Monday, February 25, 2013


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 - கல்வி விழிப்புணர்வு நாடகம், கல்வி விழிப்புணர்வு பாடல் மற்றும் மெட்டுகள்

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்.

எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 76 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட் வழங்கப்படும்.

கணித திறமையை வளர்த்துக் கொள்ள....

உங்களின் குழந்தைகள் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேக இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக
அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.
கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது.

இணையதள முகவரி: www.mathplayground.com

இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.
கல்விச் சேவைக்காக விருதுபெறும் பேராசிரியர்

திருச்சி என்.ஐ.டி.டி., பேராசிரியரின் கல்வி சேவையைப் பாராட்டி தி இந்தியன் இன்டர்நேஷனல் பிரன்ட்ஷிப் சொசைட்டி, "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" பட்டத்தை வழங்கியது.
திருச்சி தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கோபி. இவர் தொழில் நுட்பத்துறையில் நான்கு நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் கல்விச் சேவையைப் பாராட்டி, புதுடில்லி இந்திய இன்டர்நேஷனல் சென்டரில் நடந்த பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயணசிங் "சிக்ஷா ரட்டன் புரஸ்கர்" விருதையும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் சயித் சிப்டி ரஷி "குளோரி ஆப் இந்தியா கோல்ட் மெடல்" விருதையும் வழங்கினர்.

இவர் எழுதிய புத்தகங்கள், கேம்பிரிட்ஜ் மஸ்ஸசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்க கல்வி நிறுவன நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹால்டிக்கெட் வழங்குவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி

"தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட் பெற, டி.பி.ஐ., வளாகத்தில், குவிந்தனர். ஒரே நாளில், அதிக மாணவ, மாணவியர் திரண்டதால், ஹால் டிக்கெட் பெற முடியாமல், அவதிக்குள்ளாயினர்.
மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, தத்கால் திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, நேற்றும், இன்றும், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 1000 மாணவ, மாணவியர் குவிந்தனர். இவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்க, நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தபோதும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, கூட்டம் திரண்டதால், ஹால் டிக்கெட் வழங்குவதில், பிரச்னை ஏற்பட்டது.

ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைக்க முயற்சித்தார். அது நடக்கவில்லை. இதனால், அவர் சோர்ந்துபோய், ஓரங்கட்டினார். கடைசி நேரத்தில், அவசரம், அவசரமாக ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்னைக்கு காரணம் என, தேர்வர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு, 300 பேர் வீதம், 4,5 நாட்கள் வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment