%- அரசாணை எண்:38- நாள்: 11.02.2013 

  click this link to download G.O


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?

             தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது. 
 
           இவர்களுக்கு மாதத்தில் 12 அரை நாட்கள் பணி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முடிவிலும் அவர்களின் வருகை குறித்து, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், கணக்கெடுத்து அதற்கான வருகை விபரத்தை, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (அனைவருக்கும் கல்வி திட்டம்) அனுப்புவர். அங்கு பணிச்சுமையால் வருகை விவரம் சம்பள "லிஸ்ட்'டுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்காததால், சம்பளம் கிடைப்பது தாமதமாகிறது. ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதிக்கு பின் தான் இந்த ஆசிரியர்களுக்கு கையில் சம்பளம் கிடைக்கிறது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
 
         உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: பகுதிநேர பணியாக அரசே நியமித்ததால், பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர்கள்கூட, அப்பணியை ராஜினமா செய்துவிட்டு, இந்த வேலைக்கு வந்தனர். பணி நிரந்தரமாகும் நம்பிக்கையில், ரூ.5,000 சம்பளத்திற்கு வேலையில் உள்ளனர். அதைகூட அவர்கள் உரிய நேரத்தில் பெறமுடியவில்லை. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தாலே சம்பளம் வழங்கும் வகையில் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும், என்றார்
கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் பற்றி அறிவோமா?

          கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் என்ற நிறுவனமானது, ஆர்கிடெக்டுகளின் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, இத்துறை தொடர்பான கல்வி மற்றும் தொழிலை, இந்தியாவில் முறைப்படுத்துகிறது. ஒருவர் ஆர்கிடெக்டாக தொழில்புரிய வேண்டுமெனில், இந்த கவுன்சிலில் பதிவுசெய்ய வேண்டும்.

          இந்த பதிவை மேற்கொள்ள, ஒருவர் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதிவானது, ஒருவர், டைட்டில் மற்றும் ஆர்கிடெக்ட் Style -ஐ பயன்படுத்த அதிகாரமளிக்கிறது. இந்த கவுன்சிலில் பதிவுசெய்துள்ள ஆர்கிடெக்டுகளின் அமைப்பு, இந்த டைட்டில் மற்றும் ஸ்டைலைப் பயன்படுத்த முடியும்.
      லிமிடெட் கம்பெனிகள், தனியார் மற்றும் பப்ளிக் நிறுவனங்கள், சொசைட்டிகள் மற்றும் இதர சட்டம் தொடர்பான நபர்கள் ஆகியோர் இந்த Title மற்றும் Style -ஐ பயன்படுத்த முடியாது மற்றும் இந்த ஆர்கிடெக்ட் தொழிலை மேற்கொள்ள முடியாது.
          அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை வழங்கும் ஆர்கிடெக்சர் தொடர்பான படிப்புகளை இந்தியாவில் மொத்தம் 135 கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளின் தர நிலைகள், ஆர்கிடெக்சர் கவுன்சிலால் மதிப்பிடப்படுகின்றன.
          கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் விதிமுறைகள், 1983, இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தகுதிகள், படிப்பின் காலஅளவு, ஊழியர்களின் தர நிலைகள் மற்றும் தங்குமிடம், பாட உள்ளடக்கம் மற்றும் தேர்வு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு.

10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012

10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011


12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2012


10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தல்

      10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
      மார்ச் 2013ல் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வினை, முதன் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (Direct Private Candidates) தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளியிலேயே செய்முறைத் தேர்வுகளுக்கு வருகை புரிதல் வேண்டும்.

       செய்முறைத் தேர்வுகள் பிப்.,20 முதல் பிப்.,28ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகளில் கலந்து கொள்ள தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Admission Slip) சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பிப்.,18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

         செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான செய்முறை நோட்டுப் புத்தகத்தை (Record Note) தவறாது செய்முறைத் தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட தேர்வர்கள் மட்டுமே கருத்தியல் (Theory) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

           செய்முறைத் தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை அணுகலாம்.

ஆங்கிலப் பள்ளி துவக்க அனுமதி கோருகிறது முஸ்லிம் அமைப்பு

         இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.

      இதன் மூலம், இஸ்லாம் குறித்த உலக பார்வையை மாற்ற விரும்புவதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் முக்கியமான மத அமைப்புகள், தருல் உலூம் தியோபந்த் மற்றும் தருல் உலூம் வக்ப் ஆகியவை.

         இந்த அமைப்புகளின் தலைவர்கள் இடும் கட்டளை, அறிவுரைகளை, வட மாநில முஸ்லிம்கள் மதித்து நடப்பர். உருது மொழி பள்ளிகளை துவக்கி, மத வழிபாட்டு முறைகளையும், கொள்கைகளையும் மட்டுமே போதித்து வந்த இந்த அமைப்பு, இப்போது முதல் முறையாக, ஆங்கிலத்திற்கு மாற உள்ளது.

      உத்தர பிரதேசத்தில் ஆங்கில மொழி பள்ளி துவக்க, அனுமதி வழங்குமாறு, முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு, இந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை, முதல்வருக்கு, சிறப்பு பிரதிநிதி மூலம் கொடுத்து அனுப்பியுள்ள, இந்த அமைப்பின் தலைவர்கள் கூறியதாவது:

          இஸ்லாம், ஆங்கிலத்திற்கு எதிரானது என்ற கருத்து, உலகம் முழுதும் நிலவுகிறது. அதை தகர்க்கும் நோக்கில், எங்கள் அமைப்பின் சார்பில், முழுதும் ஆங்கிலம் கற்பிக்கும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற கல்வி திட்ட முறையில், பள்ளி துவக்க அனுமதி கேட்டுள்ளோம்.

          பள்ளி துவக்க அனுமதி கிடைத்தால், இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே பாடம் நடத்த தயாராக உள்ளோம். இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்படும், "ஆங்கில எதிர்ப்பாளர்கள்" என்ற முத்திரையை அகற்ற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

          அது போல், டில்லி, பிரகதி மைதானத்தில், கடந்த ஆண்டு நடந்த புத்தக கண்காட்சியில், இது வரை இல்லாத வகையில், இஸ்லாம் குறித்த ஆங்கில நூல்களை ஏராளமாக விற்பனை செய்த இந்த அமைப்பு, கொண்டு வந்திருந்த அனைத்து ஆங்கில புத்தகங்களையும் விற்று திரும்பியது. வரும் காலங்களிலும், ஆங்கிலத்தில் இஸ்லாம் நூல்களை எழுதவும், இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 
உயர் கல்வி தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிட கோரிக்கை

         "தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


         பொறியியல் படிப்பை போல, கலை அறிவியல் படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, நீண்ட காலமாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

        இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 11 பல்கலைக்கழகங்களில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக, எம்.ஏ., எம்.எஸ்சி., உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளில், ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தவும், வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், மாநில அரசுக்கு பரிந்துரைந்துள்ளது.

         பொறியியல் படிப்பிற்கு, மாநிலம் முழுவதும், ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 11 பல்கலைக்கழகங்கள் உள்ளதால், அந்தந்த பல்கலைக்கழகங்களில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

      இதுகுறித்து, பல்கலைகக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கையால் மட்டுமே, உயர் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க முடியும். எந்தச் சிக்கலுமின்றி அமல்படுத்த, தனியார் கல்லூரிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

         கலை அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு பாடவாரியாக கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும், தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும்.

         ஒற்றை சாளர முறையும் வெற்றி பெறும். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், விரைவில் நடக்க உள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டத்தில், இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

No comments:

Post a Comment