2009-10 Appointed Science, Maths, Social Science BT's Regularisation Order
மாணவர்களே தேர்வு பயமா?
பொதுத்தேர்வை எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, ஏதோ ஒருவித பயம், பதட்டம் உண்டாகிறது. தேர்வு எழுதும் போது விடைகள் தெரிந்திருந்தாலும் பதட்டத்தினால் சரியாக எழுத முடியாமல் தோல்வியுறுகின்றனர்.
எதிர்மறையான எந்த சிந்தனைக்கும் மனதில் இடம் அளிக்க கூடாது. கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையை அறவே தவிர்ப்பது நல்லது. சக மாணவர்களுடன் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களும் அவரவருக்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு படிக்க வேண்டும். பாடங்களை புரிந்து படிப்பது, தேர்வு நேரத்தில் படித்தவை மறக்காமல் நினைவில் நிற்க உதவும்.
ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் கூறும் ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றினாலே, எளிதாக தேர்வை எதிர் கொண்டு வெற்றி பெறலாம். தேர்வு கூடத்திற்கு அவசர அவசரமாக செல்லாமல், முன்னதாகவே தேர்வு நடைபெறும் அறைக்கு சென்று ரிலாக்ஸாக இருக்கலாம். இவ்வாறு பின்பற்றினால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்.
|
ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார். பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், லேப்பை உருவாக்கி உள்ளன. www.olabs.co.in என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம். மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், "இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது. ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,&'&' என, தெரிவித்தார்.
|
கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது. அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசு நிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை, கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல். போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.
|
திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்
தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஓராண்டு பட்டய படிப்பு முடித்த மாணவர்களுக்கு, தொழில் துவங்குவதற்காக, 1,000 ரூபாய் அரசு நிதியுதவி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், 204 சமுதாய கல்லூரிகளில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு செல்லும் வகையில், 2012-13ம் ஆண்டில் பொருத்துதல், நெசவு, பின்னாலாடை, ஆடை சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல் பட்டயம், ஆயத்த ஆடை விற்பனைப்படுத்துதல், திருநங்கைகளின் மனித உரிமைக்கான சான்றிதழ் படிப்பு, சைபர் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் புலனாய்வு உள்ளிட்ட, எட்டு புதிய பட்டய படிப்புகள் துவங்கப்படுகின்றன. புதிய பட்டய படிப்புகளுக்கான, பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூனில் துவங்கும் கல்வியாண்டு முதல், புதிய பட்டய படிப்புகள் சமுதாய கல்லூரிகளில் இடம் பெறுகின்றன. இதுகுறித்து சமுதாய கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, தொழிற் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தவெளி பல்லைக்கழகத்தில் விவாதிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள, எட்டு தொழில்களில், புதிய பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுகின்றன. இதற்கு, டில்லி தொலைதூர கல்வி மாமன்றம், 20 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
|
|
No comments:
Post a Comment