ORIGIN OF SPECIES
உலகமே ஒரு பாதையில் பயணபட்டுக்கொண்டு இருந்தபோது, "இல்லை, இது தவறு!" என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது.
அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதறக் கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார் (அப்போது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). அப்பாவின் ஆலோசனைப்படி, இயற்கையியல் வல்லுநர் ஆனார்.
HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்தபோது பல்வேறு அற்புதங்களை கண்டார். பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார். சில அழிந்திருந்தன; அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார்.
பைபிள் சொன்ன ‘மனிதனை கடவுள் படைத்தார்’ என்பதில் இருந்து மாறுபட்டு, மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற அறிவியலின் கோட்பாடுகளில் ஒன்றான பரிணாமக்கொள்கையை ‘‘உயிரினங்களின் தோற்றம்’’ என்கிற தாளை வாலஸ் உடன் இணைந்து வெளியிட்டார்.
பரிணாமக் கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர்; இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள்; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் தான் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் தொடர்ந்து பேசினார். மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.
1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது).
2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி).
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில் பல்வேறு குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள்).
மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர், கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இன்றைக்கு தான் 153 ஆண்டுகளுக்கு முன் ORIGIN OF SPECIES என்கிற தன் ஆய்வுத்தாளை சமர்பித்தார்.
‘‘உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்’’ எனச் சொன்ன டார்வினின் பிறந்தநாள் இன்று (பிப்.12).
- பூ.கொ.சரவணன்
மழையின் வேண்டுதல்!
வருணபகவானிடம் மக்கள் எல்லோரும் சென்று மழை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு, ‘நீங்கள் அழைத்தால் நான் மழையாக வரமாட்டேன்’ என்று அவர் கூறினார். மக்களோ, ‘‘நாங்கள் எல்லோரும் வந்து வரம் கேட்கிறோம். ஏன் எங்களுக்கு வரம் தரமாட்டேன் என்கிறீர்கள்? எங்களைத் தவிர யார் வரவேண்டும்?’ என்று கேட்டனர்.
‘‘மரம், செடி, கொடிகள் எல்லாம் வந்து என்னை அழைத்தால் மட்டுமே வரம் தருவேன்’’ என்றார். அதற்கு, ‘‘அவற்றுக்கு வாய்ப்பேசத் தெரியாதே. அவை எப்படி உங்களை அழைக்கும்?’’ என்று கேட்டனர்.
‘‘நீங்கள் மரம், செடி, கொடிகளை எல்லாம் நட்டு, அழிக்காமல் வளர்த்து வந்தால் போதும். அவை தானாக என்னை அழைத்துப் பேசும். அப்போது நான் மழையாக வருவேன்’’ என்றார் வருணபகவான்!
புரியுதா?
- கே.விஜய் ஆனந்த்,
ராசிபுரம், நாமக்கல்
இன்று பிப்.12 : ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...
No comments:
Post a Comment