Sunday, February 17, 2013

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - II ஆக பதவி உயர்வு அளித்தல் - 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல்

பிப்ரவரி 20,21 அகில இந்திய வேலைநிறுத்த ஏற்பாடு TNPTF நோட்டிஸ்

அரசு ஊழியர்களுக்கான புதிய தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி விகிதம் அதிகரிப்பு

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது. 
 
அதாவது, அந்தாண்டிற்கு பின் சேர்ந்தவர்கள் அனைவரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகையை அரசும் வழங்கி, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின் சென்னை மண்டல துணை இயக்குனர் ஆர்.கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஹால்டிக்கெட் வினியோகம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ளது. இந்த தேர்வை முதல் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிக்கூடத்திலேயே செய்முறைத்தேர்வில் பங்கேற்க வேண்டும். செய்முறைத்தேர்வு 20–ந் தேதி தொடங்கி 28–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் (சனிக்கிழமை உள்பட) காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபெறும்.

செய்முறைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரியிடம் 18 முதல் 20–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான ரெக்கார்டு நோட்டை தவறாறு தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். செய்முறைத்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி தெரிந்துகொள்ளலாம். செய்முறைத்தேர்வு குறித்து தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது.

தேர்வுக்கு அனுமதி
போட்டோவுடன் கூடிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் பின்னர் தனியே வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே தியரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு  கூறியுள்ளார்.
வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை: பட்ஜெட் தயாரிக்க குவியும் கோரிக்கைகள்

வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். இம்மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை சிதம்பரத்திடம் அளித்தனர்.


காங்கிரஸ் பரிந்துரை : வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை ‌அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.

சிதம்பரம் பதில் : @@சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முக்கிய பரிந்துரைகள் : மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இ.பி.எப்., முதலீடு : 8.5 சதவீத வட்டி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிகிறது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு, ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, நடப்பாண்டில், 8.5 சதவீதம் உயர்த்துவதற்கான குறிப்பாணை தயாரிக்கப்பட்டு முன் வைக்கப்பட்டது. 

இதற்கு, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் எடுக்கப்படும் முடிவுக்கு, வரும், 25ம் தேதி கூடும், மத்திய அறக்கட்டளை வாரிய (சி.பி.டி.,) கூட்டத்தில் இறுதி ஒப்புதல் கொடுக்கப்படும் என, தெரிகிறது. தொழிலாளர்கள் சங்க வட்டாரங்களில் கிடைத்த தகவல்படி, நடப்பாண்டில், 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.
குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. 

இதனை இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப்-2 தேர்வுகள் நடந்தன. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது: ‌முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், நேர்காணல் 22-ம் தேதி நடநக்கிறது தனியாக நேர்காணலுக்கு தகவல் அனுப்ப முடியது.என்றார்.
குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்

"குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக வளைதளம் ஒன்றில், அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, எந்த நேரமும், குரூப்-2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட, 19 வகையான பதவிகளில் உள்ள, 3,631 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஆக., 12ல், போட்டித் தேர்வு நடந்தது.இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே,"லீக்&' ஆன தகவல், தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், தேர்வு நடந்த நாளன்று தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்து, நவ., 4ல், மறு தேர்வு நடத்தியது.
வேளாண் அதிகாரிகள், 460 பேர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டது.
இவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை, 20ம் தேதி வழங்கப்படும் என, நடராஜ் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு

பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.


அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, புகார் அளிப்பதற்காக, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை சந்திக்க, பெற்றோர், சென்னைக்கு வரும் நிலை உள்ளது. இதனால், துறை இயக்குனரகத்தின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அமைப்பு சட்டத்தின் படி, பள்ளிகள் மீது, அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க, மாவட்டந்தோறும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், உறுப்பினர் - செயலராக இருப்பர்.

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், மெட்ரிக் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர் ஆகியோர், குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவிற்கு, புகாருக்கு உள்ளான பள்ளிகளில், ஆய்வு செய்யவோ, பறிமுதல் செய்யவோ, அதிகாரம் இல்லை. ஆனால், புகாரில் சிக்கும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு, சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, சம்பந்தபட்ட துறை இயக்குனர்களுக்கு, பரிந்துரை செய்யும். 

பரிந்துரையின் அடிப்படையில், சம்பந்தபட்ட துறை இயக்குனர்கள், முடிவு அறிவிப்பர். இந்தக் குழு, ஒவ்வொரு மாதமும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில், மாவட்ட தலைநகரத்தில் கூடி, புகார் மனுக்கள் குறித்து, விசாரணை நடத்தும். 

புகார் மனுக்கள் அதிகமாக வந்தால், சி.இ.ஓ., வசதிக்கு ஏற்ப, கூடுதலாக சில நாட்கள், விசாரணை நடத்தவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


திருமங்கலம் செல்டன் நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஆனால், 6, 7, 8ம் வகுப்புக்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கு அங்கீகாரம் பெறவில்லை.

இதையடுத்து, திருமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆஷா மற்றும் அதிகாரிகள், நேற்று பள்ளியில் ஆய்வு செய்தனர். பின், 45 மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ்களை, பெற்றோர் சம்மதத்தோடு பெற்று, திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர்.

கல்வி அலுவலர் ஆஷா கூறுகையில், "மீண்டும் பள்ளி நிர்வாகம் இதே போல் தொடர்ந்து செயல்பட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு பரிந்துரை

தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.

குறிப்பாக கிராமங்கள் முதல் பெரும் நகரம் வரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளதால், பெரும்பலான பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர்.

அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெற்றோர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் அரசு முடிவு செய்தது.

நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளததை அடுத்து வரும், ஆண்டில் மாநிலம் முழுவதும் கூடுதல் ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளிகளை துவங்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment