Thursday, February 28, 2013


எய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள

        எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போன்று, அமைக்கப்பட்ட புதிய 6 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், இந்த 2013ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்.

        இதுதொடர்பான அறிவிப்பை, மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார். இதற்காக, ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

         அந்தக் கல்லூரிகள், ஜோத்பூர், போபால், ரிஷிகேஷ், புபனேஷ்வர், ராய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில், கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாணவர் சேர்க்கையைத் துவக்க, அனுமதி வழங்கப்பட்டது.

         இக்கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள், இந்தாண்டு முதல் செயல்படத் தொடங்கும்.

இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!

     பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப் பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

        தேர்வை வெற்றிகரமாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற நம் இணையதளம், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை, மாணவர்களுக்கு உரித்தாக்குகிறது.

01-03-2013
(வெள்ளிக்கிழமை)
மொழிப்பாடம் முதல் தாள்(தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்)
04-03-2013
(திங்கட்கிழமை)
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
06-03-2013
(புதன்கிழமை)
ஆங்கிலம் முதல் தாள்
07-03-2013
(வியாழக்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்
11-03-2013
(திங்கட்கிழமை)
இயற்பியல்/பொருளாதாரம்/உளவியல்
14-03-2013
(வியாழக்கிழமை)
கணிதம்/விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ்
15-03-2013
(வெள்ளிக்கிழமை)
ஹோம் சயின்ஸ்/புவியியல்/வணிகவியல்
18-03-2013
(திங்கட்கிழமை)
வேதியியல்/சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி
21-03-2013
(வியாழக்கிழமை)
உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ்
25-03-2013
(திங்கட்கிழமை)
கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ்
27-03-2013
(புதன்கிழமை)
அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள்/அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல்

        தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க. 
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்

         தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

              பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா, விளையாட்டு, இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி, பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில், ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன.

             ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு" வழங்கப்படும். அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ" கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி" கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி" கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி" கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.

                புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%
           மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.


         தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன. மொத்தம், 8 லட்சத்து, 4,534 மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர். மாணவர், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேரும்; மாணவியர், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 746 பேரும் எழுதுகின்றனர். மாணவரை விட, மாணவியர், 56 ஆயிரத்து, 958 பேர், கூடுதலாக எழுதுகின்றனர்.

             மொத்த மாணவ, மாணவியரில், 69.60 சதவீதம் பேர், தமிழ் வழியில், அனைத்து தேர்வுகளையும் எழுதுகின்றனர். மாணவர், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 903 பேரும்; மாணவியர், 3 லட்சத்து, 8,061 பேரும், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். மொத்தத்தில், 5.59 லட்சம் பேர், தமிழ்வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில் தேர்வை எழுதுகின்றனர்.

               ஆங்கில வழியில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 570 பேர் எழுதுகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு, நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 69 சதவீதம் பேர், தமிழ் வழியில், பிளஸ் 2 தேர்வை எழுதுவது, எதிர்காலத்தில், அவர்கள், அரசு வேலை வாய்ப்புகளில் சேர, ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும்.
தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற, குரூப்-4 நிலையிலான அரசுப் பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தாலே போதும். இந்த மாணவ, மாணவியர் அனைவரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும், தமிழ் வழியில் எழுதியிருப்பர். மேலும், பிளஸ் 2 தகுதி நிலையில், அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும், தமிழ் வழி கல்வி, உதவியாக இருக்கும்.

             ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

                 சென்னை நகரில், 406 பள்ளிகளில் இருந்து, 51 ஆயிரத்து, 531 பேரும், புதுச்சேரியில் 107 பள்ளிகள் சார்பில், 12 ஆயிரத்து, 611 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

              

No comments:

Post a Comment