Thursday, February 14, 2013


அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


பி.லிட் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர மறுப்பு

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்.சி., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்எட் முடித்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தொலைதூரக் கல்வியில் எம். எட்., படிப்பை பல்கலைக்கழகங்கள் நிறுத்தின.
 
 இதனால் பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற பட்டப் படிப்புகளை படித்தனர். இதையடுத்து எம்எட் படிப்பை போல் எம்.பில்., பி.எச்.டி., முடித்திருந்தாலும் 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கலாம் என கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழாசிரியர்களில் சிலர் பிஎட் படிக்காமல், நேரடியாக பிலிட் தமிழ் முடித்துள்ளனர். அவர்களில் எம்ஏ முடித்தவர்களுக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அரசாணைப்படி எம்பில், பிஎச்டி முடித்த தமிழாசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு கேட்டு கல்வித்துறைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், பி.எட் படித்திருந்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என கூறி, தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை ஏற்க கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 
 இதனால் தமிழாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், கல்வித்துறை அதிகாரிகள் தேவையில்லாமல் பிஎட் படித்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறுகின்றனர். இதனால் பி.லிட் படித்த தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் அரசிடம் தெளிவான விளக்கம் பெற்று 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

14.2.2013 பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகாஞ்சிபுரம், பிப். 15:

சென்னை எவரெஸ்ட் ஏஜிஸ் நிறுவனத்தின் சார்பில் க்பெர்ட் அமைப்பு காஞ்சிபுரம் தொடக்கக்கல்வி இணைந்து 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி காஞ்சிபுரம் விஷ்ணு காஞசி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராபர்ட் வில்லியம் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை உமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அனைவருக்கும் கல்வி இயக்ககம் முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் இனிய செல்வி, ஆசிரியர்கள் அன்பழகன், ராஜன், கருத்தாளர்கள் சேகர், பழமலைநாதன், பாலாஜி, ஜெயகுமார், முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினர். காஞ்சிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அறிவியலின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களுக்கானவை கண்காட்சியில் வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் ஒன்றியம் விஷ்ணுகாஞ்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் கண்டுகளித்தனர்.

1 comment:

  1. mr dhilip

    reading then re doing
    this is education

    re doing may be
    writing,speaking,listening,making

    how is it

    ReplyDelete