Tuesday, February 19, 2013

1.DOUBLE DEGREE JUDGEMENT

Latest 12 th Study Material for Vocational Subject
Latest 12th Minimum Study Material

Latest 10th Study Materials


Latest 10th Study Materials - 2013
  1. Tamil Paper 1 Minimum Material 
  2. Tamil Paper 2 Minimum Material 
  3. Social Science - Minimum Material 
Published By, 
CEO,SSA CEO, RMSA - Krishnagiri District.
Posted: 18 Feb 2013 04:12 PM PST
Posted: 18 Feb 2013 04:10 PM PST
Posted: 18 Feb 2013 03:47 PM PST


Latest 10th Study Materials - 2013
  1. Tamil Paper 1 Minimum Material 
  2. Tamil Paper 2 Minimum Material 
  3. Social Science - Minimum Material 
Published By, 
CEO,SSA CEO, RMSA - Krishnagiri District.

முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 
         தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை. 
 
       தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து , இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிந்துள்ள நிலையில், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு எழுதியோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாவரவியல் பாடம் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏப்ரல் இறுதியில் 3வது ஆசிரியர் தகுதி தேர்வு?




எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு

பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் படிப்பு, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று உத்தரவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பணி, பதவி உயர்வுக்கு இதை வேதியியல் படிப்புக்கு இணையான படிப்பாகக் கருத வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி-2010-11ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக நிலையுர்த்தப்பட்ட 218 பள்ளிகளுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் - வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறை - பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்பான விவரம் கோரி உத்தரவு.

பொது பணிகள் - கல்வித் தகுதிகள் - பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் (M.SC., INDUSTRIAL CHEMISTRY) பட்டத்தை முது அறிவியல் வேதியியல் (M.SC., CHEMISTRY) பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல்.

Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire, Fee Format and Enquiry Notice

உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

சிங்கம்புணரி வட்டாரத்தில் பிளஸ் 2,முடிக்கும் மாணவர்கள், கல்லூரி வசதியின்றி உயர்கல்வி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு ஆண், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர்,கிருங்காக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிரான்மலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.

இவை மட்டுமின்றி, உலகம்பட்டி, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, எஸ்.புதூரில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும்,கிராமப்புற பள்ளிகளில் பிளஸ் 2, முடித்து ஆயிரத்து 500 மாணவர்கள் வெளியேறுகின்றனர்.

இப்பகுதியில் அரசு, தனியார் கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் இல்லை. ஒரு தனியார் பாலிடெக்னிக், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மட்டும் உண்டு.

வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெற வெளியூர் அனுப்புகின்றனர். ஏழை மாணவர்கள் 25 கி.மீ.,தூரத்தில் உள்ள திருப்புத்தூர், 35 கி.மீ.,தூரத்திலுள்ள மேலைச்சிவபுரி கல்லூரிக்கு தினமும் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.

மாணவிகள், மேலூர், நத்தத்திலுள்ள கல்லூரிக்கு பஸ்சில் சென்று உயர் கல்வி பெறும் கட்டாயம் உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது. இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற சிங்கம்புணரியில் அரசு, தனியார் கல்லூரிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி

சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.
மனிதநேயம் பயிற்சி மையம், சமுதாயத்தில் ஏழை, எளிய பொருளாதாரத்தில், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த படித்த பட்டதாரிகளுக்கு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வருகிறது.

இதன் மூலம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, பல்வேறு பதவிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்-1, குரூப்-2 பதவிகளுக்கும், 2,125 பேர் தேர்வு பெற்று, தேசிய அளவிலும், மாநில அளவிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, நவம்பர் 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-2 தேர்வில், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற தேர்வர்களும் பங்கேற்றனர். தேர்வு முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

இதில், மனிதநேய மையத்தில் படித்த, 517 பேர் தேர்வு பெற்றுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு பெற்றுள்ள இவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.
உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப் பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் அடுத்து உள்ளது தாமனேரி. இங்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. படிப்பை இடையில் கைவிட்ட மாணவர்களை கண்டுபிடித்து, அந்த மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

மாணவ, மாணவியர் என, தனித்தனியே பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 49 மாணவியரும், 54 மாணவர்களும் படித்து வருகின்றனர். அவர்களின் வயதுக்கு ஏற்ற பாடம் சொல்லிக் கொடுக்கப்படும். அதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின், அவர்கள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். பயிற்சி காலத்தில், இந்த மாணவர்களுக்கு, உண்டு உறைவிடப் பள்ளியில் தங்குவது, கல்வி கற்பது, உணவு என, அனைத்தும் இலவசம்.

இவர்களுக்கு பால், காய்கறிகளுடன் கூடிய சத்தான உணவு சமைத்து தரப்படுகிறது. இதற்காக சமையலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வட்டார கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாணவர்களை குழுக்களாக பிரித்து, கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட வயது உள்ள மாணவர்களுக்குள் நட்பு வளர்கிறது. விவாதம் செய்து தக்க முறையில் பிரச்னையை ஆய்வு செய்யும் திறன் வளர்கிறது.

பயிற்சி காலமான, 18 மாதங்களில், முழு தேர்ச்சி பெற்று, சாதாரண பள்ளிகளில் பயில்வதற்கான தகுதியை அடைந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment