சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில், திருப்பூர் பெம் பள்ளியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி, நேற்றும், நேற்று
முன்தினமும் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள், கண்காட்சியில் வைக்கப்பட்டன. ஓவிய போட்டியிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஓவியப்போட்டி ஜூனியர் பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி துர்கா தேவி முதலிடம்; வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் மதுசுதன் பாரிக் இரண்டாமிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில், கே.எஸ்.சி., அரசு பள்ளி பிளஸ் 1 மாணவன் பாலசந்தர் முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராகேஷ் இரண்டாமிடம் பெற்றனர்.
பணிமனை மாதிரி (ஒர்க்ஷாப் மாடல்) போட்டியில், பெம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ரோசினி, அஸ்வதி, ரக்ஷன்யா முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், ஹரீஸ், இசாத் அகமது இரண்டாமிடம்; கே.எஸ்.சி., பள்ளி மாணவர்கள் மோகன், அரவிந்த், பிரகாஷ் ஆறுதல் பரிசு பெற்றனர்.
ஆலோசனை தரும் (ஐடியா பிரசன்டேசன்) போட்டியில், சுயசிந்தனை கருத்துகளை கம்ப்யூட்டர் வாயிலாக தெரிவித்த வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சாருலதா முதலிடம் பெற்றார்; பெம் பள்ளியை சேர்ந்த ரிதன்யா, சிவானி, ரித்திகா இரண்டாமிடம்; ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் திவ்யபாரதி, புவனேஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment