Monday, February 11, 2013

+2 & 10th Standard Science Practical Exam Forms
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு


         தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு 33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 
         இந்த முதல் நிலைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை விண் ணப்பதாரர்கள்www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.netஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் எம்.விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

குரூப்-1 தேர்வு முறை மாற்றம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

          "குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

          கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு:
முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

               எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

             மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

           தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார்.

          பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.
         
           எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது.

               ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

 இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

அரிய விஞ்ஞானி ஆல்வா எடிசனின் பிறந்த நாள்!

         இன்றைய உலகம் சூரியன் மறைந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார்.

       இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கன÷ கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

அறிவியல் ஆர்வம்
           ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளி பருவத்திலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்க செல்வதை நிறுத்தினார். இவரது தாயார் ஆசியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம் அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்றார். அப்போதெல்லாம், தந்திப்பதவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது.புள்ளிக் கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆப்பரேட்டர் வேலையில் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

முதல் கண்டுபிடிப்பு
           டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலையில் இருந்து விலகில நியூயார்க் சென்றார். அங்கு, &'போனோகிராப்&' எனும் ரிகார்டிங் கருவி, ஒலிநாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் தொழில் அதிபராக உயர்ந்தார்.

சரித்திர கண்டுபிடிப்பு
           அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவு. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக,&'எடிசன் மின்விக்கு கம்பெனி&'தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூட்த்தில் சேர்ந்தார். இவர்கள் 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தனர். பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட கண்டு பிடிப்புகளø உருவாக்கினார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டு பிடிப்புகளை உருவாகினீர்கள் என்று கேட்ட போது, படைப்புக்கு தேவை &'ஒரு சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் கடின உழைப்பும் தான்&' என்றார்.
இறுதி மரியாதை
          எடிசன், 1931 அக் 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்திரவிட்டார். இவரது கண்டுபிடிப்புகளை போற்றுவோம்.
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுகள் - வெற்றிகொள்ளும் முறைகள்


           இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் சட்டப் படிப்பில் சேர, கிளாட், எல்சாட், செட், ஐபியு-சிஇடி மற்றும் என்எல்யு போன்ற பல்வேறுவிதமான நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இவ்வகையான தேர்வுகளை எளிதில் வெற்றிகொள்ள, குறிப்பாக, 5 பாடங்கள் அல்லது தேர்வு பகுதிகளை சிறப்பாக படிக்க வேண்டியுள்ளது.

         ஆனால், எல்சாட்-இந்தியா தேர்வு மட்டும் இவற்றிலிருந்து வேறுபட்டது. சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றிகொள்வதற்கு தேவைப்படும் அம்சங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 ஆங்கிலப் புலமை
         சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில், ஆங்கிலப் புலமை முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆங்கில மொழியின் கீழ்கண்ட மூன்று அம்சங்களில் ஒருவர் தனது அறிவை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அவை,
வார்த்தை வளம்(Vocabulary)
 இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தம்(Grammar & Sentence correction)
வாசித்து புரிந்துகொள்ளல்(Reading comprehension)

 வார்த்தை வள மேம்பாடு
             உங்களின் பாடப்புத்தகம், செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறுவிதமான தினசரி அம்சங்களின் மூலமாக, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி, உங்களின் Vocabulary திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று, சில பயனுள்ள பயிற்சி புத்தகங்களைப் பயன்படுத்தி, இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரென் மற்றும் மார்ட்டின் ஆகியோர் எழுதிய High school English Grammar and Composition என்ற புத்தகம், ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, ஒரு பயனுள்ள புத்தகமாகும்.
             புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள, அதிகளவு படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில மீடியம் படிக்காத மாணவர்கள், தங்களின் ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள, தினமும் சில மணிநேரங்கள் தவறாமல், ஆங்கில மொழிப் பயிற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கிளாட் தேர்வில் ஆங்கில கேள்விகள்
         கிளாட் தேர்வைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடம் தொடர்பான கேள்விகள் பின்வரும் முறைகளில் கேட்கப்படும். அவை,
English Comprehension
Fill up the blanks
Spelling Test
Vocabulary - synonyms, antonyms including Latin, French and legal terms
Phrasal verbs, idioms and phrases
Para jumbles
Sentence correction tests

பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகள்
                  சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில், பொது அறிவு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். எனவே, தினமும் தவறாமல், நல்ல செய்தித்தாளை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 6 Past issues -ஐ படிப்பது சிறந்தது. ஒரு ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை படித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையானவற்றை குறிப்பெடுத்துக் கொள்வதும் அவசியமானது.

முக்கியமான தலைப்புகள்
            சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், நிதி தொடர்பான விஷயங்கள், ஐ.நா அமைப்பு மற்றும் அது தொடர்பான ஏஜென்சிகளின் செயலபாடுகள், உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் ஆகிய முக்கிய சர்வதேச அம்சங்கள் குறித்து, தேர்வுக்கு தயாராவோர் கவனம் செலுத்த வேண்டும். இணையதளங்களில், பொதுஅறிவு போர்டல் சென்று, கடைசி ஆறுமாத விஷயங்களை நன்கு படித்துக் கொள்ளவும். மலையாள மனோரமா போன்ற புத்தகங்களும் பயன்தரும்.

லாஜிக்கல் ரீசனிங்
              ஒரு மாணவரின் தர்க்க திறமை மற்றும் அறிவை சோதிக்க, இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது. பல்வேறு வகையான லாஜிக்கல் ரீசனிங் கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்பட்டிருக்கும். பொதுவாக, சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுகளில், வீசுவல் மற்றும் non - verbal reasoning போன்றவை சோதிக்கப்படுவதில்லை.

நேர மேலாண்மை முக்கியம்
             தேர்வெழுதுகையில், நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பது மிக மிக அவசியம். தேவையின்றி, எந்த கேள்விக்கும் அதிக நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது. இத்தகைய நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்க வேண்டுமெனில், தொடர்ச்சியான பயிற்சியே அதற்கு தீர்வாகும்.

Legal aptitude/Legal awareness
          லீகர் ரீசனிங் கேள்விகளில் ஒருவர் நிபுணத்துவம் பெற வேண்டுமெனில், குற்றச் செயல்கள், ஒப்பந்தங்கள், சட்டவிரோத செயல்கள், குடும்பச் சட்டம் மற்றும் பொது விதிமுறைகள் குறித்த அனைத்து விஷயங்களையும் நன்கு படித்து, ஆராய வேண்டும். இதற்கு தேவையான, பொருத்தமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

சட்ட செய்திகளைக் கேட்டல்
         சட்டம், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்த தகவல்கள், சட்ட பொது அறிவுக் கேள்வியில் மிக முக்கியமானவை. எனவே, அவை தொடர்பான செய்திகளை எப்போதும் கவனமாக கேட்டு, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நிகழும் சட்டம் தொடர்பான நிகழ்வுகள், புகழ்பெற்ற நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவைகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

           நாட்டின் முக்கிய செய்தித்தாள்களில், சட்டம் தொடர்பான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும். அவற்றை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கணிதம்
             பள்ளிப் பாடத்தில், 10ம் வகுப்பு வரை உள்ள கணிதத்தில், ஒருவரின் அறிவு சோதிக்கப்படும். இலாபம், நட்டம், விகிதாச்சாரம், அளவு, வித்தியாசம், எளிய மதிப்பீடு, சராசரிகள், நேரம் மற்றும் பணி, நேரம் மற்றும் தூரம் போன்ற அம்சங்களைத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தயாராக, ஆர்.எஸ்.அகர்வால் ஆப்ஜெக்டிவ் மேதமேடிக்ஸ் புத்தகம் போன்ற ஒரு புத்தகத்தை படிப்பது சிறந்தது. பள்ளி கணிதப் புத்தகங்களை படிப்பது மிகவும் முக்கியம். அதேசமயம், டெல்லி பல்கலை நடத்தும் 3 வருட எல்.எல்.பி. தேர்வில் கணிதக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

 டெல்லி பல்கலையின் LLB நுழைவுத்தேர்வு
           இத்தேர்வில், பொதுஅறிவு, ஆங்கிலம் மற்றும் சட்டத் திறன் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. சில சமயங்களில், லாஜிகல் மற்றும் அனலிடிகல் ரீசனிங் கேள்விகள் அதிகளவில் கேட்கப்படும். ஆனால், எப்போதும் அவ்வாறு கேட்கப்படுவதில்லை.

            முந்தைய ஆண்டுகளில் கேள்வித்தாள்களைப் படிப்பதும் அதிக நன்மை பயக்கும். மொத்தம் 175 கேள்விகளில், 100 கேள்விகளுக்கும் மேலாக, சமீபத்திய ஆண்டுகளின் கேள்வித்தாள்களில் கேட்கப்பட்ட பொதுஅறிவு/நடப்பு நிகழ்வுகள் ஆகியவை கேட்கப்படும்.
         டெல்லி பல்கலை நடத்தும் தேர்வில், சட்ட திறனாய்வு கேள்விகள், பெரும்பாலும், சட்டப் பொதுஅறிவு அல்லது சட்ட விழிப்புணர்வு போன்ற பகுதிகளிலிருந்தும், சில கேள்விகள் லீகல் ரீசனிங் ஆகிய பகுதியிலிருந்தும் கேட்கப்படும்.

எல்சாட் தேர்வு
               இது சட்டப்பள்ளி நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. ஜிண்டால் குளோபல் சட்டக் கல்வி நிறுவனம் மற்றும் ஐஐடி-காரக்பூர் போன்றவை இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் முக்கிய கல்வி நிறுவனங்களில் சில. www.pearsonvueindia.com/Isatindia என்ற வலைதளம் சென்று மாணவர்கள், தங்களுக்கு தேவையான விபரங்களை அறியலாம். மேலும், அதிகாரப்பூர்வ எல்சாட் இந்தியா கையேட்டையும் வாங்கி பயன்பெறலாம். இத்தேர்வைப் பொறுத்தவரை, பொதுஅறிவு, இலக்கணம், லீகல் ரீசனிங், கணிதம் போன்ற அம்சங்கள் கிடையாது.
 கிளாட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண்
              2013ம் ஆண்டில் கிளாட் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும். இத்தேர்வில் 200 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். English comprehension, பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், ஆரம்ப பள்ளி கணிதம், லீகல் திறனாய்வு மற்றும் லாஜிகல் ரீசனிங் போன்ற பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

No comments:

Post a Comment